தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உலகே வியந்த கணித மேதை ராமானுஜன் தனக்கு வேண்டும் என்று கேட்டது என்ன தெரியுமா?

Go down

உலகே வியந்த கணித மேதை ராமானுஜன் தனக்கு வேண்டும் என்று கேட்டது என்ன தெரியுமா?  Empty உலகே வியந்த கணித மேதை ராமானுஜன் தனக்கு வேண்டும் என்று கேட்டது என்ன தெரியுமா?

Post  ishwarya Mon Feb 18, 2013 1:19 pm

இன்றைக்கு ஒரு பள்ளி மாணவனுக்கோ அல்லது கல்லூரி மாணவனுக்கோ படிப்பதற்குரிய சௌகரியங்களுக்கும் அடிப்படை வசதிகளுக்கும் வீட்டிலோ வெளியிலோ எந்த பஞ்சமும் இல்லை. அரசாங்கமே அனைவருக்கும் லேப்டாப் வேறு தருகிறது. சோற்றுக்கோ சுகத்துக்கோ பஞ்சமில்லை. சோறு சலித்தால் இருக்கவே இருக்கிறது கே.எப்.சி. & பீட்சா ஹட். அம்மா தரும் காபி சலித்தால் இருக்கவே இருக்கிறது காஃபி டே. கேளிக்கைக்கும் பஞ்சமில்லை. தொலைகாட்சி சலித்தால் இருக்கவே இருக்கிறது மல்டிப்ளெக்ஸ்.

மொபைல் ஃபோன் வடிவத்தில் ஒரு சினிமா தியேட்டரே நமது கைகளில் தவழ்கிறது. காமிராவிலிருந்து ஆப்பிள் ஃபோன், ஐபாட் வரை எதற்கும் பஞ்சமில்லை.

ஆனால் இத்தனை சௌகரியங்களையும் அனுபவித்துக்கொண்டு நாம் செய்வது என்ன? நாட்டையும் வீட்டையும் அரசியல் அமைப்புக்களையும் ஒரு பக்கம் குறை சொல்லிக்கொண்டு மறுபக்கம் வெட்டிப்பேச்சில் வீண் அரட்டையில் பொழுதை போக்கி நேரத்தையும் வீணடிப்பது ஒன்றே வேலையாக இருக்கிறது… லட்சியமாகவும் இருக்கிறது.

‘நமக்கு இதெல்லாம் வேண்டாம்பா’ என்று ஒதுங்கியிருக்கும் சிலர் கூட தங்கள் அறிவையும் ஆற்றலையும் தமது குடும்ப நலனுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்களே அன்றி அதற்கு மேல் சிறிதும் சிந்திப்பதில்லை.

நாம் பிறந்தது அதற்காகவா? ?

எல்லாரும் கிளம்புங்க. நாட்டை திருத்துங்கன்னு நான் சொல்லலே. நம்மோட சேர்த்து ஒரு நாலு பேரை திருத்தினாலே போதும்.

நாம் இன்று சர்வ சாதரணமாக அனுபவிக்கும் சௌகரியங்கள் ஒரு சிலருக்கு எப்படி கிடைப்பதர்க்கரிய விஷயங்களாக இருந்தது என்பதை நினைக்கும்போது மனசாட்சி உறுத்துகிறது.

மின்சாரமின்றி நம்மால் ஒரு மணிநேரம் கூட இருக்கமுடியவில்லையே… அந்தக் காலத்தில் சாதனையாளர்கள் பள்ளி செல்லும் நாட்களில் எத்தனை கஷ்டப்பட்டிருப்பார்கள்?

பாரதி… ராமானுஜம்… இவர்களை போன்றவர்களை இறைவன் செல்வந்தர்களாக படைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை குறைந்த பட்சம் பசித்தால் சாப்பிட சோறு கிடைக்கும் நிலையிலாவது படைத்திருக்கக்கூடாதா? ஒரு வாய் சோறு பாரதிக்கும் ராமானுஜத்துக்கும் கொஞ்சம் கூடுதலாக கிடைத்திருந்தால் இன்னும் எத்தனை எத்தனையோ பொக்கிஷங்களை அவர்கள் இந்த உலகிற்கு தந்திருப்பார்களே…..ஏன் கிடைக்கவில்லை? இவர்களுக்கு அப்படி செய்தததன் மூலம் நமக்கு ஏதாவது சொல்ல வருகிறானா இறைவன்? இங்கே தான் இறைவனை புரிந்துகொள்ளமுடியாது தவிக்கிறேன்.

இன்றைக்கு (DEC 22) கணித மேதை ராமானுஜன் அவர்களின் பிறந்தநாள். இன்றைய கல்லூரி மாணவர்கள் எத்தனை பேருக்கு அவரை தெரியும் என்று தெரியாது.

ஏ.டி.எம். இயந்திரம் நாம் கார்டை சொருகியவுடன் பணத்தை தருகிறதே… ராமானுஜம் கண்டுபிடித்த தேற்றத்தின் அடிப்படியில் தான் அது இயங்குகிறது என்பது தெரியுமா?

பள்ளி செல்லும் நாட்களில் சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு, தினமணிக் கதிரில் ரகமி எழுதிய ராமனுஜன் பற்றிய தொடரை படித்திருக்கிறேன். வியந்திருக்கிறேன். இதோ தற்போது மீண்டும் படிக்கிறேன். என்னையுமறியாமல் பல இடங்களில் அழுதே விட்டேன். மிகையல்ல. படித்துப்பாருங்கள். புரியும்.

உலகமே கொண்டாட வேண்டிய ஒரு மாபெரும் கணித மேதை எப்படி வாழ்ந்தார் என்பதை படியுங்கள். இன்றைக்கு அனைத்து சௌகரியங்களும் கிடைக்கப்பெற்றுள்ள நம் மாணவர்கள் நம் சகோதரர்கள் நம் பிள்ளைகள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று சிந்தியுங்கள்.

நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டாம்… குறைந்த பட்சம் ஒவ்வொருவரும் அவர்களது வீட்டுக்காவது பெருமை சேர்க்கும் விதத்தில் அவர்களின் செயல்பாடு அமைந்திருக்கிறதா என்று சிந்தியுங்கள்… என்ன சொல்ல?

உங்களுக்கு தெரிந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இந்த பதிவை அனுப்புங்கள். இதை படித்த பின்பு ஒருவர் மனதில் மாற்றம் ஏற்பட்டு அவர்கள் அனுபவித்து வரும் சௌகரியங்களின் அருமையை அவர்கள் உணர்ந்து நடந்துகொண்டாலே அந்த புண்ணியம் உங்களுக்குத் தான்.

கீழே நண்பர் ஒருவரின் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்ட ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறு மற்றும் இதர விஷயங்களை தந்திருக்கிறேன்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
தமிழனை தலை நிமிர வைத்த கணிதமேதை ஸ்ரீனிவாச இராமானுஜன் – எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தார்?

(http://ajmal-mahdee.blogspot.in/2012/03/blog-post_10.html)

சீனிவாச இராமானுஜன் அவர்கள் 1887 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் நாள் ஈரோட்டில், சீனிவாச அய்யங்கார் கோமளத்தம்மாள் தம்பதியினருக்கு மகனாய்ப் பிறந்தவர். 33 ஆண்டுகளே வாழ்ந்த போதிலும், தனது கணிதத் திறமையால் உலகையே வியப்பில் ஆழ்த்தியவர், தூய கணிதத்தின் கருவூலம்.

இராமானுஜன் தன் குறுகிய வாழ்க்கைக் காலத்திலேயே 3900 க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தவர். சிறு வயதிலேயே யாருடைய உதவியும், வழி காட்டுதலும் இன்றி வியப்பூட்டும் வகையில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுபிடித்தவர்.

இராமானுஜன் பிறந்தது முதல். இராமானுஜனின் நிழல் போல், ஒட்டி உறவாடி வாட்டி வதைத்தது வறுமையே ஆகும். வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்த இராமானுஜனின் உண்மை நிலையை உணர்த்துவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

இராமானுஜனின் தந்தை சீனிவாச அய்யங்கார், கும்பகோணத்தில் உள்ள ஜவுளிக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரது மாத ஊதியம் ரு.20 ஆகும். இராமானுஜனின் தாயார்

கோயில்களில் பஜனைப் பாடல்களைப் பாடுவதன் வாயிலாக மாதம் ருபாய் 10 சம்பாதித்து வந்தார்.குடும்பமே போதிய வருமானமின்றித் தவித்தது. பல நாட்கள் உண்ண உணவின்றித் தண்ணீரை மட்டுமே குடித்து வளர்ந்தவர் இராமானுஜன்,

ஒரு நாள் இராமானுஜன் பள்ளிக்குச் செல்வதற்கு முன் உணவுத் தட்டுடன் சாப்பிடத் தயாரானான். ஆனால் தாய் கோமளத்தம்மாளோ, அய்யா சின்னசாமி அம்மா எப்படியும் மாலைக்குள் அரிசி வாங்கி சமைத்து வைக்கிறேன் இரவு சாப்பிடலாம். அதுவரை பொறுத்துக் கொள் என வேண்டினாள். இராமானஜனோமறு வார்த்தை பேசாமல் இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு. அம்மா நான் பள்ளிக்குச் சென்று வருகிறேன் என்று கூறி பள்ளிக்குச் சென்று விட்டான்,

ஆனால் அன்று மாலை பள்ளியில் இருந்து இராமானுஜன் வீடு திரும்ப வில்லை, கவலையில் கண்ணீர் விழிகளுடன் கோமளத்தம்மாள் இராமானுஜனைத் தேட ஆரம்பித்தாள், எங்கு தேடியும் காணவில்லை. அச்சமயம் இராமானுஜனின் நண்பன் அனந்தராமனின் தாயார் அங்கு வந்து விசாரிக்க, இராமானுஜனைக் காணவில்லை எனக் கூறி, தன் மகன் காலையும் சாப்பிடவில்லை, மதியமும் சாப்பிடவில்லை, மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை எனக் கூறி அழத் தொடங்கினாள், கோமளத்தம்மாளை சமாதானம் கூறி வீட்டில் அமரவைத்து விட்டுத் தானும்,அனந்தராமனும் ஆளுக்கொரு பக்கமாக இராமானஜனைத் தேடத் தொடங்கினர்.

அனந்தராமன் பல இடங்களில் தேடி அலைந்தான். எங்கும் இராமானுஜனைக் காணவில்லை, திடீரென்று அனந்தராமனுக்கு ஒரு சந்தேகம். ஒரு வேளை சாரங்கபாணிக் கோயிலுக்குச் சென்றிருப்பானோ? என்று. உடனடியாக கோயிலுக்குச் சென்று தேடினான், கோயிலின் ஒரு மண்டபத்தில் கணக்குப் புத்தகங்களைத் தலைக்கு வைத்துக் கொண்டு இராமானுஜன் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் படுத்திருந்த தரை முழுவதும் சாக்கட்டியால் கணக்குகள் போடப்பட்டிருந்தன, அனந்தராமன் அவனைத் தட்டி எழுப்பினான், திடுக்கிட்டு எழுந்த இராமானுஜன், என்ன அனந்தராமா அதற்குள் எழுப்பிவிட்டாயே, நேற்று நமது கணக்கு வாத்தியாருக்கே விடை கண்டுபிடிக்கத் தெரியாத. அந்தக் கணக்கை நான் மனதிலேயே போட்டுப் பார்த்தேன். போட்டு முடிப்பதற்குள் எழுப்பிவிட்டாயே, என்றவன், இரு கனவில் நான் போட்ட பாதிக் கணக்கையாவது இந்த நோட்டில் எழுதிவைத்துவிட்டு வருகின்றேன் என்று கூறி எழுதத் தொடங்கினான்,

எழுதி முடித்தவுடன் அனந்தராமன், இராமானுஜனைத் தன்வீட்டிற்கே அழைத்துச் சென்றான், இராமானுஜனைக் காணாமல் அனந்தராமனும் சாப்பிடாமல் இருக்கின்றான் என்ற செய்தியைக் கூறி, அனந்தராமனின் தாயார் தன் வீட்டிலேயே இராமானுஜனுக்கும் உணவிட்டாள்,

இராமானுஜன் கணிதத்தில் மட்டுமே கவனம் செலுத்தியதால் கும்பகோணம் அரசு கல்லூரியிலும், தொடர்ந்து சென்னை பச்சையப்பா கல்லூரியிலும் கணிதத்தைத் தவிர மற்ற பாடங்களில் தோல்வியையே சந்தித்தார்,

இராமானுஜனின் இல்லம்

1910 ஆம் ஆண்டு இறுதியில் இந்தியக் கணிதவியல் கழகத்தின் செயலாளர் இராமச்சந்திர ராவ் அவர்களை இராமானுஜன் சந்தித்தார். இராமானுஜனின் கணிதத் திறமையினைக் கண்டு வியந்த இராமச்சந்திரராவ் அவர்கள் இராமானுஜனைப் பார்த்து தற்சமயம் உமது தேவை என்ன? என்று கேட்க, இராமானுஜன் ஓய்வு தேவை என்று பதிலளித்தார், அதாவது உணவு பற்றிய கவலையின்றி கணிதம் பற்றிய கனவு கான ஓய்வு தேவை என்றார். யாருக்குமே விளங்காத கணக்குகள் எல்லாம் இராமானுஜனிடம் கைக்கட்டி சேவகம் செய்தாலும், உணவு மட்டுமே அவர் இருக்குமிடத்தை அனுகாதிருந்தது.
பிப்ரவரி 27 இல் ஹார்டிக்கு இராமானுஜன் எழுதிய கடிதம், படிப்போரை நெகிழச் செய்வதாகும். நான் தற்சமயம் தங்களிடம் வேண்டுகோளாக வைப்பதெல்லாம் ஒன்றுதான், நான் உண்ண உணவின்றி அரைப் பட்டினியாக இருக்கும் ஒரு மனிதன். எனது மூளையைப் பாதுகாக்க . எனது வயிற்றிற்கு உணவு தேவையாக உள்ளது. இதுவே எனது முதல் தேவையாகும் என்று எழுதினார்.

1913 ஆம் ஆண்டு சனவரி மாதம் 16 ஆம் தேதி, இராமானுஜன் அவர்கள், இலண்டன் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஜி.எச்.ஹார்டி என்பாருக்கு ஒரு கடிதம் எழுதினார், தான் கண்டுபிடித்த தேற்றங்கள் சிலவற்றையும் இணைத்து அனுப்பினார். இராமானுஜனின் தேற்றங்களால் கவரப் பட்ட ஹார்டி, இராமானுஜனை இலண்டன் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கு வருமாறு அழைத்தார், பிப்ரவரி 27 இல் ஹார்டிக்கு இராமானுஜன் எழுதிய கடிதம், படிப்போரை நெகிழச் செய்வதாகும். நான் தற்சமயம் தங்களிடம் வேண்டுகோளாக வைப்பதெல்லாம் ஒன்றுதான், நான் உண்ண உணவின்றி அரைப் பட்டினியாக இருக்கும் ஒரு மனிதன். எனது மூளையைப் பாதுகாக்க . எனது வயிற்றிற்கு உணவு தேவையாக உள்ளது. இதுவே எனது முதல் தேவையாகும் என்று எழுதினார், இராமானுஜனின் உண்மை நிலையை, வறுமையில் உழன்ற அவல நிலையை விளக்க இக்கடிதம் ஒன்றே போதுமானதாகும்.

இராமானுஜன் இளமைக் காலம் முதல் தான் கண்டுபிடித்த கணக்குகளை நான்கு நோட்டுகளில் பதிவு செய்துள்ளார். ஊதா நிற மையினால் கணக்குகளை தாளில் எழுதிவரும் இராமானுஜன், ஒரு பக்கம் முடிந்ததும், அடுத்த பக்கத்தில் எழுதாமல், அதே பக்கத்திலேயே, மேலிருந்து கீழாக, ஊதா நிற வரிகளுக்கு இடையே சிகப்பு நிற மையினால் எழுதுவார். நோட்டு வாங்கக் கூட காசில்லாத நிலையில் இராமானுஜன் இருந்தமைக்கு இந்த நோட்டுகளே சாட்சிகளாய் இருக்கின்றன.

ஐந்து வருடம் இலண்டனில் தங்கி உலகையேத் தனது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தப் பெருமையுடன் தாயகம் திரும்பினார் இராமானுஜன். அவருடன் இரண்டறக் கலந்து காசநோயும் வந்தது. காச நோயால் பாதிக்கப் பட்டு எழும்பும் தோலுமே உள்ள உருவமாய் இளைத்த இராமானுஜன், அந்நிலையில் கூட தனது கணித ஆய்வை நிறுத்தவில்லை. 1920 ஆம் ஆண்டு சனவரி 12 ஆம் நாள் ஹார்டிக்குத் தனது இறுதிக் கடிதத்தை எழுதினார்.

இந்தியாவிற்குத் திரும்பியபின் இதுநாள் வரை தங்களுக்குக் கடிதம் எழுதாததற்கு மன்னிக்கவும். நான் ஆச்சரியப்படும் வகையில் ஒரு சார்பினைக் கண்டுபிடித்துள்ளேன். அதற்கு மாக் தீட்டா சார்பு எனப் பெயரிட்டுள்ளேன். இக்கடிதத்துடன் சில சார்புகளை அனுப்பியுள்ளேன் என்று எழுதினார்,

தனது கடைசி மூச்சு உள்ளவரை கணிதத்தை மட்டுமே நேசித்த, சுவாசித்த மாபெரும் கணித மேதை சீனிவாச இராமானுஜன். இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் 1946 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட Discovery Of India எனும் நூலில் இராமானுஜன் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்,

இராமானுஜனின் குறுகிய கால வாழ்வும் மரணமும் இந்தியாவின் நிலையினைத் தெளிவாகக் காட்டுகிறது. கோடிக் கணக்காண இந்தியர்களுள் சிலருக்கே கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. வறுமையின் பிடியில் சிக்கி உண்ண உணவின்றி, பசியால் தவிக்கும் ஏழைகளுக்கு உண்ண உணவும், கற்க கல்வி வசதியும் ஏற்படுத்தப் படுமேயானால், இந்தியாவில் இருந்து விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள் இலட்சக் கணக்கில் தோன்றிப் புதிய பாரதத்தைப் படைப்பார்கள் என்பது உறுதி.

உணவிற்கே வழியின்றி வாழ்வில் வறுமையை மட்டுமே சந்தித்த போதும், கணிதத்தையே சிந்தித்து, சுவாசித்து, சாதித்துக் காட்டிய கணித மேதை சீனிவாச இராமானுஜனின் நினைவினைப் போற்றுவோம்.

கணிதமேதை ராமானுஜத்தின் 125 வது பிறந்த ஆண்டை தேசியக் கல்வி ஆண்டாக அறிவித்ததன் மூலம் பலரது எதிர்பார்ப்பை மைய அரசு பூர்த்தி செய்துள்ளது. இப்படி ஒரு ஆண்டை ஏதாவது ஒரு குறிக்கோளுக்காக அறிவிக்க வேண்டுமேயானால் குறைந்த பட்சம் இரண்டு வருடகாலமாக பல்வேறு திட்டங்கள் நிகழ்வுகளுக்கு திட்ட வரையறைகளை விவாதித்து பட்ஜெட்டில் குறிப்பிட்டு, தனியாக பணம் ஒதுக்கி விரிவாகச் செய்வதுதான் வழக்கம்.

“கணித ஆண்டு” அப்படி வரவில்லை. கணிதமேதை ராமானுஜத்தின் 125 வது ஆண்டு எனக் குறிப்பிட்டு, ஜெர்மனி மற்றும் சுவீடன் நாடுகளில் ஆண்டு முழுவதும் “ஆய்வு சமர்ப்பித்தல் கணித மாநாடு” என அறிவித்தபோது நம் அரசு
விழித்துக்கொண்டு நம்ம லோக்கல் அறிவு ஜீவிகளின் கூக்குரலுக்கு அவசரமாக செவிசாய்த்து அதிரடியாக அறிவித்துள்ளது.

எது எப்படியோ ……… கணிதத்தையும் கணிதமேதையும் கொண்டாட ஒரு வாய்ப்பு. மிக எளிய குடும்பத்தில் பிறந்து “கொடிது கொடிது வறுமை கொடிது” என அவ்வை பாடிய இளமையில் வறுமையோடு வளர்ந்து கணித உலகின் சக்கரவர்த்தியாகப் பிரகாசித்த ராமானுஜம் ஒரு கணிதமேதை என்று மட்டும் தெரியும். கல்லுரி மாணவர்க்கு அவரது கணித பங்களிப்பு பற்றி எதுவும் தெரியாது. கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்ததுபோல் ராமானுஜம், ராமானுஜம் நம்பர் என்கிற ஒன்றை கண்டுபிடித்தார் என்று சில பேராசிரியர்களே இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும் அவலம் ஒரு புறம். அவர் பிறந்து வாழ்ந்த வீட்டை அவர் ஊர்க்காரர்களாலேயே அடையாளம் காட்ட முடியாமல்போன அவமானம் ஒரு புறம்.

இதற்கிடையே கணிதமேதை குறித்த வாழ்வாதாரங்களைத்தான் காப்பாற்றவில்லை ……….கணிதத்தையாவது காப்பாற்றினோமா என்றால் நாலும் மூணும் எத்தனை என்பதற்கே கால்குலேட்டரைத் தேடும் ஒரு புதிய தலைமுறை அதிர்ச்சிதரும் நிஜமாய் நம் கண் முன்னே நடமாடும் கொடுமை. கணிதக் கல்வியகங்கள் எல்லாம் ‘division center” ஆகிவிட்ட வியாபார யுகத்தில் கணித ஆண்டு! என்ன செய்யப் போகிறோம். வழக்கம்போல ராமானுஜம் படத்திறப்பு. குத்துவிளக்கு ஏற்றும் மந்திரி மனைவி, பரிசு வழங்கும் அதிகாரி, பன், டீ சாப்பிட்டு G.O. கிராக்கிப்படி கணக்கை கச்சிதமாய் நினைவுகூர்ந்து, பின் கலையும் ஒரு அரசு விழா. குழந்தைகள் வெயிலில் பூத்தூவ….கலை நிகழ்ச்சிகளுடன் விழா முடிந்தது என தினசரிகளின் செய்தியாகப்போகிறதா …… அல்லது மனக்கணக்குகள், கணிதவியலார் சிந்தனைகள், குழந்தைகள் அறிய ஆர்வம் மேம்படுத்தும் கணிதநூல்கள்…. ஆரோக்கியமான அறிவியல் விவாதங்கள் என குட்டி ராமானுஜன்களைப் படைக்கும் புதிய வழியை தரப்போகிறதா….. தமிழில் கணிதம் தொடர்பான புத்தகங்களின் கணித ஆண்டை எப்படி பயன்படுத்தப் போகிறோம் …… சிந்திப்போம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கணித மேதை ராமானுஜன்
» என் வயது 30. நல்ல கணவர், குழந்தைகள் என்று வாழ்க்கை நன்றாகச் செல்கிறது. ஆனால், தற்சமயம் உடல்நிலை சரியில்லை. அதுவும் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்படுகிறேன். என்ன செய்ய வேண்டும், எந்தக் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லுங்கள்.
» கணித மாமேதை சீனிவாச ராமானுஜன்
» காலை உணவு கட்டாயம் சாப்பிட வேண்டும் ஏன் என்று தெரியுமா..?!
» திருமணபொருத்தம் பார்க்கும் முன்பு ஜாதகத்தில் என்ன என்ன பார்க்க வேண்டும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum