தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கார்த்தி, ஆர்யாவின் தீபாவளி ரிலீஸ்கள்

Go down

கார்த்தி, ஆர்யாவின் தீபாவளி ரிலீஸ்கள்  Empty கார்த்தி, ஆர்யாவின் தீபாவளி ரிலீஸ்கள்

Post  ishwarya Thu Mar 07, 2013 11:47 am

படங்கள் ரிலீஸ் செய்வதை கொண்டாடியது போய் படத்தின் ஸ்டில்கள், போஸ்டர்கள், புதிய டீஸர்கள் என உத்திகளை கொண்டாடும் அளவுக்கு நமக்கு கொண்டாட்ட மனப்பான்மை அதிகரித்திருக்கிறது. தீபாவளி பொங்கலுக்கு படத்தை வெளியிட முடியாதவர்கள் வரவிருக்கும் படத்தின் போஸ்டரை வெளியிடுகிறார்கள், சிலர் ட்ரெய்லர்கள்.

இந்த தீபாவளிக்கு கார்த்தி, ஆர்யா நடித்த படங்கள் வெளியாகவில்லை. அவர்கள் மட்டுமல்ல விஷக்ல், சூர்யா, விக்ரம், கமல், ரஜப்னி, தனுஷ், அஜித் என்று பல ஹீரோக்களின் படங்கள் வெளியாகவில்லை.

கமலுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால் தீபாவளியை கண்டு கொள்ளவில்லை. கோச்சடையான் - இரண்டாவது - போஸ்டர் வெளியிட இன்னும் ஒன்றிரண்டு மாதங்கள் ஆகும் என்கிறார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சனை. கார்த்தியும், ஆர்யாவும் விதிவிலக்கு.

கார்த்தியின் புதிய படம் பிரியாணியில் கெட்டப் மாற்றி நடிக்கிறாராம். இந்த கெட்டப்பை தீபாவளி தினத்தில் வெளியிடப் போவதாக வெங்கட்பிரபு அறிவித்திருக்கிறார்.

சேட்டை படத்தின் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. இதன் புதிய டீஸரை தீபாவளிக்கு வெளியிடுவதாக முடிவு செய்திருக்கிறார்கள். பொன் வைக்கிற இடத்தில் பூ வைக்கிற மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

இவர்கள் மட்டுமின்றி விஷாலும் சமர் படத்தின் ட்ரெய்லரை வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளி, சினிமா, தமிழ், கோலிவுட், கார்த்தி

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum