தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எலும்புகள் வலுப்பெற

Go down

எலும்புகள் வலுப்பெற Empty எலும்புகள் வலுப்பெற

Post  meenu Fri Mar 01, 2013 1:26 pm

“என்பிலதனை வெயில் போலக் காயுமே
அன்பிலதனை அறம்” திருக்குறள்.
எலும்பில்லாத உயிர் தாங்கிய புழு போன்றவற்றை வெய்யில் காய்ந்து வருத்துவதைப் போல அன்பில்லாத உயிரை வாட்டும் அறம் என்பது இந்த குறளின் பொருள்.
உடலின் அஸ்திவாரம் எலும்பு. கொல்லாஜென் புரத நார்கள் எலும்பு தாது உப்புகளுடன் ஊறி எலும்பாகின்றன. இந்த எலும்பு தாது உப்புக்கள் கால்சியம் கார்பனேட்டும் கால்சியம் பாஸ்பேட்டும் ஆகும். உடலில் உள்ள கால்சியத்தில் 99% எலும்பிலும், பற்களிலும் உள்ளது. ரத்தத்தில், 100 மி.லி ரத்தத்தில் 10 மி.கி. அளவில் கால்சியம் உள்ளது.
மனிதனின் தினசரி கால்சியத் தேவை ஒரு கிராமாகும். பாலிலும், சீஸிலும் (Cheese) கால்சியம் நிறைந்துள்ளது. கால்சியம் உடலில் சேர உதவுவது விட்டமின் டி (D). கால்சியம் அளவு உடலில் அதிகமானால், சிறுநீரகம், மூத்திரப்பைகளில் கற்களாக உருவெடுக்கும்.
எனவே எலும்புகள் வலிவடைய முதலில் விட்டமின் ‘டி’ தேவை. இது சூரிய ஒளியிலிருந்து சுலபமாக கிடைக்கும். ஒரு டம்ளர் பால், தினமும் குடித்து வரவும். வயதானவர்கள் இரவில் பாலை குடிக்க வேண்டும். அவித்த முட்டையும் கால்சியம் நிறைந்தது.
கீழ்க்கண்ட உணவுகளிலும் கால்சியம் உள்ளது. தினம் எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது அடைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளது.
1. வேர்க்கடலை (100 கிராம்)
2. வெல்லம் (50 கி)
3. பால் 250 மி.லி.
4. முட்டை (ஒன்று)
5. தயிர் (ஒரு கப்)
6. மோர் (ஒரு கிளாஸ்)
7. மீன் (200 கி)

வயதானவர்கள் கொள்ளை (ஒரு வாரத்திற்கு 100 கிராம் என்ற அளவில்)
சேர்த்துக் கொள்ள வேண்டும். முதல் நாள் ஊற வைத்த கொள்ளை மறுநாள் கொதிக்க வைத்து, உப்பு, சீரகம், கறிவேப்பிலை, வெங்காயம் இவற்றை தாளித்து உட்கொள்ளலாம். இரண்டு நாளுக்கு ஒரு முறை கடலை மாவு சப்பாத்தி சாப்பிடுவதும் எலும்பை வலுவாக்கும். முளைவிட்ட பச்சைப்பயிறை சாப்பிடலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum