பக்கவாதம் வராமல் இருக்க...
Page 1 of 1
பக்கவாதம் வராமல் இருக்க...
பக்கவாதம் என்பது தற்போதைய நவீன விஞ்ஞான யுகத்தில் பலரையும் பாதிக்கக்கூடிய ஒரு நோயாகி விட்டது. பக்கவாத நோய் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன என்றாலும், பொதுவாக எதனால் இந்நோய் ஏற்படுகிறது. அந்நோய் வராமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி? என்பதை பார்ப்போம்.
மனிதனின் மூளைக்கு ஆக்சிஜனைக் கொண்டு செல்லும் இரத்தக் குழாயில் இரத்தம் உறைந்து நின்று விடுவதாலோ, இரத்தக் குழாய் வெடித்து விடுவதாலோ உடலின் ஒரு பகுதி உறுப்புகள் நிரந்தரமாகச் செயலிழந்து விடுகின்றன. இதனையே பக்கவாதம் என்று கூறுகிறோம்.
உலக அளவில் பக்கவாத நோய்க்கு ஆண்டுதோறும் சுமார் ஒன்றரை கோடி மக்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள். பெரும்பாலும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே இந்நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
பொதுவாக 80 சதவீதம் பேருக்கு இரத்தம் உறைந்து விடுவதாலேயே பாதிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
இரவிலோ அல்லது அதிகாலையிலோ ஏற்படும் இந்தப் பிரச்சினை, சிலருக்கு மரணத்தையும் ஏற்படுத்தலாம். பொதுவாக இந்தப் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு உடலின் ஒரு பகுதி முற்றிலுமாக செயலிழந்து விடுகிறது. பார்வைக் கோளாறுகள், பேச்சு தடுமாறுதல், நினைவாற்றல் குறைதல், உணர்வு மற்றும் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் போன்றவையும் ஏற்படும்.
பக்கவாத நோய்க்கு உடனடி சிகிச்சை அவசியம். முதலில் பக்கவாதம் என்று அறியப்பட்டவுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு நோயாளியைக் கொண்டு செல்ல வேண்டும்.
அங்கு உடனடியாக இரத்தம் உறைந்திருப்பதை நீக்கி, சீரான இரத்த ஓட்டத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
அண்மைக்கால ஆய்வின்படி இரத்தக் குழாய் பாதிப்பு காரணமாக பக்கவாதத்தை எதிர்கொள்ள, பாதிப்பு ஏற்பட்ட நான்கரை மணி நேரத்துக்குள் ஆல்டிபிளேஸ் மருந்தைச் செலுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.
மொத்தம் 821 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின்படி, 418 பேருக்கு ஆன்டிபிளேஸ் மருந்தும், எஞ்சிய 403 பேருக்கு ஆன்டிபிளேஸ் அல்லாத மாதிரி மருந்தும் ("பிளேஸிபோ') அளிக்கப்பட்டது. மாதிரி மருந்தைக் காட்டிலும், ஆல்டிபிளேஸ் மருந்து கொடுக்கப்பட்ட 418 நோயாளிகளுக்கு மூன்றரை மணி நேரத்திற்குள் 34 சதவீத அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
எனவே பக்கவாத நோய்க்கான அறிகுறிகள் தெரிய வந்து, மூன்றரை மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்ட நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்தல் மிகவும் அவசியம்.
என்றாலும் இயந்திரகதியாகிப் போன இவ்வுலகில் அன்றாடம் சில எளிய உடற்பயிற்சிகளை முதியவர்கள் மேற்கொள்ளலாம். சிறிது தூரத்திற்கு நடைபயிற்சி, மூச்சுப் பயிற்சி போன்றவை இதில் அடங்கும்.
வெளியே செல்ல இயலாதவர்கள் வீட்டிற்குள்ளேயோ அல்லது மொட்டை மாடி, தோட்டம் போன்ற இடங்களிலோ அதிகாலை நேரத்தில் வாக்கிங் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். இதனால் இரத்த ஓட்டம் தடைபடுவது தடுக்கப்படும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முதுகுவலி வராமல் இருக்க - 1
» முதுகுவலி வராமல் இருக்க - 2
» முதுகுவலி வராமல் இருக்க - 1
» முதுகுவலி வராமல் இருக்க - 2
» நெஞ்சு வலி வராமல் இருக்க
» முதுகுவலி வராமல் இருக்க - 2
» முதுகுவலி வராமல் இருக்க - 1
» முதுகுவலி வராமல் இருக்க - 2
» நெஞ்சு வலி வராமல் இருக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum