எது போர்க்கவிதை--சர்ச்சை
Page 1 of 1
எது போர்க்கவிதை--சர்ச்சை
ஆப்கான் போரில் , தாலிபான் இயக்கப் போராளிகள் எழுதிய கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் அடங்கிய கவிதைத் தொகுப்பு ஒன்று கடந்த வியாழக்கிழமை லண்டனில் வெளியாகியிருக்கிறது.
இந்த புத்தகத்தில், தாலிபான் போராளிகள் 2001ம் ஆண்டிலிருந்து நடந்த போருக்கு முன்னும் பின்னும் எழுதி, தாலிபானின் இணைய தளத்தில் பிரசுரிக்கப்பட்ட பஷ்டூ மொழிக்கவிதைகள் மொழியாக்கம் செய்யப்பட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளன. இந்த கவிதைத் தொகுப்பில் இருக்கும் கவிதைகள், தாலிபானின் இணைய தளத்தில் பிரசுரிக்கப்பட்டவை என்பதால் அவை அந்த இயக்கத்தின் கொள்கை முழக்கப்பாடல்களே தவிர, போர்க்கவிதைகள் அல்ல என்று இந்த்த் தொகுப்பு முயற்சியை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள்.
போரினால் ஏற்படும் அழிவுகளால் உண்டாகும் மனித நெருக்கடி, அது ஏற்படுத்து கழிவிரக்கம், போரைப்பற்றிய ஒரு அருவெறுப்பு ஆகியவைகளை வெளிப்படுத்துவதே நல்ல போர்க்கவிதை என்ற ஒரு கருத்துருவாக்கம் மேலை நாடுகளில் உள்ள நிலையில், இது போன்ற பிரச்சாரக் கவிதைகள் போர்க்கவிதைகள் ஆகுமா என்ற இந்த சர்ச்சை குறித்து, இலங்கையில் போர் நடந்த போது , போரில் மக்களின் அனுபவங்கள் குறித்து கவிதைகளை எழுதிய இலங்கைத் தமிழ்க் கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், அவ்வாறு ஒட்டுமொத்தமாக கூற முடியாது. இலங்கையைப் பொறுத்தவரை, ஈழக்கவிஞர்களின் சில படைப்புகள் விடுதலைப்புலிகளால் பிரசுரிக்கப்பட்டன,சில அவ்வியக்கத்தால் எதிர்மறையாகப் பார்க்கப்பட்டன என்றார்.
போரும் கவிதையும் -வ.ஐ.ச.ஜெயபாலன் பேட்டி
போரும் கவிதையும் --ஜெயபாலன் பேட்டி
எது போர்க்கவிதை என்ற சர்ச்சை பற்றி இலங்கைத் தமிழ்க் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் கருத்துக்கள்
கேட்கmp3
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்
மாற்று மீடியா வடிவில் இயக்க
ஆனால் போர்க் கவிதை என்றால், அது போரை நிராகரித்துத்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் மேலை நாடுகளில் இருக்கலாம். இன்னும் தேச விடுதலை பெறாத பல கீழைத் தேய சமூகங்களில், இவ்வாறு போரை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது சாத்தியமல்ல. அவ்வாறு நிராகரிப்பது என்பது இருக்கின்ற சமூக அநீதிகளை நியாயப்படுத்துவதாக அமைந்துவிடும்.
இவ்வாறு சொல்வது என்பது போரை நியாயப்படுத்துவதாகாது என்றார் ஜெயபாலன்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» எது போர்க்கவிதை--சர்ச்சை
» அனானிமஸ் திரைப்படம் குறித்த சர்ச்சை
» மங்காத்தா – புதிய சர்ச்சை
» மாணவர்களிடம் பள்ளிக்கூடங்கள் பணம் அறவிடுவதால் சர்ச்சை
» இராமாயணம்: பல்கலை பாடத்திட்டத்தில் சர்ச்சை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum