முதுகு வலி வராமல் இருக்க
Page 1 of 1
முதுகு வலி வராமல் இருக்க
முதுகு வலிக்கு முக்கிய காரணம் முதுகெலும்பு பாதிப்புகள். அதிகபட்ச எடையை முதுகெலும்பின் கீழ்ப்பகுதி தான் சுமக்கிறது. எனவே கீழ்பகுதி எலும்பு. தசை, தசை நார்கள் பாதிக்கப்பட்டால் வலி உண்டாகும். முதுகு வலி குறிப்பாக 45-65 வயதுகளில் உள்ளவரை தாக்கும். 70% மக்கள் தங்கள் வாழ்வில் ஒரு முறையாவது முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள். இதில் 90 சதவிகித நபர்களுக்கு முதுகுவலி தற்காலிகமாக வந்து மறைகிறது. 5 சதவிகித நபர்களுக்கு 3-4 மாதங்கள் பாதிப்பு ஏற்பட்டு பின்பு குறைகிறது. மீதி 5, சதவிகித மக்கள் தீவிரமாக நரம்பு வலியால் பாதிக்கப்படுகிறார்கள்.
காரணங்கள்
ஆயுர்வேதத்தின் படி வாதக்கோளாறுகளால் முதுகுவலி உண்டாகிறது. ஒன்று உடற்பயிற்சி இல்லாமை இரண்டு அதிக உடற்பயிற்சி – இவை முதுகு வலிக்கு காரணமாகலாம்.
சரியான அங்கஸ்திதி இல்லாதது அதாவது தேகம், நிற்கும், உட்காரும், சாயும் முறை தவறுகள், கனமான எடையை உடலை வளைத்து தூக்குதல்.
முதுவலி வராமல் தடுக்க
சரியான முறையில் நடக்கவும். சௌகரியமான, உயரமில்லாத காலணிகளை அணியவும் பெட்டி போன்றவற்றை தூக்கிக் கொண்டு செல்கையில் அடிக்கடி பெட்டியை ஒரு கையிலிருந்து இன்னொரு கைக்கு மாற்றிக் கொண்டு நடக்கவும்.
நிற்கும் போது நிமிர்ந்து நிற்கவும். ஒரு காலிலேயே நிற்காமல், கால் மாற்றி நிற்கவும். அதிக நேரம் நின்று கொண்டிருக்க வேண்டும்.
உட்காரும் போது, முதுகை தாங்கிக் கொள்ளுபடியாக சாய்ந்து உட்காரவும் சாய்மானம் இல்லாமல் தரையில் உட்கார வேண்டும். உட்காரும் நாற்காலியில் பின்பாகம் (சாய்ந்து கொள்ள) நம் முதுகெலும்பு போல ஆங்கில் ‘s’ வடிவத்தில் அமைந்திருக்க வேண்டும். உங்கள் கால்கள் தரையை தொடுமாறு நாற்காலியின் உயரம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். கால் மேல் கால் போட்டு உட்கார வேண்டாம். அதிக நேரம் உட்கார நேர்ந்தால், அடிக்கடி எழுந்து நடக்கவும். கார் ஓட்டும் போது நடுமுதுகை தாங்கிக் கொள்ள சிறிய தலையணைகளை உபயோகிக்கலாம். ‘ஸீட்டின்’ ‘தலை தாங்கி’ (Head – rest) சரியாக பயணம் செல்கையில், அடிக்கடி காரை நிறுத்தி, சிறிது நடை பயிலவும். முதுகு வலி வந்தால் நிறுத்திவிட்டு ஒய்வு எடுத்துக் கொள்ளவும்.
தூங்கும் போது, குப்புற படுக்க வேண்டாம். பக்கவாட்டில் திரும்பிப்படுப்பது நல்லது. மல்லாந்து படுக்க வேண்டியிருந்தால் முழங்காலில் தலையணை வைத்துக் கொள்ளவும். படுக்கை அதிகமிருதுவாக இல்லாமல் கெட்டியாக இருக்க வேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முதுகுவலி வராமல் இருக்க - 2
» முதுகு வலி வராமல் தடுக்க
» முதுகு வலி வராமல் தடுக்க...
» பக்கவாதம் வராமல் இருக்க...
» முதுகுவலி வராமல் இருக்க - 1
» முதுகு வலி வராமல் தடுக்க
» முதுகு வலி வராமல் தடுக்க...
» பக்கவாதம் வராமல் இருக்க...
» முதுகுவலி வராமல் இருக்க - 1
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum