தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சீனா: சிறார்கள் காப்பகத்தில் தீ; 7 குழந்தைகள் பலி

Go down

சீனா: சிறார்கள் காப்பகத்தில் தீ; 7 குழந்தைகள் பலி Empty சீனா: சிறார்கள் காப்பகத்தில் தீ; 7 குழந்தைகள் பலி

Post  meenu Fri Mar 01, 2013 5:16 pm

சீனாவில் அனாதைச் சிறார்களின் காப்பகமொன்றில் பரவிய தீயினால் குறைந்தது ஏழு சிறார்கள் பலியாகியுள்ளனர்.
தொடர்புடைய விடயங்கள்

உலகம்

சீனாவின் வடக்கே ஹெனான் மாகாணத்தில், உள்ளூர் நேரப்படி காலை 08:30 மணியளவில் தனியார் சிறார் இல்லமொன்றில் பரவிய தீ இரு மணிநேரத்தில் கட்டுபடுத்தப்பட்டு விட்டதாக அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

நான்கு சிறார்கள் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் மூன்று சிறார்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படும் வழியிலேயே உயிரிழந்துள்ளனர்.

தீக்கான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

தாய் தந்தையர் இல்லாத மற்றும் கைவிடப்பட்டக் குழந்தைகளை பெண்ணொருவர் இந்த வீட்டில் வைத்துப் பராமரித்துவந்துள்ளார்.

தெருவோரம் வியாபாரம் நடத்தி பிழைத்துவந்த இந்தப் பெண் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பெருமளவிலான குழந்தைகளை தனது வீட்டில் பராமரித்துவந்துள்ளார்.

தீ பரவிய போது வீட்டில் எத்தனை சிறார்கள் இருந்துள்ளார்கள், எத்தனைபேர் காயமடைந்துள்ளனர் என்பது போன்ற தகவல்கள் இன்னும் தெரியவரவில்லை.

ஹெனான் மாகாணத்தில் சிறார்கள் சம்பந்தப்பட்ட பல சம்பவங்கள் அண்மைய மாதங்களில் நடந்துள்ளன.

கடந்த டிசம்பர் மாதம் கத்தி வைத்திருந்த நபர் ஒருவரினால் இதே பிரதேசத்தில் பள்ளிக்கூடமொன்றில் இருந்த 23 சிறார்கள் காயப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» குழந்தைகள் அம்மாவை கண்டது அழுகையை நிறுத்துவது ஏன்?குழந்தைகள் தாயிடம் அதிக பாசம் காட்டுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். சில குழந்தைகள் அழுவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அம்மாவை பார்த்தாலே உடனே அழுகையை நிறுத்திவிடும். பிறந்து சில மாதங்களில் ஆட்களை
» மனநல காப்பகத்தில் த்ரிஷா!
» ஆனைமலை புலிகள் காப்பகத்தில் விலங்குகள் கணக்கெடுப்பு துவங்கியது
» சீனா சீனா சீனா
» கொடைக்கானலில்உருவான ஷங்கரின் சீனா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum