தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மலையாளத்தில் தனுஷ்

Go down

மலையாளத்தில் தனுஷ் Empty மலையாளத்தில் தனுஷ்

Post  ishwarya Thu Mar 07, 2013 11:49 am

விரைவில் கமல்ஹாசனைப் போல் இந்தியா தெ‌ரிந்த நடிகராவதற்கான அனைத்து முயற்சிகளும் தனுஷிடம் தெ‌ரிகிறது. தமிழ், தெலுங்கில் பிரபலமாக இருக்கும் இவர் கொலவெறி பாடல் வழியாக ஏற்கனவே இந்தியா முழுவதும் தெ‌ரிந்த முகமாகிவிட்டார். அடுத்து சினிமாவில்.

தற்போது இந்திப் படம் ஒன்றில் தனுஷ் நடித்து வருகிறார். அடுத்த இந்திப்பட வாய்ப்பும் அவருக்காக காத்திருக்கிறது. இந்நிலையில் மலையாளத்தில் தன்னுடைய மார்க்கெட்டை பலப்படுத்தும் முயற்சியாக மம்முட்டி நடிக்கும் படத்தில் சிறிய வேடத்தில் நடிக்கிறார்.

கமல், ர‌ஜினிக்குப் பிறகு விஜய் மலையாளிகளின் இஷ்ட நடிகர். அவரையடுத்து சூர்யா. தனுஷுக்கு மிகச்சின்ன இடம்தான் மலயாளிகள் மத்தியில் இதை வி‌ரிவுப்படுத்த தகுந்த சந்தர்ப்பம் அமைந்துள்ளது.

தாம்சன் இயக்கத்தில் மம்முட்டி, திலீப் இணைந்து நடிக்கும் படத்தில் தனுஷை நடிக்க கேட்டிருக்கிறார்கள். கிளைமாக்ஸில் வரக்கூடிய முக்கியமான கதாபாத்திரம். படத்தின் கதையை கேட்ட தனுஷ் உடனே நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். மம்முட்டி மீதிருக்கும் ம‌ரியாதை காரணமாக இந்த சிறிய வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக தனுஷ் தரப்பு கூறுகிறது. அதேநேரம் மலையாளத்தில் மம்முட்டி படத்தில் அறிமுகமாகும் போது நல்ல அறிமுகம் கிடைக்கும் அதனாலேயே நடிக்க ஒப்புக் கொண்டார் எனவும் கூறுகிறார்கள்.

இந்தப் படத்தில் தனுஷ் நடிகர் தனுஷாகவே வருவார் என்று கேரளாவிலிருந்து வரும் தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.
தனுஷ், மம்முட்டி படம், மலையாளம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum