மான் கொம்பு பஸ்பம்
Page 1 of 1
மான் கொம்பு பஸ்பம்
தேவையான பொருட்கள்:
மான் கொம்பு – 250 கிராம்
அகத்திக் கீரை சாறு – 250 கிராம்
தூதுவளைச் சாறு – 250 கிராம்
சோற்றுக் கற்றாழை – 200 கிராம்
செய்முறை:
மான் கொம்பை சிறு துண்டுகளாக வெட்டி கல் உரலில் போட்டு இடித்து மண் சட்டியில் போட்டு 500 மி.லிட்டர் அகத்திக் கீரைச் சாற்றை விட்டு 24 மணி நேரம் மூடி வைத்து விறகடுப்பில் வைத்து 30 நிமிடங்கள் கொதிக்க வைத்து சாற்றை விலக்கி மருந்தை எடுத்து துணியில் பொட்டலங்கட்டி சோற்றுக் கற்றாழைச் சோறு 200 கிராம் மண் சட்டியில் போட்டு பொட்டலத்தை வைத்து 12 மணி நேரம் மூடி வைத்திருந்து எடுத்து மருந்தைக் கல்வகத்தில் வைத்து தூதுவளைச் சாறு 250 மி.லிட்டர் சிறுகச் சிறுக விட்டு அரைத்து வில்லை தட்டிக் கொள்ளவேண்டும். மருந்தை மண் அகலில் வைத்து மண் அகலை மூடி 7 முறை சீலை மண் செய்து 2 சதுர அடி உயரம் புடமிடவும். புடமிட்ட மருந்தைக் கல்வகத்தில் 12 மணி நேரம் அரைததுக் கொள்ள வேண்டும்.
உபயோகிக்கும் முறை:
ஒரு வேளைக்கு 5 அரிசி எடை வீதம் நாளைக்கு இரண்டு வேளை (காலை, மாலை) 40 நாட்கள் பயன்படுத்தலாம். இரண்டு மேசைக் கரண்டி அளவு பசு நெய்யில் குழைத்து அருந்த சூடு தணியும், இருமல் குறையும், நீர் எரிச்சல் குறையும். ஒரு மேசைக் கரண்டி தேனில் குழைத்து குடித்து வந்தால் மார்பு வலி, பித்த எரிச்சல், மூச்சுத் திணறல் குறையும்.
50 மி.லிட்டர் பசும் பாலில் கலந்து குடித்து வந்தால் உடல் இளைப்பு குறையும். கணைச் சூடு தணியும். உடல் வலிவு ஏற்படும். ஒரு மேசைக் கரண்டி பசு வெண்ணெய் கலந்து குடித்து வந்தால் முகம் பொலிவு பெறும். வறட்சி நீங்கும். சொறி முதலிய நோய்கள் குறையும்.
ஒரு கோழிமுட்டையின் வெண்கருவில் கலந்து குடித்து வந்தால் காசம்,சுவாச காசம் குறைந்து உடல் நலம் பெறும்.
சுக்கு, மிளகு, திப்பிலி சூரணத்துடன் கலந்து குடித்து வந்தால் முத்தோஷங்களும் குறையும்
தீரும் நோய்கள்:
மார்பு வலி, நீர் எரிச்சல், வெள்ளைப் படுதல், பெருந்தாகம், கைகால் எரிச்சல், கண் நோய்கள், உடல் சூடு, இருமல், பித்த எரிச்சல், மூச்சுத் திணறல், கணைச் சூடு, காசம், சுவாச காசம் ஆகிய நோய்கள் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum