தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆர்யாவின் அடுத்தப் படம்

Go down

ஆர்யாவின் அடுத்தப் படம் Empty ஆர்யாவின் அடுத்தப் படம்

Post  ishwarya Sat Mar 02, 2013 6:05 pm

சேட்டை, ராஜா ராணி, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் என ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார் ஆர்யா. இவற்றையடுத்து ஆர்யா நடிக்கும் படத்தை மகிழ்திருமேனி இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கௌதம் வாசுதேவ மேனனின் முன்னாள் உதவியாளரான மகிழ்திருமேனி முன்தினம் பார்த்தேனே படத்தை இயக்கியதன் மூலம் சினிமாவில் தெரிய வந்தார். படம் சுமார். அதையடுத்து அருண் விஜய் நடித்த தடையற தாக்க படத்தை இயக்கினார். நனைந்த காகிதமாக கிடந்த அருண் விஜய்யின் மார்க்கெட்டை இப்படம் கொஞ்சம் நிமிரச் செய்தது. நல்ல ஆக்ஷன் படம் என தடையற தாக்க பெயர் வாங்கியது. அப்போதே முன்னணி நடிகர்களை வைத்து இனி படம் இயக்குவேன் என்றார் மகிழ்திருமேனி.

ஆர்யாவுக்கு அவர் கதைச் சொன்னதாகவும், கதை பிடித்து ஆர்யா நடிக்க சம்மதம் தெரிவித்ததாகவும் நம்பத்தகுந்த தகவல்கள் கோடம்பாக்கத்தில் உலவுகிறது. விரைவில் முறையான அறிவிப்பு வெளிவரலாம்
ஆர்யா, சேட்டை, ராஜா ராணி

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum