தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சேவை வரி ரத்து செய்ய கோரி சென்னையில் 15,000 ஓட்டல்கள் மூடப்பட்டன

Go down

சேவை வரி ரத்து செய்ய கோரி சென்னையில் 15,000 ஓட்டல்கள் மூடப்பட்டன  Empty சேவை வரி ரத்து செய்ய கோரி சென்னையில் 15,000 ஓட்டல்கள் மூடப்பட்டன

Post  ishwarya Fri May 24, 2013 4:28 pm

சேவை வரி ரத்து செய்யக்கோரி சென்னை முழுவதும் 15,000 ஓட்டல்கள் நேற்று மூடப்பட்டன. குளிர்சாதன வசதி கொண்ட உணவகங்கள் 12.36 சதவீத சேவை வரியை செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி ஏப்ரல் 1ம் தேதி முதல் சேவை வரி அமலுக்கு வந்துள்ளது. உணவகங்கள் சார்பில் ஏற்கனவே மாநில அரசுக்கு வாட் வரி செலுத்தப்பட்டு வருகிறது. எனவே, சேவை வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என ஓட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் சேவை வரியை ரத்து செய்யக்கோரி, இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நாடு முழுவதும் ஓட்டல்கள் அனைத்தும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று ஏசி வசதியுள்ள மற்றும் ஏசி வசதி இல்லாத 50,000 ஓட்டல்கள் மூடப்பட்டது. சென்னையில் மட்டும் 7 ஆயிரம் ஏசி ஓட்டல்கள் உள்பட 15 ஆயிரம் ஓட்டல்கள் மூடப்பட்டது.

மயிலாப்பூர், தி.நகர், தேனாம்பேட்டை, பிராட்வே, புரசைவாக்கம், சேத்துப்பட்டு போன்ற பல்வேறு இடங்களில் மூடப்பட்ட ஓட்டல்கள் முன்பு வரி உயர்வு காரணமாக இன்று உணவகம் மூடப்படுகிறது என்று சுற்றறிக்கை ஓட்டப்பட்டு இருந்தது. இதனால், வேலை நிமிர்த்தமாக வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இடம்பெயர்ந்து வாழும் இளைஞர்கள் பாதிக்கப்பட்டனர். சாலையோரங்களில் உள்ள உணவகங்களில் கூட்டம் அலைமோதியது.

ஓட்டல் ஸ்டிரைக்கை தொடர்ந்து, சென்னையில் மாநகராட்சியின் மலிவு விலை அம்மா உணவகங்களில் கூடுதலாக இட்லி, சாம்பார் சாதம், தயிர் சாதம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது. அம்மா உணவகங்களில் காலை முதல் வழக்கத்தைவிட பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. மாலை 6 மணிக்கு மூடப்பட்ட ஓட்டல்கள் அனைத் தும் திறக்கப்பட்டது.

இது குறித்து தமிழ்நாடு ஓட்டல் சங்கத்தின் செயலா ளர் ராஜ்குமார் மற்றும் சீனிவாசன் கூறுகையில், ‘‘ஓட்டல்களுக்கு மாநில அரசு வாட் வரி விதித்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசு சேவை வரியை ஓட்டல்களுக்கு விதித்துள்ளது. இதனால், ஓட்டல்களுக்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

குறிப்பாக வாடிக்கையாளர் ஒருவர் யி100க்கு சாப்பிட்டால், யி140 வரி கட்ட வேண்டிய நிலை ஏற்படும். அதனால், மத்திய அரசு விதித்துள்ள சேவை வரியை ரத்து செய்யக்கோரி அகில இந்திய ஓட்டல் கூட்டமைப்பு சார்பில் இன்று நாடு முழுவதும் சுமார் 4 லட்சம் ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 50 ஆயிரம் ஓட்டல்கள் உள்ளன. இவற்றில் 95 சதவீதம் ஓட்டல்கள் மூடப்பட்டிருந்தது.

சென்னையில் 75 சதவீதம் ஓட்டல்கள் அடைக்கப்பட்டது. எங்களுடைய போராட்டம் வெற்றி அடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு நாள் ஓட்டல்கள் அடைக்கப்பட்டதால், சுமார் யி100 கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சிரமத்தை பார்க்காமல் ஒத்துழைப்பு தந்த பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். அடுத்த கட்டமாக பிரதமரை பார்த்து மனு கொடுக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

மலிவு விலை உணவகத்தில் 3.20 லட்சம் இட்லி விற்பனை சென்னை மாநகராட்சி சார்பில் 200 மலிவு விலை உணவகங்கள் இயங்கி வருகின்றன. இதை தொடர்ந்து, அனைத்து மலிவு விலை உணவகங்களில் கூடுதல் உணவுகள் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. அனைத்து உணவகங்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சாந்தோம், ராயப்பேட்டை மணிக்கூண்டு உள்ளிட்ட இடங்களில் உள்ள உணவகத்தில் மக்கள் நீண்ட கியூவில் நின்று உணவு சாப்பிட்டு சென்றனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘மலிவு விலை உணவகங்களில் 3 லட்சத்து 20 ஆயிரத்து 220 இட்லி விற்பனையாகி உள்ளது. இது வழக்கத்தை விட கூடுதலாக சுமார் 4,000 அதிகம். 39,185 தயிர் சாதம் விற்றுள்ளது. இது வழக்கத்தை விட 13,000 அதிகம். சாம்பார் சாதம் 63,320 விற்பனையாகியுள்ளது. இது வழக்கத்தை விட 23,000 அதிகம்‘ என்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum