தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காலியாகும் கதாநாயகிகள் கூடாரம்

Go down

காலியாகும் கதாநாயகிகள் கூடாரம்  Empty காலியாகும் கதாநாயகிகள் கூடாரம்

Post  ishwarya Tue Mar 05, 2013 5:38 pm


இந்திப்பட மோகம் காரணமாக தெலுங்கு, தமிழில் நடிக்க முன்னணி நடிகைகள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாற்று பரவலாக கேட்கிறது.

சம்பளம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி என்றாலும் இந்தி என்றால் நடிகைகளுக்கு கொஞ்சம் ஸ்பெஷல். முதலாவதாக இவர்கள் அனைவரும் இந்திப் பேசும் பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள், இரண்டாவது இந்தி சினிமாதான் இந்திய சினிமா என்ற மயக்கம், மூன்றாவது இந்தி சினிமாவில் நடிப்பது ஆகப்பெரிய கௌரவம் என்ற எண்ணம்.


அசினைத் தொடர்ந்து காஜல் அகர்வால், தமன்னா, இலியானா என பலரும் இந்திக்கு படையெடுத்தனர். இதில் இலியானா தமிழ், தெலுங்குப் படங்களுக்கு கால்ஷீட் கிடையாது என்று கூறிவிட்டார். காஜல் அகர்வால் தேர்ந்தெடுத்து ஒன்று அல்லது இரண்டு படங்களில் மட்டுமே நடிக்கிறார்.

மகேஷ்பாபு படத்தில் ஒப்பந்தமாகி கடைசியில் அக்ஷய் குமாருடன் நடிப்பதற்காக மகேஷ்பாபு படத்துக்கு கல்தா கொடுத்த கதை நாடறிந்தது. இதில் லேட்டஸ்டாக தமன்னாவும் சேர்ந்திருக்கிறார்.

இவரின் ஹிம்மத்வாலா படம் வெளிவரும் முன்பே பல்வேறு கான்ட்ரவர்ஸிகளில் சிக்கி பிரபலமடைந்துள்ளது. வேறு பல இந்தி வாய்ப்புகளும் வருகின்றன. இதனால் ஒரேயொரு தெலுங்குப் படத்தை தவிர வேறு எதற்கும் புதிதாக கால்ஷீட் தரவில்லை இவர். தமிழில் இவருக்கு சுத்தமாக படங்களில்லை.


முன்னணி நடிகைகள் பாலிவுட் நோக்கி படையெடுப்பதால் இரு தென்னிந்திய மொழிகளிலும் - குறிப்பாக தெலுங்கில் கதாநாயகிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதேநேரம் இந்திக்கு படையெடுக்காத ஹன்சிகா போன்றோருக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன
காஜல், தமன்னா, நடிகைகள், தமிழ், சினிமா

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum