தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கமலுக்கு தமுமுக தலைவரின் எச்சரிக்கையும், கண்டனமும்

Go down

கமலுக்கு தமுமுக தலைவரின் எச்சரிக்கையும், கண்டனமும்  Empty கமலுக்கு தமுமுக தலைவரின் எச்சரிக்கையும், கண்டனமும்

Post  ishwarya Thu Mar 07, 2013 11:47 am


விஸ்வரூபம் படத்தின் காட்சிகளில் ஆப்கானிஸ்தான் காட்டப்படுகிறது. அமெரிக்காவும் காட்டப்படுகிறது. இவை இரண்டையும் வைத்து இது இஸ்லாம் தீவிரவாதத்துக்கு எதிரான படம் என்றும் இஸ்லாமியர்களுக்கே எதிரான படம் என்று படம் பார்க்காமலே கதை சொல்கிறக்ர்கள். பிரஸ்மீட்டில்கூட அப்படியொரு கேள்வி எழுப்பப்பட, நான் அப்படி படம் எடுப்பேனா என்ற ஒரே வார்த்தையில் அத்தனை வதந்திகளையும் கமல் மறுத்தார். ஆனால் அவரை விட்டால்தானே.

FILE


மமுமுக தலைவர் ஜெ.எஸ்.ராபாயி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ஏறக்குறைய எச்சரிக்கை போலவே இருக்கிறது அதன் வார்த்தைகள்.

பிரபல திரைப்பட நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் என்ற படத்தை நடித்து இயக்கியிருக்கிறார். அதில் ஆப்கானிஸ்தான் போரை முன்னிலைப்படுத்தி கதை இருப்பதாகவும் அதில் முஸ்லிம்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் காட்சிகள் இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

கடந்த பல வருடங்களாக தமிழகத்தில் சிலர் தங்களின் பிழைப்புக்காகவும்இ வளர்ச்சிக்காகவும் முஸ்லிம்களை மட்டுமே குற்றவாளிகளாக சித்தரித்து படம் எடுத்து வருகிறார்கள். ஈராக்கில் 6 லட்சம் மக்களை கொன்ற அமெரிக்க பயங்கரவாதம் பற்றியோஇ 60 ஆண்டுகளுக்கு மேலாக பாலஸ்தீனர்கள் மீது இன அழிப்பை நடத்தி வரும் இஸ்ரேலின் பயங்கரவாதம் பற்றியோ யாருக்கும் படம் எடுக்க மனமில்லைஇ துணிவில்லை. இந்தியாவில் குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை தோலுரிக்க தைரியமில்லை.

எதிர்விளைவுகளையும் உலக அளவில் வஞ்சிக்கப்படும் சமூகத்தையும் மட்டுமே குறிவைத்து திரைப்படம் எடுப்பது இப்போது வழக்கமாகி வருகிறது.

கமல்ஹாசனின் திரைப்படமான விஸ்வரூபம் பற்றி மாறுப்பட்ட கருத்துகளும் சந்தேகங்களும் வலுத்துள்ளன அவர் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை சந்தித்ததன் பின்னணியும் இதுதான் என கூறப்படுகிறது.

இந்த சந்தேகங்களை போக்கை வகையில்இ இத்திரைப்படத்தை முஸ்லிம் பிரதிநிதிகளிடமும் மனிதஉரிமை ஆர்வலர்களிடமும் முதலில் திரையிட்டு காண்பித்து ஆட்சேபனைக்குரிய காட்சிகள் ஏதேனும் இருந்தால் அதை தவிர்த்துவிட்டு வெளியிட வேண்டும் என கோருகிறோம்.

இருக்கலாம், தோன்றுகிறது என்ற சந்தேகத்தின் பெயரில் இப்படி எச்சரிக்கை அறிக்கைவிடுவதும், சென்சாரைத் தாண்டி அவர்கள் சொல்லும் நபர்கள் பார்த்து சம்மதம் சொன்னால்தான் படத்தை வெளியிட வேண்டும் என்று அவர்களே ஒரு சென்சார் கமிட்டியை உருவாக்குவதும் கண்டிக்கத்தக்கது.

படத்தை சென்சார் பார்த்து யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. அதன்படி படத்தை வெளியிடும் எல்லா உரிமையும் படைப்பாளிக்கு உண்டு. படைப்பு வெளிவரட்டும். அதன் பிறகு ஆட்சேபத்துக்குரிய கருத்தோ, காட்சியோ இருந்தால் முறைப்படி சென்சாரிடம் முறையிட்டு அல்லது நீதிமன்றம் வழியாக அதற்கு தீர்வு காணட்டும். அதுதான் முறையான வழி. இப்படி எச்சரிக்கை அறிக்கைவிடுவதல்ல. இது கண்டிக்கத்தக்கது, கண்டிக்கிறோம்.
விஸ்வரூபம், கமல்ஹாசன், முஸ்லிம், அமெரிக்கா, தமுமுக

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum