அமெரிக்க எப் 35 விமானங்கள் தரையிறக்கப்பட்டன
Page 1 of 1

அமெரிக்கா தனது அதி நவீன போர் விமானமான எப் 35 ரக போர் விமானங்களை தரையிறக்கியுள்ளது. அந்த விமானத்தின் என்ஜின் பிளேடுகளில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள எட்வேர்ட் விமானப் படைத் தளத்தில் விமானப் படைக்காக தயாரிக்கப்பட்ட எப் 35 ரக விமானத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதைத் அடுத்து தற்போது 51 விமானங்களும் தரையிறக்கப்பட்டுவிட்டன.
விமானப் படைக்காக தயாரிக்கப்பட்ட விமானங்களும், கடற்படையின் தேவைக்காக தயாரிக்கப்பட்ட விமானங்களும் சற்றே வேறுபட்டவை என்றாலும் இரு வகை விமானங்களும் தரையிறக்கப்பட்டுள்ளன.
விமானப் படைக்காக தயாரிக்கப்படும் விமானங்கள், ஒடு பாதையில் ஒடி விண்ணில் பறந்து சென்று மீண்டும் ஒடு பாதையில் சற்றே நேரம் ஒடி நிற்கக்கூடியவை.
கடற்படைக்காக தயாரிக்கப்படும் விமானங்கள் – விமானந்தாங்கிக் கப்பலில் இருக்கும் சிறிய ஒடு தளத்தில் இருந்து பறக்க வல்லவை. அதேவேளை அவை செங்குத்தாக ஒரு இடத்தில் தரையிறக்கக்கூடியவை.
அமெரிக்க இராணுவம் மேற்கொண்ட மிகவும் செலவுபிடித்த ஆயுதத் தயாரிப்புத் திட்டமான எப் 35 திட்டத்திற்காக இதுவரை 400 பில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளன.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பிரச்சனை முற்றாக சரி செய்யப்படும வரை இந்த விமானங்கள் மீண்டும் இயக்கப்படமாட்டா என பென்டகன் தெரிவித்துள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் கடற்படையினரின் பயன்பாட்டுக்காக தயாரிக்கப்பட்ட எப் 35 ரக விமானமொன்றின் எரிபொருள் குழாய் அமைப்பு தொடர்பாக உற்பத்தியில் செய்யப்பட்ட தவறு கண்டறியப்பட்டது. அதன் பிறகு அந்த வகை விமானங்கள் தரையிறக்கப்பட்டன.
பிரிடன் தான் நிர்மாணித்துவரும் புதிய விமானந் தாங்கிக் கப்பல்களுக்காக, கடற்படைக்கான எப் 35 விமானங்களை வாங்கவுள்ளது. இந்த விமானங்கள் அதிக திறனுள்ள ராடார் வசதி கொண்டவை; மேலும் எதிரிகளின் கண்ணில் படாமல் இருக்கக் கூடிய ''ஸ்டில்த்'' தொழில் நுட்பம் கொண்டு இவை உருவாக்கப்பட்டுள்ளன.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தரையில் இறங்கும் விமானங்கள்
» டிரீம் லைனர் விமானங்கள் முற்றாக தரையிறக்கப்பட்டன

» சென்னை விமான நிலையத்தில் தீவிபத்து: விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum