அமெரிக்காவின் அறிக்கையில் உண்மைக்க புறம்பான விடயங்கள். முற்றாக நிராகரிக்கின்றோம். ஜெனிவாவில் மகிந்த சமரசிங்க.
Page 1 of 1

அமெரிக்கா, இலங்கைக்கு எதிராக சமர்ப்பித்துள்ள அறிக்கையில், இலங்கை தொடர்பாக போலியான உண்மைக்கு புறம்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையினை தாம் முற்றாக நிராகரிப்பதாகவும் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இதனை தாம் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளை சமர்ப்பித்த, மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகராலய அறிக்கை, வரையறைகள் மற்றும் அதிகாரங்களை மீறச்சென்றதாகவும், அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனூடாக சுயாதீன நாடொன்றின் இறைமையில் பாதிப்பு ஏற்படுவதாகவும், எல்லையை மீறி இந்த விடயம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், அமைச்சர் மஹிந்த சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு நாடு தொடர்பாக சமர்ப்பிக்கப்படும் இவ்வாறான அறிக்கைகளை, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் ஆலோசனை குழு நிபுணர்கள் தொடர்ந்தும், பரிசீலிக்கின்றனர். இதனால் இதில் அடங்கியுள்ள உண்மைக்கு புறம்பான விடயங்களை நீக்குமாறு மஹிந்த சமரசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் இலங்கை ஒருபோதும் நட்புறவு ரீதியாக செயற்படுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளவில்லை. 2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தம் இடம்பெற்றபோது கூட, மிகவும் நெருக்கமான முறையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்துடன் தொடர்பினை ஏற்படுத்திய விதத்தையும் அவர் நினைவுபடுத்தினார். இதற்கு முன்னரிருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகர், மனிதாபிமான நடவடிக்கைகள் இடம்பெற்ற 2007ம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இந்த நாட்டின் நிலைமைகளை நேரில் கண்டறிந்த அவர், ஒருபோதும் இவ்வாறான உண்மைக்கு புறம்பான தகவல்களை சமர்ப்பிக்கவில்லையென்றும், அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை எந்த சந்தர்ப்பத்திலும், திறந்த மனதுடனும், நேர்மையுடனும் செயற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், மனித உரிமைகள் தொடர்பாக, பகிரங்கமாக பேசுவதற்கு, இலங்கை ஒருபோதும் பின்நிற்காது என்றும், தெரிவித்தார்.
நவநீதம் பிள்ளை, இலங்கைக்கு வருகை தந்து, இலங்கையின் நிலைமைகளை நேரில் கண்டறிந்து, தெளிவான புரிந்துணர்வை பெற்றுக்கொள்ளுமாறு இதற்கு முனு;னர், அழைப்பு விடுத்துள்ளோம். எனினும், இதுவரை உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு வருகை தரவில்லை. இலங்கைக்கு எதிராக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள், நிரூபிக்க முடியாத உண்மைக்கு புறம்பான விடயங்கள் என்பதை வலியுறுத்தியுள்ள அமைச்சர் மஹிந்த சமரசிங்க, இவ்வாறான விடயங்களை சமர்ப்பிக்கும்போது, அவற்றை நிரூபிப்பதற்கு சான்றுகள் இருக்க வேணடுமென்றும், குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் எந்தவொரு விடயத்தையும் நிரூபிப்பதற்கான சான்றுகள் இதில் அடங்கவிலலையென்றும், நிரூபிக்க முடியாத அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் இவையென்றும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் உயர்ஸ்தானிகர் உட்பட அலுவலக அதிகாரிகளுக்கு இலங்கைக்கு வருகை தந்து, இலங்கையின் உண்மை நிலை தொடர்பாக உலகிற்கு உணர்த்துமாறு, அமைச்சர் மஹிந்த சமரசிங்க, வேண்டுகோள் விடுத்தார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஜெனிவாவில் இன்று பிற்பகல் 2 மணிக்கு மஹிந்த சமரசிங்க உரை
» டிரீம் லைனர் விமானங்கள் முற்றாக தரையிறக்கப்பட்டன

» ஆண்களின் அழகினைக் கெடுக்கும் விடயங்கள்! என்ன
» யுத்தவெற்றியில் தொங்கும் மகிந்த

Permissions in this forum:
You cannot reply to topics in this forum