மணிரத்னத்தின் மேடை கூச்சம்
Page 1 of 1
மணிரத்னத்தின் மேடை கூச்சம்
மணிரத்னம் இந்தியாவின் சிறந்த இயக்குனர். அவர் தமிழர் என்பதால் தமிழர்களுக்கு பெருமை. வட இந்தியாவை மையப்படுத்தி படங்கள் எடுத்தாலும் அதனை தமிழில் டப் செய்து வெளியிடுவார். அந்தளவுக்கு தமிழ்ப் பற்று கொண்டவர்.
தமிழ் மேடைகள் என்றால் மணிரத்னத்துக்கு கூச்சம். அதிகம் பேச மாட்டார். நன்றி என்று சுருக்கமாவும், நன்றி வணக்கம் என்றும் விரிவாகவும் பேசுவார். இவர் தற்போது கடல் என்ற படத்தை தமிழில் எடுத்திருக்கிறார். மேடை கூச்சம்... படத்தின் பிரஸ்மீட்கூட வைக்கவில்லை.
இந்நிலையில் இன்று ஹைதராபாத்தில் கடல் படத்தின் நாயகன், நாயகி அவர்களின் பெற்றோர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் சகிதம் விழா ஒன்றை மணிரத்னம் நடத்தினார். ஹீரோ, ஹீரோயின் அறிமுக விழாவாம். ரஹ்மான் பியானோ வாசித்து பாடினார். ஹீரோ, ஹீரோயின் பேசினார்கள். ஆச்சரியமாக மேடை கூச்சம் இன்றி மணிரத்னமும் அளவளாவினார், கூடவே அவரது மனைவி சுஹாசினி.
கடல் படத்தின் - தெலுங்கில் Kadali - ஹீரோ, ஹீரோயினை முதலில் தெலுங்கில் அறிமுகப்படுத்துவதில் பெருமையும், மகிழ்ச்சியும் கொள்வதாக மணிரத்னம் தெரிவித்தார். கடல் தமிழ்ப் படம் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்தாலும் மணிரத்னம் ஒரு இந்திய இயக்குனர் என்பதை நினைவில் கொள்க.
பாவம் செய்தவர்களுக்கு கடவுளின் தரிசனம் மங்கலாகவும், புண்ணியவான்களுக்கு நேரடியாகவும் தெரியுமாம். தமிழர்களுக்கு ஹீரோவின் தலைமுடி, பரந்த முதுகு என்று கிளிப்பிங்ஸ் காட்டிய மணிரத்னம் தெலுங்கில் ஆனந்த தரிசனத்துக்கு மனம் கனிந்திருக்கிறார்.
வாழ்க தமிழ், வாழ்க மணிரத்னம், வாழ்க அவரது மேடை கூச்சம்.
மணிரத்னம், கடல் தெலுங்கு, ரஹ்மான்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மணிரத்னத்தின் காதலி
» மேடை ஆட்டத்துக்கும் போட்டியா?
» பல்லில் கூச்சம் ஏற்படுவதற்கு என்ன காரணம்?
» மணிரத்னத்தின் கடல் பிளான்
» மணிரத்னத்தின் ‘கடல்’
» மேடை ஆட்டத்துக்கும் போட்டியா?
» பல்லில் கூச்சம் ஏற்படுவதற்கு என்ன காரணம்?
» மணிரத்னத்தின் கடல் பிளான்
» மணிரத்னத்தின் ‘கடல்’
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum