தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சேவை வரியை ரத்து செய்யக் கோரி 7-ல் தமிழ்த் திரையுலகினர் உண்ணாவிரதம்

Go down

சேவை வரியை ரத்து செய்யக் கோரி 7-ல் தமிழ்த் திரையுலகினர் உண்ணாவிரதம் Empty சேவை வரியை ரத்து செய்யக் கோரி 7-ல் தமிழ்த் திரையுலகினர் உண்ணாவிரதம்

Post  ishwarya Sat Mar 23, 2013 1:29 pm

மத்திய அரசு விதித்துள்ள 12.3 சதவிகித சேவை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்த் திரையுலகினர் வரும் ஜனவரி 7-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தலைவர் ஆர்.சரத்குமார் கூறியது:
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறை, திரைப்படத் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் ஏனைய திரைப்படத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்துப் பிரிவினருக்கும் கடந்த ஜூலை மாதம் முதல் மத்திய அரசின் 12.3 சதவிகித சேவை வரி அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறையைச் சார்ந்த அனைத்துப் பிரிவினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, மத்திய அரசு சேவை வரியை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜனவரி 7-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
இப்போராட்டத்தில் தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம், திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், சின்னத்திரை நடிகர்கள் சங்கம் உள்ளிட்ட அனைத்துச் சங்கங்களும் பங்கேற்கும். அனைத்துச் சங்கங்களுக்கும் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சேவை வரியை ரத்து செய்ய மத்திய அரசிடம் தமிழ்த் திரையுலகம் வலியுறுத்தல்
» சேவை வரிக்கு எதிர்ப்பு … ரஜினி, கமல் உள்பட தமிழ்த் திரையுலகினர் நாளை உண்ணாவிரதம்
» நாளை திரையுலகினர் உண்ணாவிரதம்
» சேவை வரிக்கு எதிர்ப்பு திரையுலகினர் உண்ணாவிரதம்
» அண்ணா ஹசாரேவிற்கு ஆதரவாக தமிழ்த் திரையுலகினர் நாளை உண்ணவிரதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum