வன்னியில் ஆசிரியர்களுக்கு கடும் பற்றாக்குறை
Page 1 of 1

முப்பதாயிரம் மாணவர்கள் கல்வி கற்கின்ற கிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகளில் 380 ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை நிலவுவுதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் முக்கியமாகத் தேவைப்படுகின்றனர்.
கிராமப்புறப் பாடசாலைகள் பலவற்றில் இந்தப் பாடங்களை போதிப்பதற்கென ஆசிரியர்கள் முற்றிலும் இல்லாத நிலைமையே காணப்படுகிறது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும், மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேசத்திலும், வவுனியா மாவட்டத்தின் வடக்குப் பிரதேசத்திலும் ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது.
இந்த நிலைமைகளை உறுதிப்படுத்திய யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், வன்னிப் பகுதிக்குத் தேவையான கணிசமான ஆசிரியர்களை யாழ் மாவட்டத்தில் இருந்தே பெற வேண்டியிருப்பதாகவும், எனினும் அங்கிருந்து அந்த ஆசிரியர்களை வன்னிப் பிரதேசத்திற்கு இடம்மாற்றம் செய்யும்போது, ஆசிரியர் தொழிற்சங்கங்களின் தலையீடு மற்றும் ஆசிரியர்களின் உடல் ஆரோக்கிய நிலை மற்றும் முக்கிய காரணங்களைக் காட்டி அந்த ஆசிரியர்களில் பலர் வன்னிப்பிரதேசத்தில் இருந்து மீண்டும் யாழ் மாவட்டத்திற்கே சென்று விடுவதாகவும் குறிப்பிடுகின்றார்.
நடவடிக்கை
இத்தகைய ஆசியரியர்கள் வன்னிப் பிரதேச பாடசாலைகளுக்குப் பணியாற்ற வராமல் இருப்பதற்கு மனித உரிமை அமைப்புக்களும் உதவி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் சுட்டிகாட்டுகின்றார்.
வன்னிப்பிரதேசத்தின் ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்குவதற்காக மாகாணக் கல்வி அமைச்சின் அதிகாரிகள், அமைச்சின் செயலாளர், வடமாகாண ஆளுனர் ஆகியோருடன் பல தடவைகள் தொடர்பு கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதுடன், வன்னிப் பிரதேசத்தில் நிரந்தர நியமனமில்லாமல் தொண்டு அடிப்படையில் பணியாற்றுகின்ற ஆசிரியர்களையும் நிரந்தர ஆசிரிய சேவைக்குள் உள்வாங்குவதற்கான முயற்சிகளையும் தாங்கள் மேற்கொண்டிருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தெரிவிக்கின்றார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கரும்புப் பயிரில் இரும்பு சத்து பற்றாக்குறை
» அறுவடை பணி ஆட்கள் பற்றாக்குறை: நாமே உருவாகிய ஒரு பிரச்னை
» இராணுவத் தேவைக்காக வன்னியில் 20 ஏக்கர் காணி சுவிகரிப்பு! (அறிவித்தல் இணைப்பு)
» மாஸ்கோவில் கடும் பனிப்பொழிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum