தங்க பஸ்பம்
Page 1 of 1
தங்க பஸ்பம்
தேவையான பொருட்கள்:
சுத்தமான தங்கம் = 10 கிராம்
முள்ளிக் கீரை = 10 கிராம்
சிவப்பு சித்திரப் பாலாடை = 10 கிராம்
அவுரி இலை = 10 கிராம்
ஆடாதோடை இலை = 10 கிராம்
புனுகு = 10 கிராம்
செய்முறை:
தங்கத்தை மெல்லிய காகிதம் போல் தகடுகளாகத் தட்டிக் கொள்ளவேண்டும். தட்டிய தகட்டை பீங்கான் பாத்திரத்தில் போட்டு 500 மி.லிட்டர் பசும் பாலை ஊற்றி 12 மணி நேரம் வெயிலில் வைத்து தகடுகளைத் தூய நீரில் கழுவித் துடைத்து மண் சட்டியில் போட்டு முள்ளிக் கீரை சாறு 500 மி.லிட்டர் ஊற்றி விறகடுப்பில் வைத்துச் சிறு தீயாக 15 நிமிடங்கள் எரித்து இறக்கி 24 மணி நேரங்கழித்து தகடுகளை மென்மையான அரத்தால் இராவி தூளாக்கிக் கொள்ளவேண்டும். அந்தத் தூளை கல்வத்தில் போட்டு 200 மி.லி முள்ளிக் கீரை சாற்றை சிறுகச் சிறுக விட்டு மெழுகு பதமாக அரைத்து வில்லையாகத் தட்டி நிழலில் உலர்த்தி எடுக்கவேண்டும்.
தட்டிய வில்லையை ஒரு மண் அகலில் வைத்து அகலால் மூடி வாயை 7 முறை சீலை மண் செய்து 80 செ.மீ உயரம் புடம் போடவும்.
புடம் ஆறியதும் மருந்தை எடுத்து மீண்டும் கல்வத்தில் போட்டு 200 மி.லி சிவப்புச் சித்தரப் பாலாடைச் சாற்றை ஊற்றி மெழுகு பதமாக அரைத்து அடை தட்டி உலர்த்தி முன் சொன்ன முறையில் புடம் போடவும்.
இப்படி மூன்று முறை புடம் போடவும். இப்படிப் புடம் போட்டு எடுத்த தங்க பஸ்பத்தை மீண்டும் கல்வத்தில் போட்டு சிறிது அளவு சித்திர பாலாடைச் சாற்றில் அரைத்து வில்லை தட்டிக் காய வைத்து எடுக்கவும்.
100 கிராம் எடையுள்ள கடம்பு இலையை அரைத்து தங்க வில்லைக்கு கவசம் செய்து நிழலில் உலர்த்தி எடுத்து முன் சொல்லிய படி புடம் போடவேண்டும்.
இப்படிச் செய்த பின் தங்கம் தூய்மையான வெண்ணீர் போலிருக்கும்.
தங்க பஸ்பம் உண்ண துணை மருந்துகள்:
15 கிலோ அவுரி இலையை சிறுக சிறுக இடித்து 5 கிலோ சாறு எடுத்து ஒரு பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி பாத்திரத்தின் வாயை கண்ணாடியால் மூடி கடும் வெயில் பல நாட்கள் வைத்து சாறு சுண்ட மெழுகு பதத்தில் எடுத்து நிறுத்திக் கொள்ளவேண்டும்.
சுண்டிய சாற்றின் எடைக்கு ஆடாதோடை இலையை அரைத்து சாற்றுடன் சேர்த்து கரைத்து அத்துடன் புனுகு 50 கிராம் சேர்த்து மெழுகு பதமாக அரைத்து எடுத்து பீங்கான் பாத்திரத்தில் மருந்தை வைத்து நிழலில் உலர்த்திய பின் எடுத்துக் கொள்ளவேண்டும்.
தீரும் நோய்கள்:
வெண் குட்டம், கருங்குட்டம், நரம்புக் குட்டம், மேகத் தொடர்பான நோய்கள், தோல் நோய்கள், கருங்கிரந்தி, ஆண்மைக் குறைவு, நரம்புத் தளர்ச்சி, பலக்குறைவு, பார்வைக்குறைவு, வயிறு தொடர்பான நோய்கள் முதலிய நோய்கள் குறையும்.
நோயுள்ளவர் மட்டும் தங்க பஸ்பம் உண்ணும் முறை:
2 அரிசி எடை தங்க பஸ்பத்தை 5 கிராம் எடை மெழுகில் நன்கு குழைத்துக் கொள்ளவேண்டும். காலை உணவுக்கு ஒரு மணி முன் ஒரு முறையும், மாலை 6 மணிக்கு ஒரு முறையுமாக 40 நாட்கள் மருந்தை சாப்பிடவேண்டும்.
உட்கொள்ளவேண்டியவைகள்:
துவரம் பருப்பு, பச்சைப் பருப்பு, மிளகு, சீரகம், பூண்டு, இளங்காய்கள், எலுமிச்சம் பழச்சாறு கலந்த ரசம், சாம்பார், மிளகுப் பொங்கல், வெந்நீர், தேன், பசு நெய் ஆகியவைகள் மருந்துண்ணும் நாட்களில் சாப்பிட வேண்டும்.
பத்தியம்:
மது வகைகள், பருப்பு வகைகள், கிழங்கு வகைகள், பூசணி, பரங்கி, மாமிச வகைககள், பழஞ்சோறு, குளிர்ந்த பானங்கள், வாழைத் தண்டு, புளிக்குழம்பு ஆகியவைகள் கண்டிப்பாக நீக்க வேண்டும்.
குறிப்பு:
2 அரிசி எடை தங்க பஸ்பத்தை ஒரு மேசைக் கரண்டி அளவு தேனில் குழைத்து காலை, மாலை உணவுககுப் பின் 40 நாட்கள் அருந்த வேண்டும்.
தங்க பஸ்பம் உண்டு வரும் நாட்களில் மலக்கட்டு ஏற்பட்டால் பசு நெய் கூட்டிக் கொள்ளவேண்டும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum