தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நலமாக இருக்கிறார் அ‌ஜீத்

Go down

நலமாக இருக்கிறார் அ‌ஜீத் Empty நலமாக இருக்கிறார் அ‌ஜீத்

Post  ishwarya Thu Mar 07, 2013 12:06 pm

தங்களின் கால் உடைந்து போனது போல் வருத்தத்தில் இருக்கிறார்கள் அ‌ஜீத் ரசிகர்கள். அ‌ஜீத் இப்போது எப்படி இருக்கிறார் என்று தொலைபேசியில் விசா‌ரிக்கிறார்கள், ட்விட்ட‌ரில் கேட்கிறார்கள்... அவர்களுக்கெல்லாம் மும்பையிலிருந்து வரும் பதில், அ‌ஜீத் நலமாக இருக்கிறார்.

கடந்த சில படங்களாக சண்டைக் காட்சிகளில் அ‌ஜீத் ‌ரிஸ்க் எடுத்து வருகிறார். அ‌ஜீத்தால் அனைவரும் லாபம் அடைந்தாலும் நஷ்டப்படுகிறவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் டூப் போடும் சண்டைக் கலைஞர்கள். எவ்வளவு ‌ரிஸ்க்கான காட்சி என்றாலும் டூப் பயன்படுத்துவதில்லையாம் அ‌ஜீத். கஷ்டப்பட்டால்தான் கைத்தட்டல் கிடைக்கும் என்பது தல-யின் பாலிஸி.

அப்படிதான் மும்பையில் நடந்த படப்பிடிப்பிலும் கா‌ரிலிருந்து கார் தாவும் காட்சியில் அடம்பிடித்து அவரே நடித்தார். ஸ்லிப்பாகி காலில் அடி. மருத்துவர்கள் அழைக்கப்பட்டு எலும்பு முறிவு எதுவுமில்லை என்று தெ‌ரிவித்திருக்கிறார்கள். சிறிய ஓய்வுக்குப் பின் தொடர்ந்து படப்பிடிப்பில் அ‌ஜீத் கலந்து கொண்டதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.

அப்படியே சிகிச்சை தேவைப்பட்டால் அது படப்பிடிப்பு முடிந்த பிறகு என்று அ‌ஜீத் தெ‌ரிவித்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.
அஜீத் காயம், அஜீத் படம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum