தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பகத் சிங்கின் பெயரை வைத்ததால் வந்த சர்ச்சை

Go down

பகத் சிங்கின் பெயரை வைத்ததால் வந்த சர்ச்சை Empty பகத் சிங்கின் பெயரை வைத்ததால் வந்த சர்ச்சை

Post  meenu Fri Mar 01, 2013 5:19 pm

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கின் பெயரை பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு வீதிச் சந்திக்கு வைப்பது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அது பாகிஸ்தானின் அடையாளம் என்ன என்பது குறித்த போர்க்களமாக மாறியுள்ளது என்றுகூடச் சொல்லலாம்.

இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மற்றும் ஏனைய சமூகத்தவர்களின் பெயர்களைக் கொண்ட வீதிகள், தெருக்கள் மற்றும் சந்திகளைக் கொண்டு விளங்கியதால், லாகூரின் வரலாற்றுப் பாரம்பரியம், கலாச்சாரத்தின் மீதான காதல், அதன் பன்முகத்தன்மை ஆகியன பெரிதும் மெச்சப்பட்டு வந்தன என்பது உண்மைதான்.

ஆனால் இன்று இந்த நிலைமை எல்லாம் மாறிவருகின்றது. இப்போதெல்லாம் அந்த தெருக்களுக்கெல்லாம் இஸ்லாமிய கதாநாயகர்கள், முக்கியஸ்தர்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன.

இப்படியாக பெயர்கள் மாற்றப்பட்டு வந்தமை குறித்து பெரிதாக அங்கு பிரச்சினை எதுவும் இருக்கவில்லை. ஆனால் பகத்சிங்கின் பெயரை ஒரு சந்திக்கு வைக்கும் முடிவு எடுக்கப்பட்டபோதுதான் அது பிரச்சினையை உருவாக்கியுள்ளது. மதக் குழுக்களும், சிவில் சமூகமும் இதற்காக மோதிக்கொள்கின்றன.

இந்திய தேசியவாதியான பகத் சிங் இந்திய சுதந்திரபோராட்ட இயக்கத்தின் மிகவும் முக்கிய புள்ளி. சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த பகத் சிங் தனது பதின்ம வயதிலேயே புரட்சிகர நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
பகத் சிங்

பகத் சிங்

லாலா லஜ்பதிராய் என்னும் அரசியல்வாதியின் கொலைக்கு பழிவாங்கும் வகையில் பிரிடிஷ் பொலிஸ்காரர் ஒருவரை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், தனது 23 வது வயதில் பகத் சிங் தற்போதைய லாகூரில் உள்ள சாட்மன் சதுக்கத்தில் தூக்கில் இடப்பட்டார்.

கடந்த செப்டம்பரில் லாகூரின் மாவட்ட அரசாங்கம், சாட்மன் நகரில் உள்ள ஃபாவாரா சவுக் என்னும் சதுகத்துக்கு இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான பகத் சிங்கின் பெயரை இடுவது என்று பிரகடனம் செய்தது. சுதந்திரப்போராடத்துக்கான அவரது அர்ப்பணிப்புகளை கௌரவிப்பதற்காகவே இந்த பிரகடனம் செய்யப்பட்டது.

கிட்டத்தட்ட 80 வருடங்களுக்கு முன்னர் பகத் சிங் சாட்மன் சதுக்கத்தில் தூக்கிலிடப்பட்டார். இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லைகளின் இருபக்கத்திலும் உள்ள அவரது ஆதரவாளர்கள் இதற்கான கோரிக்கையை விடுத்திருந்தனர்.

அவர் சீக்கிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவர் ஒரு கடவுள் மறுப்பாளர் என்று பல சரித்திர ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

ஆனால், பல முஸ்லிம் மதக்குழுக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கடும்போக்கு தொண்டு நிறுவனமான ஜாமத் உட் டாவாவின் பேச்சாளர் ஒருவர் கூறுகியில், பகத் சிங்கை, சுதந்திரப் போராட்டத்துக்கான அவரது பங்களிப்பை நாங்கள் மதிக்கிறோம், ஆனால், இன்றைய காலகட்டத்தில் சர்ச்சை என்பது இஸ்லாத்துக்கும் இஸ்லாம் அல்லாதவர்களுக்கும் இடையில் என்று இருக்கையில், இஸ்லாமிய பெயர்கள், நபர்கள், கொள்கைவாதிகளின் பெயர்களை வைக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

ஆனாலும், பகத் சிங்கின் பெயரை வைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது.

இந்த சதுக்கத்துக்கு குர்மட் ஈ ரசூல் என்ற பெயரை வைத்து அழைப்போம் என்றும் பகத் சிங்கின் பெயருக்கு எதிராக போராடங்களை நடத்துவோம் என்றும் இஸ்லாமிய மத அமைப்புக்கள் கூறுகின்றன.

உள்ளூர் வணிகர்கள் லாகூர் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து ஒரு வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்கள்.
பன்முக கலாச்சாரங்களைக் கொண்ட நகராக ஒரு காலத்தில் லாகூர் திகழ்ந்தது

பன்முக கலாச்சாரங்களைக் கொண்ட நகராக ஒரு காலத்தில் லாகூர் திகழ்ந்தது

பொதுவாகவே என்ன பெயர் வைப்பது என்பது குறித்து பொதுமக்கள் பெரிதாகக் கவலை கொள்வது கிடையாது. ஆனால் மத அமைப்புக்கள் பொதுமக்கள் மீது அழுத்தத்தைக் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சீக்கிய மதத்துடன் சம்பந்தப்பட்டவர்களின் பெயரை நாங்கள் எப்படி எங்கள் குழந்தைகளுக்கு சொல்ல முடியும் என்று அவர்கள் வாதிடுகிறார்கள். இந்துக்கள் பள்ளிவாசல்களை இடிக்கும் போது எப்படி அதனை செய்யலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

பள்ளிவாசல்களை இந்துக்கள் தொடர்ந்து இடிக்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தாலும், இத்தகைய கூற்றுக்களுக்கு பாகிஸ்தானில் இலகுவில் ஆதரவாளர்களை பெற முடியும் என்பதுதான் இங்கு பிரச்சினை.

விக்டோரியா மகாராணியர், எட்வேர்ட் மன்னர், பகத் சிங், லாரன்ஸ் பிரபு என்று பலருக்கு அங்கு முன்னர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அவையெல்லாம் தற்போது அருங்காட்சியகங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டன.

மதக் காரணங்களுக்காகவே இந்த சிலைகள் எல்லாம் அருங்காட்சியகங்களுக்கு அனுப்பப்பட்டதாக முன்னணி அகழ்வாராச்சியாளரும், லாகூர் அருங்காட்சியகத்தின் முன்னாள் தலைவருமான சைஃப் உர் ரஃமான் டர் கூறுகிறார்.

''இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னதாக இருந்த சமூக, கலாச்சார முக்கியஸ்தர்களை இங்கு எதிர்ப்பவர்கள் மிகவும் சிலர்தான். ஆனால் அவர்களுக்கு மீடியாக்களில் இலகுவாக இடம் கிடைத்து விடுவதும், அவர்கள் உரக்கக் கத்துவதும் எல்லாரையும் சென்று அடைந்துவிடுகின்றன'' என்றும் அவர் கூறுகிறார்.

பகத் சிங் இந்துக்களுக்காகவோ, சீக்கியர்களுக்காகவோ, முஸ்லிம்களுக்காகவோ போராடியவர் அல்ல. ஒட்டுமொத்த இந்திய சுதந்திரத்துக்காக அவர் நடத்திய போராட்டத்தின் விளைவாகத்தான், அதன் தொடர்ச்சியாகத்தான் பாகிஸ்தான் என்ற நாடு கூட இன்று உருவாகியிருக்கிறது. இது வரலாறு.

'' வரலாறு தொடரும்... தனிநபர்கள் தமது சொந்த விருப்பு காரணமாக அதனை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம், ஆனால் அதனை எவரும் முழுமையாக மறுதலிக்க முடியாது.. வரலாறு தொடரும்...'' என்றும் சைப் உர் ரஃமான் டார் கூறுகிறார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum