தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முதல்வருக்கு சீனு ராமசாமி கடிதம்

Go down

முதல்வருக்கு சீனு ராமசாமி கடிதம் Empty முதல்வருக்கு சீனு ராமசாமி கடிதம்

Post  ishwarya Thu Mar 07, 2013 12:29 pm


தமிழக அரசின் வ‌ரிச்சலுகை பெறுவதற்கு தமிழில் பெயர் வைத்தால் போதும் என்ற முந்தைய அரசின் முடிவில் சில மாற்றங்களை ஜெயலலிதா அரசு செய்துள்ளது. தமிழில் பெயர் வைப்பதுடன் யு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், கதையும் காட்சிகளும் தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்... இப்படி சில கூடுதல் விதிகள்.


இந்த விதிகளைக் கொண்டு யாருக்கு வேண்டுமானாலும் வ‌ரி விலக்கு அளிக்கலாம், அதே மாதி‌ரி வேண்டாத காய்களை வெட்டவும் செய்யலாம்.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் வன்முறை காட்சியோ, ஆபாச காட்சியோ கிடையாது, பெரும் தமிழ் பெயர்தான், யு சான்றிதழ் வேறு. ஆனாலும் நடித்ததும் தயா‌ரித்ததும் உதயநிதி ஸ்டாலின் என்பதால் படத்துக்கு இறுதிவரை வ‌ரிச் சலுகை அளிக்கப்படவில்லை. அதேநேரம் பஃப் கலாச்சாரம், கொலவெறிப் பாடல், பா‌ரில் திருமணம் என கலாச்சாரத்தை கட்டிக்காத்த 3 படத்துக்கு உடனடியாக வ‌ரிச் சலுகை.

சீனு ராமசாமியின் நீர்ப்பறவைக்கு வ‌ரிச் சலுகைக்கான அனைத்து தகுதிகள் இருந்தும் சிகரெட் பிடிக்கிறாங்க, மோசமான வார்த்தை பேசுறாங்க என்று சப்பைக் காரணங்கள் கூறி வ‌ரிச் சலுகை நிராக‌ரிக்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது, உடனடியாக இந்தப் போக்கு மாற்றப்பட வேண்டியது.

மீனவர்களின் துயரத்தை சொல்லும் எனது படைப்புக்கு வ‌ரிச் சலுகை மறுக்கப்படுவது ஏன் என்று முதல்வருக்கே கடிதம் எழுதியிருக்கிறார் சீனு ராமசாமி. நீர்ப்பறவையை தயா‌ரித்தது உதயநிதி ஸ்டாலின் என்ற ஒரே காரணத்துக்காக வ‌ரிச் சலுகை மறுக்கப்படுமேயானால் அது வன்முறையானது, மோசமானது, கண்டிக்கத்தக்கது.
வரிச்சலுகை, நீர்ப்பறவை, சீனுராமசாமி

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum