கமலுக்கு அறிவுமதியின் கவுண்ட்டர்
Page 1 of 1
கமலுக்கு அறிவுமதியின் கவுண்ட்டர்
பிரசாத் லேபில் சுவாசமே படத்தின் பாடல் வெளியீட்டு விழா. அதிசயமாக விழா மேடையில் சீமான். இப்போதெல்லாம் தன்னை சினிமா விழாவுக்கே கூப்பிடுவதில்லை என்று சீமான் குறைபட்டுக் கொண்டார்.
அரசியல்வாதிகள் கலந்து கொண்டதால் பேச்சுக்களிலும் அரசியல் வாடை தூக்கல். தமிழில் நிறைய தமிழ்ப் படங்கள் வருகின்றன, ஆனால் தமிழர்களுக்கான படங்கள்தான் இங்கே இல்லை என்றார் அறிவுமதி. ஆதிக்க நாடுகளின் உளவாளிகள் தரும் கதையை சிலர் படமாக எடுத்து வெற்றி பெறுகிறார்கள் என கமலையும், விஸ்வரூபத்தையும் பெயர் குறிப்பிடாமல் கவிஞர் ஒரு இடி இடித்தார். அவர்களுக்கெல்லாம் தம்பி பாலா பரதேசியாக வந்து பதில் தருவார் என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டார்.
வெளிநாடுகளில் போய் இறங்கினால் ஊருக்குள்ளே அனுமதிக்காமல் அப்படியே சீமானை பேக்கப் செய்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிவிடுகிறார்கள். இதனை தனது பேச்சில் குறிப்பிட்ட சீமான் ஃபாரின் ரிட்டர்ன் என்கிறார்களே, உண்மையில் அது நான்தான் என்ற போது அரங்கில் கரகோஷம்.
சுவாசமே படத்தின் இயக்குனர் வினோத். இவர் பிரவீன்காந்தின் அசிஸ்டெண்ட்.
பிரவீன்காந்தின் அசிஸ்டெண்ட் எடுக்கும் விழாவில் சீமானும், அறிவுமதியும் இல்லாவிட்டால்தான் ஆச்சரியமே.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அறிவுமதியின் ஆல்பம்
» கமலுக்கு பதில் தனுஷா?!
» விஸ்வரூபம்: கமலுக்கு ரஜினி ஆதரவு
» கமலுக்கு ஆதரவாக பார்த்திபன் அறிக்கை
» விஸ்வரூபம் - கமலுக்கு ஆதரவாக திரையரங்குகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum