மருந்துக்கு கட்டுப்படாத எச்ஐவி தொற்று அதிகரிக்கிறது
Page 1 of 1

மருந்துக்கு கட்டுப்படாத எச் ஐ வி தொற்று கிழக்கு
ஆப்பிரிக்காவில் வேகமாக அதிகரித்துவருவதாக உலக சுகாதாரத்துறையின் ஆய்வு
எச்சரித்திருக்கிறது.
உலக
சுகாதார நிறுவனமும் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியும் இணைந்து செய்த ஆய்வின்
படி கிழக்கு ஆப்ரிக்காவில் எச் ஐ வி வைரஸானது வேகமாக மருந்துக்கு
கட்டுப்படாத தன்மையை அடைந்துவருவதாக தெரிய வந்திருக்கிறது.
உதாரணமாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற பொருளாதார
ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகளில் எச் ஐ வி தொற்றுக்குள்ளானவர்களில்
சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே மருந்துக்கு
கட்டுப்படாத தன்மை காணப்படும்.
அனால் கிழக்கு ஆப்ரிக்காவில் இப்படியானவர்களின்
சதவீதம் 29 சதவீதமாக இருப்பதை கண்டுபிடித்த ஆய்வாளர்கள் இது ஆண்டுக்கு
ஆண்டு வேகமாக அதிரித்துக்கொண்டிருப்பதாகவும் கண்டறிந்திருக்கிறார்கள்.
இந்த போக்கு இப்படியே போனால், கடந்த பத்து
ஆண்டுகளாக எயிட்ஸ் மரணங்கள் தொடர்ந்து குறைந்துகொண்டே வரும் நிலைமை மாறி,
மீண்டும் எயிட்ஸ் மரணங்கள் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாகவும் இந்த ஆய்வை
மேற்கொண்டவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
இவர்களின் எச்சரிக்கையில் உண்மை இருக்கிறது
என்கிறார் தமிழ்நாடு எயிட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தின் எச் ஐ வி
மருந்துகளை கையாளும் சிறப்பு நிபுணர் மருத்துவர் வளன். எயிட்ஸ் நோயை
தோற்றுவிக்கும் எச்ஐவி வைரஸுக்கான முறையான மருந்துகளை, சரியான நேரத்தில்
சாப்பிடாமலிருப்பது எச் ஐ வி வைரஸின் தீவிரத்தன்மையை அதிகப்படுத்திவருகிறது
என்கிறார் அவர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உலகில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கிறது: ஐ எல் ஓ
» இந்தியாவில் சிறார் பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிக்கிறது"

» சட்டவிரோத காண்டாமிருக வேட்டை அதிகரிக்கிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum