தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வதந்திக்கு முற்றுப்புள்ளி - இணையும் சமுத்திரக்கனி, சசிகுமார்?

Go down

வதந்திக்கு முற்றுப்புள்ளி - இணையும் சமுத்திரக்கனி, சசிகுமார்?  Empty வதந்திக்கு முற்றுப்புள்ளி - இணையும் சமுத்திரக்கனி, சசிகுமார்?

Post  ishwarya Mon Mar 04, 2013 6:07 pm

கேமராவும் லென்சுமாக இருந்த சசிகுமாரும், சமுத்திரக்கனியும் பிரிந்துவிட்டார்கள். போராளி தோல்வியால் நஷ்டத்தில் இருந்த சசிகுமாரிடம் கறாராக சம்பளத்தை வாங்கினார் சமுத்திரக்கனி, அதனால் நட்பை வைத்து படம் எடுத்தவர்களுக்குள் விரிசல் என கோடம்பாக்கம் செப்பியது. இதற்கு இருவருமே பதில் சொல்லாமல் மௌனம் காத்தனர்.

நிமிர்ந்து நில் படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கி வரும் சமுத்திரக்கனி அப்படம் முடிந்ததும் சசிகுமாரை நாயகனாக்கி அடுத்தப் படத்தை இயக்குகிறார் என தகவல் அடிபடுகிறது. இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் தயாரிக்கவிருப்பதாகவும் கேள்வி.

கர்நாடகாவில் சமுத்திரக்கனியின் படங்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமாரை வைத்து அவர் இயக்கிய படம் சமீபத்தில்தான் வெளியானது.

இந்தப் புதிய படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் இருவரும் இணையப் போவது உறுதி என்கிறார்கள்.

கணவன் மனைவி மாதிரி நண்பர்களும் சேர்ந்திருந்தால்தான் அழகு.
சினிமா, சசிகுமார், சமுத்ரகனி, நட்பு

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum