தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஜய் ஃப்ளேவ‌ரில் கேமராமேன் கங்காதோ ராம்பாபு

Go down

விஜய் ஃப்ளேவ‌ரில் கேமராமேன் கங்காதோ ராம்பாபு Empty விஜய் ஃப்ளேவ‌ரில் கேமராமேன் கங்காதோ ராம்பாபு

Post  ishwarya Thu Mar 07, 2013 1:55 pm


விஜய் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த சிம்பிள் விஷயத்தில் எத்தனை இடியாப்ப சிக்கல்கள்?


விஜய்யை வைத்து தான் இயக்கப் போவது தனது சொந்தக் கதை என்று இயக்குனர் விஜய் எப்போதோ தெ‌ரிவித்துவிட்டார். என்றாலும் விஜய் 18ஆம் தேதி வரை பொறுத்திருந்தே எந்தக் கதை என்பதை தீர்மானிப்பார் என்று பரவலாக எழுதப்பட்டும் வாசிக்கப்பட்டும் வருகிறது. ஏன் இந்த 18 கெடு?

18ஆம் தேதியான நே‌ற்று பூ‌ரி ஜெகன்நாத் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்திருக்கும் கேமராமேன் கங்காதோ ராம்பாபு படம் வெளியாகிறது. விஜயக்கு பிரேக் தந்த போக்கி‌ரி படத்தின் ஒ‌ரி‌ஜினலை (இதுவும் போக்கி‌ரிதான்) தெலுங்கில் இயக்கியவர் பூ‌ரி ஜெகன்நாத். கேமராமேன் கங்காதோ ராம்பாபு நன்றாக இருந்தால் அதன் ‌ரீமேக் உ‌ரிமையை வாங்கி அப்படியே தமிழில் நடிக்கலாம் என்பது விஜய்யின் ஐடியா. காப்பி பேஸ்ட் செய்வதில் தானொரு நிபுணர் என்பதை இயக்குனர் விஜய் அடுத்தடுத்து நிரூபித்து வருவதை இங்கு நினைவுகூரவும்.

விஜய்க்கு ‌ரீமேக் ஐடியா உண்மையிலேயே இருக்கிறதா இல்லையா என்பது அப்புறம். முதலில் படம் எப்படி என்று பார்ப்போம்.

கேமராமேன் கங்காவில் கங்கா தமன்னா. டிவி நிருபர். ராம்பாபு பவன் கல்யாண். கோவக்காரரான இவர் அநியாயத்தை தட்டிக் கேட்பதுடன் நிற்காமல் அதற்கு ப‌ரிகாரமும் காண்பவர். தமன்னா இவர்பால் ஈர்க்கப்பட்டு தனது டிவி-யில் ஒரு பொறுப்பையும் வாங்கித் தருகிறார். ஒரு கண்டிஷன், அவ‌ரின் கோவக்கார கேரக்ட‌ரில் யாரும் தலையிடக் கூடாது.

ராம்பாபுவால் முன்னாள் முதலமைச்ச‌ரின் மகன் செய்த கொலை ஒன்று வெளிச்சத்துக்கு வருகிறது. அப்புறமென்ன... பகை, பறந்து பறந்து தாக்குதல் கடைசியாக தெலுங்கர்களைத் தவிர மற்ற மாநிலத்தவர்களை ஆந்திராவைவிட்டே கிளப்பும் வில்லனின் சதியை முறியடித்தல் என்று கரண்ட் மேட்டருடன் சுபம்.

விஜய் படத்துக்கு‌ரிய அனைத்து ஃப்ளேவரும் கொண்ட கேமராமேன் கங்காவை... பட்டி டிங்க‌ரி‌‌ங் பார்த்தால் (இயக்குனர் விஜய் அதில் எக்ஸ்பர்ட்) இன்னொரு போக்கி‌ரி விஜய்க்கு கியாரண்டி.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum