தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டிரீம் லைனர் விமானங்கள் முற்றாக தரையிறக்கப்பட்டன

Go down

டிரீம் லைனர் விமானங்கள் முற்றாக தரையிறக்கப்பட்டன Empty டிரீம் லைனர் விமானங்கள் முற்றாக தரையிறக்கப்பட்டன

Post  meenu Fri Mar 01, 2013 5:04 pm

உலகம் முழுவதிலும் டிரீம் லைனர் விமானங்கள் பாதுகாப்பு குறித்து எழுந்த கவலைகளையடுத்து தரையிறக்கப்பட்டன.

ஏர் இந்தியா உள்ளிட்ட 8 விமான போக்குவரத்து நிறுவனங்கள் 50 போயிங் டிரீம் லைனர் விமானங்களை இயக்கி வந்தன.

போலாந்து, இந்தியா மற்றும் கத்தார் ஆகியவை வியாழக்கிழமை முதல் விமானங்களை தரையிறாக்குவதாக அறிவித்துள்ளன. ஜப்பான், அமெரிக்கா மற்றும் சிலி ஆகிய நாடுகள் புதன்கிழமையன்றே இவ்விமானங்களை இயக்குவதை நிறுத்திவிட்டன.

ஒரு தீ விபத்து மற்றும் வேறு சில சம்பவங்கள் அடுத்தடுத்து பதிவானதை தொடர்ந்து விமானப் பாதுகாப்பு குறித்து அச்சம் எழுந்துள்ளது.

போயிங்கின் 787 விமானங்கள் தான் டிரீம் லைனர் என்று அழைக்கப்படுகின்றன. புதிய வகையான லித்தியம் ஐயான் மின்கலம் மூலம் இயங்கும் இந்த விமானங்கள் எடை குறைவாக இருக்கும்; குறைவான எரிபொருளை பயன்படுத்தும் என்று தயாரிப்பாளர்கள் கூறியிருந்தனர். ஆனால் இப்போது மின்கலன்களில்தான் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தி்ன் விமானவியல் துறையில் இணைப் பேராசிரியர் டாக்டர் செந்தில் குமார் அளித்த செவ்வியை நேயர்கள் வியாழக்கிழமை நிகழ்ச்சியில் கேட்கலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum