பொது பல சேனா அமைப்பின் கருத்துக்கு முஸ்லிம்கள் மறுப்பு
Page 1 of 1

இலங்கையில் இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் கடும்போக்குவாதமும் தீவிரமடைந்துவருவதாகவும் அதனால் மற்ற சமூகங்கள் பாதிக்கப்படுவதாகவும் பொது பல சேனா என்ற கடும்போக்கு பெளத்த அமைப்பு சுமத்துகின்ற குற்றச்சாட்டை முஸ்லிம் சமூகத் தலைவர்கள் மறுக்கிறார்கள்.
முஸ்லிம் மக்களுக்கு எதிராக அண்மைக் காலங்களாக நாட்டில் நடந்துவரும் அச்சுறுத்தல் செயற்பாடுகள் தொடர்பில் முஸ்லிம் முஸ்லிம் தலைவர்கள் பொது பல சேனா அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தார்.
தொடர்புடைய விடயங்கள்
துஷ்பிரயோகம்,
மனித உரிமை,
மஹிந்த ராஜபக்ஷ
முஸ்லிம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருப்பதாக பிபிசி தமிழோசையிடம் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
பொது பல சேனா செயலாளர் ஞானசார தேரர்
முஸ்லிம்- எதிர்ப்பு போராட்டங்கள் பற்றி பொது பல சேனா அமைப்பு
பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்
கேட்கmp3
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்
மாற்று மீடியா வடிவில் இயக்க
முஸ்லிம்கள் மத்தியில் மத அடிப்படை வாதமும் கடும்போக்கு வாதமும் தீவிரமடைந்து வருவதாகவும் அதனால் பெரும்பான்மை பௌத்தர்கள் பாதிக்கப்படுவதாகவும் ஞானசார தேரர் கூறினார்.
ஹலால் சான்றிதழ் பெறவேண்டுமென்று வர்த்தக நிலையங்கள் கட்டாயப்படுத்தப்படுவதாகவும் அதனால் பௌத்தர்களின் உணவுப் பழக்கமும் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
உணவுப் பொருட்கள் தவிர்ந்த ஏனைய பொருட்களுக்கும் ஹலால் சான்றிதழ் பெறுமாறு வற்புறுத்தப்படுவதாகவும் ஞானசார தேரர் தமிழோசையிடம் கூறினார்.
சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்குரிய சட்டங்களுக்கு பெரும்பான்மை பௌத்தர்களும் கட்டுப்பட வேண்டியதை ஏற்க முடியாது என்ற வாதத்தையும் அவர் முன்வைத்தார்.
இதேவேளை, முஸ்லிம் வர்த்தக நிலையங்களில் பொருள் வாங்கக் கூடாது என்றும் பள்ளிவாசல்களை அகற்ற வேண்டுமென்றும் நாட்டின் பல இடங்களிலும் நடக்கும் போராட்டங்களுக்கும் பொது பல சேனா அமைப்புக்கும் சம்மந்தம் இல்லையென்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
முஸ்லிம் தரப்பு விளக்கம்
இலங்கை முஸ்லிம்கள்
இலங்கையில் முஸ்லிம்கள் மிகவும் நெருக்கடியான சூழலில் தான் இப்போது வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்: எஸ்.எல்.எம். ஹனீஃபா
ஆனால் பொது பல சேனா அமைப்பின் குற்றச்சாட்டுக்களை முஸ்லிம் தலைவர்கள் மறுத்துள்ளார்கள்.
முஸ்லிம்கள் ஒருபோதும் சிங்களவர்களையோ மற்ற மதத்தவர்களையோ மதம் மாற்றுவதற்காக பிரச்சாரம் செய்துவரவில்லை என்று முஸ்லிம் சமூக எழுத்தாளர் எஸ்.எல்.எம். ஹனீஃபா பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
உண்மையான மார்க்க விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் விலகிச் செல்லும் இஸ்லாமியர்களை நெறிப்படுத்தும் நோக்குடனேயே முஸ்லிம் மத அமைப்புகள் பிரச்சாரம் செய்துவருவதாகவும் ஹனீஃபா தெரிவித்தார்.
உணவுப் பொருட்கள் தவிர்ந்த வேறுபொருட்களுக்கும் ஹலால் சான்றிதழ் பெறவேண்டுமென்ற எந்தவிதமான நடைமுறையும் இலங்கையில் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சீன நீச்சல் வீரர் வெற்றி -அமெரிக்க கருத்துக்கு கண்டனம்
» பொது பல சேனா இயக்கம் நாகத்தை வாலினால் பிடித்துக் கொண்டிருக்கிறது - தம்பர அமில தேரர்
» ஞானாஸார தேரரால் இனிமேல் அறிக்கை வழங்க முடியாது..! - பொது பல சேனா (அறிக்கை இணைப்பு)
» இந்திய வீட்டுதவித் திட்டத்தில் பாரபட்சம்: முஸ்லிம்கள் கண்டன ஊர்வலம்
» ஐ.நா. பெண்கள் அமைப்பின் தலைவர் பதவி விலகுகிறார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum