ஷிராணி: மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
Page 1 of 1

பதவிநீக்கப்பட்ட இலங்கையின் முன்னாள் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான கண்டன பதவிநீக்க தீர்மானம் சட்ட விரோதமானது என அண்மையில் இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பை ரத்துச் செய்யக் கோரும் மனு ஒன்றை இலங்கை உச்சநீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
தவிர இந்த மனு தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகும்படி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு உச்சநீதிமன்றம் அறிவித்தல் விடுவித்துள்ளது.
கம்பஹா பிரதேசத்திலுள்ள ஹெச் டபிள்யு ஹேவகே என்பவரால் மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிபதி ஷிராணி திலகவர்த்தன தலைமையில் மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை வியாழனன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
மார்ச் ஐந்தாம் தேதி இந்த மனு விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
தனக்கெதிரான கண்டன பதவிநீக்க நடைமுறையை எதிர்த்து ஷிராணி பண்டாரநாயக்க செய்திருந்த மனுவை அண்மையில் விசாரித்திருந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், நாட்டின் தலைமை நீதிபதியை விசாரிக்க அந்த நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு அதிகாரம் இல்லை எனத் தீர்ப்பளித்திருந்தது.
ஆனால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அந்த தீர்ப்பு நாட்டின் அரசியல் யாப்பிற்கு முரணானது என்று தற்போது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சேவை வரியை ரத்து செய்யக் கோரி 7-ல் தமிழ்த் திரையுலகினர் உண்ணாவிரதம்
» கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்தும் கடல் படத்தை தடை செய்யக் கோரி ஹைகோர்ட்டில் வழக்கு
» சேவை வரி ரத்து செய்ய கோரி சென்னையில் 15,000 ஓட்டல்கள் மூடப்பட்டன

» சட்டத்தரணிகள் சங்கத்திற்கு தலைமை தாங்கினார் ஷிராணி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum