தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சினிமா இயக்குநர்கள் சங்கத்துக்கு புதிய இணையதளம்- வெப் டிவி!

Go down

சினிமா இயக்குநர்கள் சங்கத்துக்கு புதிய இணையதளம்- வெப் டிவி! Empty சினிமா இயக்குநர்கள் சங்கத்துக்கு புதிய இணையதளம்- வெப் டிவி!

Post  ishwarya Thu Apr 04, 2013 2:11 pm

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கான இணையதளம் புதுப்பொலிவுடன்
வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. மேலும் வெப் டி.வி. ஒன்றும்
தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்த அறிமுக நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர்கள் சங்கச்
செயலாளர் அமீர், பொருளாளர் எஸ்.பி.ஜனநாதன் ஆகியோர் சென்னையில்
செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், “இயக்குநர் சங்கத்துக்கு என
ஏற்கெனவே இணையதளம் இருந்தபோதும் அது முறையாக செயல்படவில்லை.

அதனால் நவீன தொழில்நுட்பத்துடன் ஏராளமான தகவல்களை உள்ளடக்கி புதிய
வடிவில் இணையதளத்தைத் தொடங்கியுள்ளோம். www.tantis.in என்ற இந்த இணையதளமும்
திரைப்படத்துறை குறித்த செய்திகள் அடங்கிய 24 மணி நேர வெப் டி.வி.யும்
வரும் ஏப்ரல் 20-ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும்.

இந்த இணையதளத்தில் திரைப்பட இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள்
ஆகியோருக்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் இருக்கும். இயக்குநர்
சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள அனைவரைப் பற்றிய முழுத் தகவல்களும் இதில்
இடம்பெற்றிருக்கும்.

மேலும் சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்கு ஒரு படத்தை எப்படி அனுப்புவது,
ஓர் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையேயான ஒப்பந்தம் அமைக்கப்பட
வேண்டிய விதம், உறுப்பினர்களுக்கு உள்ள அடிப்படை உரிமை, மருத்துவக்
காப்பீட்டுத் திட்டம், உதவித் தொகை, இயக்குநர் சங்க செயல்பாடுகள் உள்ளிட்ட
ஏராளமான தகவல்களும் இதில் இடம்பெற்றிருக்கும்.

24 மணி நேர வெப் டி.வி.யில் டிரெய்லர்கள் இலவசமாகவும்,
தயாரிப்பாளர்களுக்கு உதவும் விதத்தில் விளம்பரங்கள் மிகக் குறைந்த
கட்டணத்திலும் ஒளிபரப்பப்படும் என்றனர்.

ட்ரைலராக வழக்கு எண் 18/9 வரும் 20ம் தேதி ஒளிபரப்பாகும்,” என்றனர்.

இந்த இணையதளத்தை இயக்குநர்கள் அமீர், ஜனநாதன், எஸ் எஸ் ஸ்டேன்லி, தம்பி
துரை, பாலசேகரன், ஜெகன்னாத், வித்யாசாகர், கமலக் கண்ணன் ஆகியோர்
முன்னிலையில் இயக்குநர் பாலாஜி சக்திவேல் தொடங்கிவைத்தார். மூத்த சினிமா
பத்திரிகையாளரும் நடிகருமான யோகி தேவராஜ் உடனிருந்தார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» திரைப்பட இயக்குநர் சங்கத்துக்காக தனி இணையதளம், வெப் டி.வி. தொடக்கம்
» இயக்குநர்கள் சங்கத்துக்கான இணையதளம் புதுப்பொலிவுடன் நாளை ஆரம்பம்!
» வரும் 28ம் தேதி தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு புதிய தலைவர் தேர்வு!
» ரஜினி நலம்பெற 500 இயக்குநர்கள், 1000 உதவி இயக்குநர்கள் கூட்டுப் பிரார்த்தனை!
» ஜெயா டிவி.. ஜாக்பாட் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் நதியா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum