மேடை ஆட்டத்துக்கும் போட்டியா?
Page 1 of 1
மேடை ஆட்டத்துக்கும் போட்டியா?
மேடை நிகழ்ச்சிகளில் நடனம் ஆடி கல்லா நிரப்புவதில் மும்பை ஹீரோயின்கள் இடையே போட்டி நிலவுகிறது. குறிப்பாக 4 ஹீரோயின்கள் இந்த போட்டியில் குதித்துள்ளனர். நட்சத்திர இரவு, பட விருது விழாக்கள் என்றால் நடிகைகளின் நடன நிகழ்ச்சி தவிர்க்க முடியாததாகிவிட்டது. வெளிநாடு மற்றும் மும்பை உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும் சல்மான் கான், ஷாருக்கான் படங்களின் வெற்றி விழா, சினிமா விருது விழாக்களில் நிகழ்ச்சியின் தொடக்கமாகவும் இடையிடையேயும் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. படங்களில் ஹீரோயினாக நடிப்பதற்கு போட்டி போடுவதுபோல் இதுபோன்ற மேடைகளில் ஆடுவதற்கும் ஹீரோயின்கள் இடையே போட்டி நிலவுகிறது. கரீனா கபூர், கேத்ரினா கைப், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் ஆகியோருக்கு இடையேதான் கடும்போட்டி நிலவுகிறது. நிகழ்ச்சி நடத்துபவர்கள் முதல் முக்கியத்துவத்தை பிரியங்கா சோப்ராவுக்குதான் தருகின்றனர். அவர் நடனம் ஆடும் விழாக்களுக்கு டி.வி சேனல்கள் மத்தியிலும், ரசிகர்களிடையேயும் வரவேற்பு அதிகம். காலையில் படப்பிடிப்பு, மாலையில் மேடை நடனம் என்று இந்த ஹீரோயின்கள் பண பெட்டி நிரம்புகிறது. ஒரு ஆட்டத்துக்கு ரூ.80 லட்சம் முதல் ஒன்றேகால் கோடிவரை சம்பளம் பெறுகின்றனர். இது பற்றி விழா அமைப்பாளர் ஒருவர் கூறும்போது, "மேடைகளில் ஆடுவதற்கான முதல் தேர்வாக பிரியங்கா சோப்ரா கருதப்படுகிறார். இதற்காக அவர் எடுத்துக்கொள்ளும் ரிகர்சல், காஸ்டியூம் தேர்வு, நேரம் தவறாமை போன்ற கவனம்தான் காரணம். கத்ரினா, கரீனாவுக்கும் மவுசு உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடக்க விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கும் சினிமா முகங்களையே நாடிச் செல்வதால், நடிகைகள் காட்டில் மழைதான்" என்றார். எம்புட்டு சம்பாதிச்சாலும் பத்தாது போல...... என்ன பொழப்புடா....?!
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விவாத மேடை: 13-2-2013 இதழில் விவாத மேடை
» விஐய்யுடன் போட்டியா?- சிம்பு
» அஜீத்துடன் போட்டியா? – விஜய் பதில்
» விவாத மேடை:
» மணிரத்னத்தின் மேடை கூச்சம்
» விஐய்யுடன் போட்டியா?- சிம்பு
» அஜீத்துடன் போட்டியா? – விஜய் பதில்
» விவாத மேடை:
» மணிரத்னத்தின் மேடை கூச்சம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum