புதிய பிரதம நீதியரசரை புறக்கணித்தது சட்டத்தரணிகள் சங்கம்.
Page 1 of 1
புதிய பிரதம நீதியரசரை புறக்கணித்தது சட்டத்தரணிகள் சங்கம்.
அண்மையில் இடம்பெற்ற சட்ட்தரணிகள் சங்க தேர்வில் சட்டததரணி உபுல் ஜயசூரிய, தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டத்தரணிகள் சங்க சம்பிரதாயங்களுக்கு ஏற்ப, தலைவரின் பதவியேற்பு வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வழமையாக அந்த வைபவத்தில், பிரதம அதிதியாக, நாட்டின் பிரதம நீதியரசரே கலந்து கொள்வார்.
சட்டத்தரணிகள் சங்க 39 வருட கால வரலாற்றில நடக்கக்கூடாத ஒரு விடயம் நடந்துள்ளது. நாட்டின் சட்டரீதியான பிரதம நீதியரசரான மொஹான் பீரிஸிற்கு, குறித்த பதவியேற்பு வைபவத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனடிப்படையில் நாட்டின் பிரதம நீதியரசர் பதவியை வகிப்பவருக்கு அழைப்பு விடுக்காமல் நடாத்தப்பட்ட முதலாவது சட்டத்தரணிகள் சங்க தலைவர் பதவியேற்கும் வைபவமாக, இது வரலாற்றில் இடம்பெறுகிறது.
அத்துடன் ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதன் பின்னர், சட்டரீதியான ஒழுங்கு விதிகளுக்கேற்ப, பதவிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர், பிரதம அதிதியாக வைபவத்தில் கலந்து கொண்டமையை, சட்டத்தரணிகள் கண்டித்துள்ளனர்.
குறித்த வைபவத்தில், நீதியரசர்கள் கலந்து கொள்ளாமை, குறிப்பிடத்தக்கதாகும். சட்டத்தரணிகள் சங்க தலைவர் பதவியேற்பு வைபவத்தில், அரசியல் வாதிகளை கலந்து கொள்ளச்செய்யாமையும் வழமையாகும். எனினும், முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய, ஆகியோர் கலந்து கொண்டதன் மூலம், சட்டத்தரணிகள் சங்கத்தின் தற்போதைய தலைவர் உட்பட உத்தியோகத்தர்களின் தொழில் கௌரவம் பாதிக்கப்பட்டு விட்டதாகவும், குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வைபவம் இடம்பெற்ற மண்டபத்திற்கு, முன்னாள் பிரதம நீதியரசரும், முன்னாள் ஜனாதிபதியும், வருகை தந்தபோது, சட்டமா அதிபர் பாலித பெர்னாண்டோவும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல்களும், விழா மண்டபத்திலிருந்து வெளியேறியமை, குறிப்பிடத்தக்கது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிளவுபட்டது நடனக் கலைஞர்கள் சங்கம்! பிறந்தது புதிய சங்கம்!!
» புதிய சங்கம் உருவாக்க தயாரிப்பாளர்கள் முடிவு!
» விஜய், சூர்யா, மாதவன், தனுஷ், ஜெயம்ரவி நடிகர் சங்கம் சார்பில் புதிய கிரிக்கெட் அணி: இந்தி, தெலுங்கு நடிகர்களுடன் மோதல்
» சட்டத்தரணிகள் சங்கத்திற்கு தலைமை தாங்கினார் ஷிராணி!
» பத்மபூஷன் விருதை ஜானகி புறக்கணித்தது தவறு: ஜேசுதாஸ்
» புதிய சங்கம் உருவாக்க தயாரிப்பாளர்கள் முடிவு!
» விஜய், சூர்யா, மாதவன், தனுஷ், ஜெயம்ரவி நடிகர் சங்கம் சார்பில் புதிய கிரிக்கெட் அணி: இந்தி, தெலுங்கு நடிகர்களுடன் மோதல்
» சட்டத்தரணிகள் சங்கத்திற்கு தலைமை தாங்கினார் ஷிராணி!
» பத்மபூஷன் விருதை ஜானகி புறக்கணித்தது தவறு: ஜேசுதாஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum