தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சட்டவிரோத கடற்பயணம் மேற்கொள்ள முயன்றவர்கள்" 54 பேர் கைது

Go down

சட்டவிரோத கடற்பயணம் மேற்கொள்ள முயன்றவர்கள்" 54 பேர் கைது Empty சட்டவிரோத கடற்பயணம் மேற்கொள்ள முயன்றவர்கள்" 54 பேர் கைது

Post  meenu Fri Mar 01, 2013 6:17 pm

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியா நோக்கி சட்ட விரோத பயணம் மேற்கொள்ள முயன்றதாக கூறப்படும் 54 பேர் வியாழக்கிழமை கிழக்கு கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த ஆண்டு இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்று கைதாகும் முதலாவது தொகுதி இவர்கள் என கூறப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா கடலில் 12 மைல் தொலைவில் மீன்பிடி வள்ளமொன்றில் பயணித்தவேளை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை கூறுகிறது.

கைதான 54 பேரில் 6 பெண்களும் 8 சிறுவர்களும் இருப்பதாக தகவல் வெளிட்டுள்ள கடற்படை, இவர்கள் தற்போது மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வு துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.

தமது நாட்டுக்குள் புகலிடம் கோரி கடல் வழியாக நுழையும் இலங்கையர்கள் எல்லையில் வைத்து விசாரணைகள் எதுவுமின்றி திருப்பி அனுப்பப்படுவார்கள் என ஆஸ்திரேலியா ஏற்கனவே அறிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தின் பின்னர் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை அது திருப்பி அனுப்பி வைத்துள்ளது.

இன்னும் பலர் அனுப்பி வைக்கப்படவிருப்பதாகவும் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இலங்கையில் மட்டும் கடற்படையினராலும் காவல் துறையினரால் இந்த சட்ட விரோத பயணத்தின் போதும் பயண ஆயத்தங்களின் போதும் சுமார் 1700 பேர் வரை கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கைக்கெதிரான வாசகங்களடங்கிய பதாதைகளுடன் மைதானத்திற்குள் நுழைய முயன்றவர்கள் கைது
» மஞ்சுவிரட்டில் மாடு முட்டி 3 பேர் பலி விழா குழுவினர் உள்பட 8 பேர் கைது
» யாழில் சட்டவிரோத விபச்சார விடுதி முற்றுகை யாழ் பல்கலைக்கழக மாணவர் கைது(படங்கள் இணைப்பு)
» திருப்பரங்குன்றத்தில் ரவுடி கொலை வழக்கில் 7 பேர் கைது
» பாகிஸ்தானில் முஷரப்பை கொல்ல முயன்ற 2 பேர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum