தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்துக்கு வீசா மறுக்கப்பட்டது ஏன்?

Go down

சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்துக்கு வீசா மறுக்கப்பட்டது ஏன்? Empty சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்துக்கு வீசா மறுக்கப்பட்டது ஏன்?

Post  meenu Fri Mar 01, 2013 6:21 pm

இலங்கைக்கு தற்போது வருவதற்கான 'தகைமைகள்' இல்லை என்ற காரணத்தினாலேயே சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவனப் பிரதிநிதிகளுக்கு வீசா மறுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வருவதற்கு முன்னதாக இணையதளம் மூலம் வீசாவுக்கான முன்-அனுமதி பெற்றவர்கள் நாட்டுக்குள் வருவதற்கான தகைமையைக் கொண்டிருக்கிறார்களா என்று ஆராய்ந்து பார்க்கின்ற வழக்கத்தின்படியே சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு வீசா மறுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் தலைமைக் கட்டுப்பாட்டாளர் டப்.ஏ. சூலானந்த பெரேரா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
'இங்கு வருவதற்கான தகைமை அவர்களிடம் இருக்கவில்லை'- இலங்கை

இலங்கை வருவதற்கு 'தகைமை அற்றவர்கள்' என்பதால் வீசா இல்லை!

இலங்கை செல்லவிருந்த சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு வீசா மறுக்கப்பட்டுள்ளது.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்

மாற்று மீடியா வடிவில் இயக்க
தொடர்புடைய விடயங்கள்

துஷ்பிரயோகம்,
மனித உரிமை,
மஹிந்த ராஜபக்ஷ

சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் நால்வர் இணையதளம் மூலம் பெற்றுக்கொண்டிருந்தது முழுமையான வீசா அனுமதி இல்லை என்றும் விமான நிலையத்தில் இறங்கிய பின் வீசா பெறுவதற்கான முன்-அனுமதியே அது என்றும் அதனை ரத்துசெய்வதற்கு தமக்கு அதிகாரம் உள்ளது என்றும் அவர் கூறினார்.

நாட்டின் நன்மை கருதி பல காரணங்களுக்காக நாட்டுக்குள் நுழைவதற்கான வீசா அனுமதியை ரத்துசெய்வதற்கு தமக்கு அதிகாரம் உள்ளது என்றும் சூலானந்த பெரேரா சுட்டிக்காட்டினார்.
அவ்வாறான காரணங்களை விளக்கமாக பகிரங்கப்படுத்த வேண்டிய தேவை இல்லை என்றும் அவர் வாதிட்டார்.
சர்வதேச சட்டத்தரணிகள் விசனம்
சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம்

சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம்

இதேவேளை, சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு வீசா அனுமதி மறுக்கப்பட்டதால் இலங்கைக்குச் செல்லவிருந்த தமது பயணத்தை ஒத்திவைக்க வேண்டியநிலைமை ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பு அறிக்கையொன்றின் மூலம் அறிவித்திருக்கிறது.

இலங்கையில் சட்டம் எந்தளவுக்கு முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது மற்றும் நீதித்துறை எந்தளவுக்கு சுதந்திரமாக இயங்கக்கூடிய நிலைமை உள்ளது போன்ற விடயங்களை ஆராய்வதற்காக சர்வதேச சட்டத்துறை சார்ந்த நிபுணர்கள் பெப்ரவரி 1-ம் திகதியிலிருந்து 10ம் திகதிக்குள்ளான காலப்பகுதிக்குள் இலங்கைக்கு செல்லவிருந்தனர்.

ஆனால் வீசா அனுமதி மறுக்கப்பட்டதால் தமது பயணத்தை ஒத்திவைக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் இந்தப் பிரச்சனை தொடர்பான தமது விசனத்தை லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்திடம் வெளியிட்டுள்ளதாகவும் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறது.

இலங்கையில் ஷிராணி பண்டாரநாயக்க தலைமை நீதியரசர் பதவியிலிருந்து விலக்கப்பட்ட நடைமுறையில் ஏதாவது முறைகேடுகள் நடந்துள்ளனவா என்று ஆராய்வதற்காகவே சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இலங்கை செல்ல திட்டமிட்டிருந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum