வரி விலக்கு - சீனு ராமசாமி உண்ணாவிரதப் போராட்டம்
Page 1 of 1

நீர்ப்பறவை படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க முன்வராததை கண்டித்து அப்படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தயிருப்பதாக அறிவித்துள்ளார்.
சென்ற ஆட்சியில் தமிழில் பெயர் வைத்தாலே வரி விலக்கு கிடைத்து வந்தது. இந்த ஆட்சியில் தமிழ் பெயருடன் யு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என கூடுதலாக ஒரு விதியை சேர்த்தனர். ஆனால் இதெல்லாம் ஊர்க் கணக்கு உண்மை கணக்கு வேறாக இருக்கிறது.
தமிழில் பெயர் வைத்த, யு சான்றிதழ் பெற்ற ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்கு காரணமே இல்லாமல் வரி விலக்கு அளிக்க மறுத்தனர். அதே நேரம் பஃபில் திருமணம் செய்யும் காட்சிகளுடன் வந்த 3 படத்துக்கு உடனடியாக வரி விலக்கு அளிக்கப்பட்டது. உதயநிதியின் படம் என்பதால் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்கு வரி விலக்கு அளிக்க மறுத்துவிட்டனர் என பரவலாக பேசப்பட்டது. அதை நீர்ப்பறவை விவகாரம் உறுதி செய்துள்ளது.
மீனவர் பிரச்சனையை அடிப்படையாக வைத்து சீனு ராமசாமி இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் பெயர் சுத்த தமிழ், சென்சார் யு சான்றிதழ் தந்திருக்கிறது. ஆனால் வரி விலக்கை முடிவு செய்யும் அதிகாரிகள் சப்பை காரணங்கள் கூறி கேளிக்கை வரி விலக்கு தர மறுத்துள்ளனர். ரெட் ஜெயண்ட் சார்பில் உதயநிதி ஸ்டாலின் நீர்ப்பறவை படத்தை தயாரித்ததை தவிர இந்தப் படத்துக்கு வரி விலக்கு மறுப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.
இந்நிலையில் இது குறித்து முதல்வருக்கு கடிதம் எழுதினாராம் சீனு ராமசாமி. அத்துடன் நாளை - சனிக்கிழமை - சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் அல்லது ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தயிருப்பதாக சீனு ராமசாமி தெரிவித்தார். உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி கமிஷனர் அலுவலகம் வந்த அவர் இந்தத் தகவலை தெரிவித்தார்.
நீர்ப்பறவை வரி விலக்கு, சீனு ராமசாமி

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வைரமுத்து வரிகள் - நீக்கினார் சீனு ராமசாமி
» சீனு ராமசாமி இயக்கத்தில் விமல்
» முதல்வருக்கு சீனு ராமசாமி கடிதம்
» ஹீரோக்களுடன் கதை விவாதத்தில் சீனு ராமசாமி
» வர்ஷாவை ஏமாற்றிய சீனு ராமசாமி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum