கோரிய வரந்தரும் கோக்களை ஈசன்
Page 1 of 1
கோரிய வரந்தரும் கோக்களை ஈசன்
கோக்கலை திருத்தலத்திற்கு இப்பெயர் வழங்கப்படுவதன் பின்னணியில் ஒரு சுவையான
சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒருமுறை விஜய நகரத்து அரசர் ஒருவர்,
இத்திருக்கோயிலுக்கு பிரதோஷ வழிபாடு செய்ய வருவதாக தெரிவித்து அதிகாரியை
அனுப்பி வைத்துள்ளார். பிரதோஷ நேரம் நெருங்கிவிடவே ‘‘அரசர் வரலாமா?’’ என்று
குருக்களிடம் அதிகாரி வந்து கேட்டார். அரசர் வரப்போகும் செய்தி கேட்டு
பரபரப்பில் ஆயத்தப்படுத்த எடுத்த ரிஷப வாகனம் கை தவறி கீழே விழுந்து
உடைந்தது. இன்னும் சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளவில்லை என்ற செய்தியை
அதிகாரியிடம் கூற தைரியம் இல்லாத குருக்கள் சமயோசிதமாக, “கைலாயத்திலிருந்து
நேரே வந்திருப்பதால் கோக்களையாக இருக்கின்றது’’ என்று கூறியுள்ளார்.
‘‘அப்படியா, சரி. தேற்றுங்கள்’’ என்று கூறிவிட்டு அதிகாரி சென்று விட்டார்.
அன்று முதல் குருக்களின் சாமர்த்தியமான பதிலே ஊரின் பெயராகியது. தற்பொழுது
இவ்வூர் கோக்கலை என்று மறுவி விட்டது.
விண்ணவரும் மண்ணவரும் போற்றி
வழிபட்ட இத்திருக்கோயிலில் தற்போது எஞ்சி இருப்பவர்கள் சதா ஈசனையே
இமைக்காமல் பார்த்திருக்கும் நந்தி, கோயில் இருந்ததற்கான அடையாளமான
கருவறையில் வீற்றிருக்கும் ஈசன், கருவறையின் வடபுறம் நடப்பட்டிருக்கும்
கல்லில் காணப்படும், இன்னார் என்று அடையாளம் காட்ட முடியாத இரு பெண்
தெய்வங்களின் உருவங்கள் மட்டுமே
இருந்தும், இறைவனை இப்பகுதி மக்கள்
மறக்கவில்லை. இறைவனும் இவர்களைக் கைவிட வில்லை. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை
கும்பாபிஷேகம் செய்யப்படாத கோயில்களில் இறைசக்தி நிலைத்திருக்காது
என்பார்கள். ஆனால் கோக்கலை ஈசனே இந்த விதிமுறையைத் தாண்டி பக்தர்களுக்கு
வரம் அளித்த வண்ணம் நிலைத்துள்ளார். ஈசன் மீது பக்தி கொண்டிருப்பதை தேவாரம்
பாடித்தான் நிரூபிக்க வேண்டுமா என்ன?
கோக்கலை வாழ் இளைஞர்கள்
பலர், இந்தத் திருமேனி முன் நின்று வழிபட்டு தங்கள் வாழ்வின் முக்கிய
தருணமாகிய திருமணத்தை செய்து கொள்கின்றனர். நாகேஸ்வரரும் தனது
மெய்யன்பர்களைக் கைவிடவில்லை. தன் திருமுன் திருமணம் செய்து கொண்ட அத்தனை
தம்பதியருக்கும் தனது அருட்பிரசாதமாக முதல் குழந்தையை ஆண் குழந்தையாகவே
அருளி தனது திருவருட்திறனை வெளிப்படுத்துகிறார் என்பதை இவ்வூர் மக்கள்
சொல்லிச் சொல்லி மகிழ்கின்றனர்.
சிவனடியார் திருக்கூட்டம் வாழ்ந்த,
வாழ்கின்ற மக்கள் நிறைந்த இவ்வூர் புண்ணிய பூமியாகும். இத்தல திருப்பணியைத்
தொடங்க ஈசனின் திருக்குறிப்பை அறிய சிவனடியார்கள் ஈசனை நாடி வந்த போது
மாலை கதிரோன் தன் ஒளி வெள்ளத்தால் அடி முதல் முடி வரை ஜொலிக்க வைத்த
காட்சியை தரிசித்தனர். அதனால் மகிழ்வுற்று, ‘ஹர ஹர’ கோஷமிட்டனர்.
ஒளியற்ற
கருப்பு நிலக்கரி காலத்தால் ஒளிபெற்று பிரகாசிக்கும் உறுதியான வைரமாக மாறி
உயர்ந்து விடுவது போல, காலம் என்னும் விந்தை தத்துவத்திற்கு ஆளாகி
ஈசனுக்கும் அருள்மறை காலம் வந்து இருள் சூழும் நேரம் வந்தாலும் ஆதவனின் ஒளி
வெள்ளம் ஈசனின் மீது பட்ட காலம் முதல் கோக்கலை ஈசன் மீண்டும் அருள்மழை
பொழியும் காலம் வந்து விட்டது. பணம் படைத்த நல்ல மனம் கொண்ட பலரால் கோயில்
புதுப்பிக்கப்பட்டு ஈசனின் கருணை அனைவருக்கும் பொழியும் காலம் வெகு
தொலைவிலில்லை. திருப்பணிக்கு உதவும் கரங்களை ஆதரவுடன் பற்றி கண்ணில்
ஒற்றிக் கொள்ள ஊர்மக்கள் தயாராக உள்ளார்கள்.
இத்திருக்கோயில்
நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இவ்வூருக்கு
திருச்செங்கோடு&எலச்சி பாளையம், திருச்செங்கோடு&வையப்பன்மலை,
திருச்செங்கோடு&வேலக்கவுண்டன்பட்டி வழிகளில் செல்லலாம்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» கோரிய வரந்தரும் கோக்களை ஈசன்
» கோபம் நீக்கும் ஈசன்
» ஈசன் எடுத்த தசா வடிவங்கள்
» தீமைகள் விலக்கி வைக்கும் திற்பரப்பு ஈசன்
» சிங்கள மொழி நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றக் கோரிய மனு நிராகரிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum