வெள்ளி பஸ்பம்
Page 1 of 1
வெள்ளி பஸ்பம்
தேவையான பொருட்கள்:
சரிகை வெள்ளி – 15 கிராம்
மணத்தக்காளிச் சாறு – 100 கிராம்
மகிழம்பூச் சாறு – 100 கிராம்
பிரம தண்டுச் சாறு
பசும் பால்
பசும் தயிர்
செய்முறை:
சரிகை வெள்ளித் தாள் கனத்தில் தகடாக தட்டிக் கொள்ளவும். கரி அடுப்பில் கனமில்லாத மண் ஓட்டை வைத்து அதன் மேல் வெள்ளித் தகட்டை வைத்து கரி அடுப்பை ஊதி சூடேற்றி தகடு நிறம் மாறியதும் எடுத்து மணத்தக்காளி சாற்றில் தோய்க்கவும். ஒரு முறை தகட்டை நனைக்க 200 மி.லிட்டர் சாற்றைப் பயன்படுத்தவும். 30 முறை இப்படிச் செய்யவும். 2 முறைக்கு ஒரு முறை சாற்றை மாற்றவும். வெள்ளி மடிந்து போகும் வரை சூடேற்றி சாற்றில் தோய்க்கலாம். சுத்தியான வெள்ளித் தகட்டை கல்வகத்தில் வைத்து மகிழம் பூச்சாற்றால் அரைத்து வில்லைத் தட்டி அகலில் வைத்து மூடி 7 முறை சீலை செய்து 4 சதுர அடி உயரமும், ஒண்ணரை அடி அகலமும் புடமிடவும். 7 முறை மகிழம் பூ சாற்றால் புடமிடவும். 3 முறை பிரம தண்டுச் சாற்றால் அரைத்து புடமிட்டு எடுத்து 12 மணி நேரம் அரைத்து, அரைத்துப் பொடியை துணியில் முடிந்து 3 நாட்கள் பசும் பாலில் ஊற வைத்து எடுத்து மூன்று நாட்கள் பசுந் தயிரில் ஊற வைத்து எடுத்து பத்திரப்படுத்தவும்.
உபயோகிக்கும் முறை:
காலையில் 3 அரிசி எடை, மாலையில் 3 அரிசி எடை ஒரு மேசைக் கரண்டி அளவு வெண்ணெயில் குழைத்து 40 நாட்கள் அருந்த வேண்டும்.
அரை தேக்கரண்டி அளவு அரிசி திப்பிலி சூரணத்தில் கலந்து அருந்த வேண்டும்.
தீரும் நோய்கள்:
இருமல், காசம், கபத் தொடர்பான இழுப்பு நோய்கள் குறையும். சூலைத் தொடர்பான நோய்களும் குறையும். பசு நெய்யில் குழைத்து அருந்தினால் கண் பார்வை மிகும். தேனில் குழைத்து அருந்தினால் எலும்புகள் பலமடையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum