தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆஸ்கர் பிஸ்டோரியஸ் வீட்டில் அலறல் சத்தம் கேட்டது'

Go down

ஆஸ்கர் பிஸ்டோரியஸ் வீட்டில் அலறல் சத்தம் கேட்டது' Empty ஆஸ்கர் பிஸ்டோரியஸ் வீட்டில் அலறல் சத்தம் கேட்டது'

Post  meenu Sat Mar 02, 2013 12:43 pm

தென் ஆப்பிரிக்க பாரலிம்பிக் வீர்ர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ்சின் பிணை மனு மீதான தீர்ப்பு வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கர் பிஸ்டோரியஸ்சின் பெண் நண்பர் ரீவா ஸ்டீன்கேம்ப் கொல்லப்பட்ட இரவு ஆஸ்கர் பிஸ்டோரியஸ்சின் வீட்டில் ஒரு பெண் அலறும் சத்தமும், துப்பாக்கிச் சுடும் சத்தமும் அதன் பிறகு மீண்டும் பெண் கத்துவதும் கேட்டதாக நீதிமன்றத்தில் சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வீட்டில் சத்தமான வாக்குவாதம் நடைபெற்றதாக மற்றொருவர் கூறியதாகவும் ஆனால் குறுக்கு விசாரணை செய்த போது சம்பவம் நடந்த சமயம் அவர் வீட்டில் இருந்து நூற்றுக்கணக்கான மீட்டர் தொலைவில் இருந்ததாகத் தெரிய வந்துள்ளதாக புலனாய்வு அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வீட்டில் திருடன் நுழைந்துவிட்டதாக எண்ணியே தாம் சுட்டதாகவும் வேண்டுமென்றே தனது பெண் நண்பர் ரீவா ஸ்டின்கேம்பை கொல்லவில்லை என்றும் பிஸ்டோரியஸ் கூறிவருகிறார்.

ஆஸ்கர் பிஸ்டோரியஸ் கூறுவது பொய் என்று நிருபிக்கக் கூடிய எவ்விதமான தடயங்களும் இதுவரை கிடைக்கவில்லை என்று புலனாய்வு அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதே நேரம் வெளிநாடுகளில் வங்கிக் கணக்குகளையும், சொத்துக்களையும் வைத்திருப்பதாகத் தெரியும் ஆஸ்கர் பிஸ்டோரியஸ்சுக்கு பிணை வழங்கக் கூடாது என்றும் விசாரணையாளர்கள் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கொலைக் குற்ற சந்தேகத்தின் பேரில் பாராலிம்பிக் சாம்பியன் ஆஸ்கர் பிஸ்டோரியஸ் கைது
» உலகே வியந்த கணித மேதை ராமானுஜன் தனக்கு வேண்டும் என்று கேட்டது என்ன தெரியுமா?
» என்ன சத்தம் அந்த நேரம்..? பெண்கள் சத்தம் போடுவது ஏன்?
» 85 - வது ஆஸ்கர் விழா: "ஆர்கோ' படத்துக்கு ஆஸ்கர் விருது
» கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதைக் கேட்டு பிஸ்டோரியஸ் அழுதார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum