தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அடகு வைத்த வீட்டை மீட்டார் கமல்

Go down

  அடகு வைத்த வீட்டை மீட்டார் கமல்  Empty அடகு வைத்த வீட்டை மீட்டார் கமல்

Post  ishwarya Tue Mar 12, 2013 12:35 pm

கமல்ஹாசன் வீட்டை மீட்டு, மறுஅடகு வைத்தார். கமல் நடித்து இயக்கிய படம் ‘விஸ்வரூபம். ரூ.90 கோடி செலவில் இப்படத்தை இயக்கியதாக கமல் கூறினார். இப்படத்தை ரிலீஸ் செய்ய தடை விதித்தபோது பேட்டி அளித்த கமல்ஹாசன், ‘விஸ்வரூபம் படத்துக்கு எனது வீடு உள்ளிட்டவற்றை அடகு வைத்திருக்கிறேன். படம் ரிலீஸ் ஆகாவிட்டால் வீட்டை இழந்துவிடுவேன் என்று கூறினார். அதை கேட்டு அவரது ரசிகர்கள், காசோலைகளை கமலுக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே படத்தை ரிலீஸ் செய்ய விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.

இந்நிலையில் படத்துக்காக அடகு வைத்த வீட்டை கமல் மீட்டார். இது குறித்து அவர் கூறும்போது, ‘படத்தை தயாரிக்க எனது வீட்டை தனியாரிடம் அடகு வைத்திருந்தேன். இப்போது அதை மீட்டு தேசிய வங்கியில் அடகு வைத்திருக்கிறேன். விரைவில் அதை மீட்பேன். இதற்கிடையில் படம் நல்ல வசூலை ஈட்டி உள்ளது. அந்த வருமானம் இனிதான் எனக்கு வந்து சேரும். இப்படத்தின் மூலம் நான் பாடம் கற்றுக்கொண்டிருக்கிறேன். சொல்லப்போனால் ஒவ்வொரு படத்திலும் பாடம் கற்றிருக்கிறேன் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum