புகைத்தல் எச்சரிக்கையை தவிர்க்கக் கோரிய மனு நிராகரிப்பு
Page 1 of 1

புகைத்தல் மூலமான ஆபத்துக்கள் குறித்த எச்சரிக்கைகளை சிகரட் பெட்டிகளில் பொறிக்க வேண்டும் என்ற அரசாங்க உத்தரவை எதிர்த்து சிகரட் தயாரிப்பு நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த மனுவை இலங்கை நீதிமன்றம் ஒன்று தள்ளுபடி செய்துள்ளது.
இலங்கையில் சிகரட் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சிலோன் டுபாக்கோ கம்பனி என்னும் நிறுவனத்தினால், இது குறித்த அரச ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்ற மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
ஆனால், அந்த உத்தரவை ரத்துச் செய்ய முடியாது என இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த அரச ஆணையைப் பிறப்பிக்க சுகாதார அமைச்சருக்கு அதிகாரம் கிடையாது என்று காரணம் காட்டியே அந்த நிறுவனம் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.
ஆனால், இந்த கட்டளைச் சட்டம் சட்டத்துக்கு முரணானது என்று நிரூபிப்பதற்கு அந்த நிறுவனம் தவறிவிட்டதாகக் கூறி நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
இதன் மூலம் சம்பந்தப்பட்ட அந்த கட்டளைச் சட்டத்தை மார்ச் மாதம் முதல் அமல்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக இலங்கை போதைப்பொருள் ஒழிப்பு நிறுவனத்தை சேர்ந்த ஒல்கொட் குணசேகர பிபிசியிடம் கூறினார்

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சிங்கள மொழி நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றக் கோரிய மனு நிராகரிப்பு
» தவிர்க்கக் கூடிய தவறுகள்
» கோரிய வரந்தரும் கோக்களை ஈசன்
» கோரிய வரந்தரும் கோக்களை ஈசன்
» காவிரி: நிபுணர் குழு அறிக்கையை தமிழக அரசு நிராகரிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum