கடல் விருதுகளைப் பெறும் - ஜெயமோகன்
Page 1 of 1
கடல் விருதுகளைப் பெறும் - ஜெயமோகன்
மணிரத்னம் இயக்கியிருக்கும் கடல் படம் விருதுகள் பெறும் என எழுத்தாளர் ஜெயமோகன் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
கடல் படத்தின் கதை, வசனத்தை ஜெயமோகன் எழுதியுள்ளார். கொடைக்கானலில் உள்ள மணிரத்னத்தின் கெஸ்ட் ஹவுஸில் இரண்டு வாரங்கள் தங்கியிருந்து கடல் வசனத்தை எழுதியதாக படம் ஆரம்பித்த நேரம் ஜெயமோகன் குறிப்பிட்டிருந்தார். இதுவரை பணிபுரிந்த படங்களில் கடல் படத்தில்தான் ஜெயமோகன் அதிகளவு பங்களிப்பு செலுத்தியதாக அந்தப் பேட்டி தெரிவிக்கிறது.
மேலும் கடல் விருதுகள் பெறும் எனவும் அப்பேட்டியில் அவர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இடத்தில் ஒரு சின்ன இடைச்செருகல். கடல் படத்தின் கதையும், நீர்ப்பறவையின் கதையும் ஒன்று என்பதால் மணிரத்னம் குழப்பத்தில் இருப்பதாகவும், சில காட்சிகளை மாற்றி ஷூட் செய்யவிருப்பதாகவும் அப்படத்தில் பங்களிப்பு செலுத்திய பேரரசரின் இளவல் கவலை தெரிவித்திருக்கிறார். நீர்ப்பறவை படத்துக்கும் ஜெயமோகனே வசனம் எழுதியிருந்தார்.
முதலில் சுமூகமாகப் போன ஜெயமோகன், சீனு ராமசாமி உறவு ஜெயமோகன் கடல் படத்தில் பணிபுரிகிறார் என்று தெரிந்ததும் ஸ்ருதி மாறிப்போனது. ஜெயமோகன் நீர்ப்பறவை குறித்து எதுவுமே குறிப்பிடவில்லை. அதேபோல் சீனு ராமசாமியும். ஆடியோ வெளியீட்டிலும் ஜெயமோகன் பெயரை தனது பேச்சில் குறிப்பிட மறந்து, பேசி முடித்த பிறகே திடீரென ஞாபகம் வந்தவராக ஜெயமோகனுடன் இணைந்து நான் வசனம் எழுதியிருக்கிறேன் என்று குறிப்பிட்டார்.
நீர்ப்பறவையைப் போலவே கடற்கரையோரக் காதல்தான் கடல் படத்தின் கதையும். சைக்கிளுடன் இருக்கும் துளசியின் ஸ்டில்கள் நீர்ப்பறவை எஸ்தரை நினைவுப்படுத்துகின்றன.
இந்த ஒற்றுமை கடல் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது.
கடல், ஜெயமோகன், மணிரத்னம்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கடல் விருதுகளைப் பெறும் – ஜெயமோகன்
» கடல் விருதுகளை குவிக்கும்! எழுத்தாளர் ஜெயமோகன் நம்பிக்கை!!
» 6 - ஆறாக உருகும் ஜெயமோகன்
» மலையாளத்தில் ஜெயமோகன்
» 5 விருதுகளை அள்ளிய 'மங்காத்தா'!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum