தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் விலங்குகள் கணக்கெடுப்பு துவங்கியது

Go down

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் விலங்குகள் கணக்கெடுப்பு துவங்கியது  Empty ஆனைமலை புலிகள் காப்பகத்தில் விலங்குகள் கணக்கெடுப்பு துவங்கியது

Post  ishwarya Fri May 24, 2013 2:45 pm

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் விலங்குகள் கணக்கெடுப்பு துவங்கியது  Policeanai
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, உடுமலை ஆகிய வனக்கோட்டங்களில் 6
வனசரகங்கள் உள்ளன. சிறுத்தை, புலி, யானை, சிங்கவால் குரங்கு, மான்,
வரையாடு, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன உயிரினங்கள் உள்ளன.

ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் மே மாதங்களில் இங்கு 2 கட்டமாக வன விலங்குகள்
கணக்கெடுப்பு பணி வனத்துறை சார்பில் நடத்தப்படும். முதல் கட்ட கணக்கெடுப்பு
ஜனவரி 1 முதல் 4ம் தேதி வரை நடந்தது. 2ம் கட்ட கணக்கெடுப்பு பணி நேற்று
துவங்கியது. வறட்சியின்போது நீர் நிலைகளை தேடி வரும் வனவிலங்குகளை
கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டது.

பொள்ளாச்சி வனகோட்டத்தில் வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி,
உலாந்தி(டாப்சிலிப்) ஆகிய 4 சரகங்களில் மொத்தம் உள்ள 48,617 ஹெக்டேர்
சுற்றளவில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நடக்கிறது. புலிகள் காப்பக
உயிரியலாளர் ஆறுமுகம், வனசரகர்கள் கணேஷ்ராம், ஆரோக்யராஜ் சேவியர் தலைமையில்
வன ஊழியர்கள், வேட்டைத் தடுப்பு காவலர்கள், இயற்கை ஆர்வலர்கள், கல்லூரி
மாணவர்கள் உள்பட பலர் இந்த கண்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

72 நேர் கோடுகளாக பிரிக்கப்பட்டுள்ள புலிகள் காப்பக வன பகுதியில் ஒவ்வொரு
நேர் கோட்டிலும் 200 மீட்டர் தூரத்திலும் 20 மீட்டர் கயிறு கொண்டு
இருபுறங்களிலும் உள்ள விலங்குகளில் எச்சம், காலடித்தடம், மரங்களில் உள்ள
நகக்கீறல்கள், தாவர வகைகள் உள்ளிட்ட தடையங்களை கண்டறிந்து கணக்கெடுத்தனர்.
கணக்கெடுப்பின்போது, திசைகாட்டும் கருவி, நிலைமானி, தூரம் அளக்கும் கருவி,
கயிறு உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன. இப்பணி வரும் 24ம் தேதி வரை தொடர்ந்து
நடக்கிறது.

சுற்றுலா பயணிகளுக்கு தடை இல்லை: விலங்குகள் கணக்கெடுப்பின்போது, ஆனைமலை
புலிகள் காப்பகம் பூட்டப்பட்டு, டாப்சிலிப், குரங்கு அருவி உள்ளிட்ட
பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பது வழக்கம். ஆனால்
இந்த முறை கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகளவு
உள்ளது. எனவே வனப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை
விதிக்கப்படவில்லை என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum