தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உலகில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கிறது: ஐ எல் ஓ

Go down

உலகில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கிறது: ஐ எல் ஓ Empty உலகில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கிறது: ஐ எல் ஓ

Post  meenu Mon Mar 11, 2013 4:31 pm

உலக அளவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருவதாக சர்வதேச தொழிலாளர் நலன் பாதுகாப்புக் கழகமான ஐ எல் ஓ தெரிவித்துள்ளது.

பல நாடுகளிலும் பொருளாதார சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் மேலும் பலர் வேலை இழக்கின்றனர் என்று அது குறிப்பிடுகிறது.

உலக அளவில் சென்ற ஆண்டு வேலையில்லாதோர் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டு எண்ணிக்கையில் இருந்து 40லட்சம் அதிகரித்து தற்போது 19 கோடியே 70 லட்சமாக உள்ளது.

உலக தொழிலாளர் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட ஆறு சதவீதமானோர் வேலையின்றித் தவிப்பதை இந்த எண்ணிக்கை காட்டுகிறது.

24 வயதுக்கும் குறைவானவர்களுக்கே வேலை கிடைப்பது அதிக சிரமமாக உள்ளது.

இந்த வயதில் உள்ளவர்களில் சுமார் 13 சதவீதம் பேர் வேலையும் இல்லாமல், வேலைப் பயிற்சியும் இல்லாமல், படிக்கவும் செல்லாமல் இருக்கின்றனர் என்று ஐ எல் ஓ கூறுகிறது.

நீண்ட காலமாக வேலை இல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும், ஐரோப்பாவில் வேலையில்லாமல் இருப்பவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஒரு வருடத்துக்கும் மேலாக வேலை கிடைக்காமலே இருந்துவருகின்றனர் என்று அது சுட்டிக்காட்டுகிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum