தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கமல் அலுவலகம்

Go down

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கமல் அலுவலகம் Empty வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கமல் அலுவலகம்

Post  ishwarya Tue Mar 05, 2013 5:18 pm

விஸ்வரூபம் படத்தின் முக்கிய காட்சிகள் துப்பாக்கி படத்தில் வந்துவிட்டன, துப்பாக்கிக்கு எதிர்ப்பு தெ‌ரிவித்த முஸ்லீம் அமைப்புகள் விஸ்வரூபம் படத்தை முடக்க முடிவு செய்துள்ளன. ஊடகங்கள் எழுதிய இந்த சர்ச்சைகளின் பின்னணியில் பார்த்தால் சம்பந்தப்பட்ட நபருக்கு குறைந்தபட்சம் நெஞ்சுவலியாவது வர வேண்டும். அப்படிதான் அந்த வாரமிருமுறை அரசியல் பத்தி‌ரிகை கமலுக்கு நெஞ்சுவலி என்று எழுதியது.

விஸ்வரூபம் படத்தைப் பற்றி எழுதிய சர்ச்சைகளைப் போலவே இந்த நெஞ்சுவலியும் கற்பனை, உண்மையில்லை என்று கமல் அலுவலகம் தெ‌ரிவித்துள்ளது.

அடுத்து இயக்கி நடிக்கயிருக்கும் ஹாலிவுட் படத்தில்தான் கமலின் கவனம் முழுவதும் உள்ளது. தனது ஹாலிவுட் என்ட்‌ரி பிரமாண்டமாக அமைய வேண்டும் என விரும்புகிறார். அதற்கு அவர் கையில் இருக்கும் துருப்புச்சீட்டு விஸ்வரூபம்.

ஹாலிவுட் நட்சத்திரங்களுக்கு தனது விஸ்வரூபத்தை திரையிட்டு காண்பிக்கும் முயற்சியில் இருக்கிறார் கமல்ஹாசன். இது அவர் எண்ணப்படி நடந்தால் அவருக்கு ஹாலிவுட்டில் நல்லதொரு விசிட்டிங் கார்டாக அமையும், அதேநேரம் விஸ்வரூபத்துக்கு உலக அளவில் விளம்பரமும் கிடைக்கும்.

நெஞ்சு நிறைய இந்தக் கனவுகளுடன் ஹாலிவுட்டில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த நேரத்தில் நெஞ்சுக்குள் வலி என்று அப்பத்தி‌ரிகை செய்தி வெளியிட்டது.

ஹாலிவுட் பி‌ரிமியர் ஷோ இந்த வதந்திக்கு நல்ல பதிலாக அமையும்.
விஸ்வரூபம், கமல் வதந்தி

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum