தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கரும்புள்ளிகளை களைய

Go down

கரும்புள்ளிகளை களைய Empty கரும்புள்ளிகளை களைய

Post  meenu Fri Mar 01, 2013 12:32 pm

முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுவது என்பது இளம் வயது ஆண்களிலும், பெண்களிலும் ஏற்படக் கூடிய சர்வ சாதாரணமான ஒரு சருமப் பிரச்சனை. பருக்கள் வந்து ஆறிய பின்னர் முகத்தில் ஏற்படுகின்ற ஆழ்ந்த நிறமுடைய வடுக்களில் இருந்து இவை வேறுபடுகின்றன. இந்த கரும்புள்ளிகள் அழகைக் குலைக்கும் முகப் பருக்கள் தோன்றுவதற்கும் முக்கிய காரணமாக அமைகிறது. கரும்புள்ளிகளுக்கான மருத்துவ முறைகள் பற்றிப் பார்க்கப் போகும் முன்னர் அவை எவ்வாறு தோன்றுகின்றன. அவற்றை வராமல் கட்டுப்படுத்துவது எப்படி என்பன போன்ற விவரங்களை விளக்கமாக அறிந்து கொள்வது அவசியம்.
கரும்புள்ளி வரக் காரணம்
கரும்புள்ளிகள் சருமத்தில் ஏற்படும் சாதாரணமான பிரச்சனை தான் என்றாலும், பலருக்கு அதைக் கையாளும் வழி முறைகளைப் பற்றித் தெரிவதில்லை. மேலும் இவை தனிப்பட்ட ஒருவருடைய அடிப்படைச் சரும வகைப் பொறுத்தே தோன்றுவதால், இதை முற்றிலுமாகக் குணப்படுத்துவது என்பது சற்று சிரமமான காரியமாக உள்ளது. சருமத்தை முறையாகப் பேணிப் பராமரிப்பதன் மூலம் கரும்புள்ளிகள் ஏற்படுவதை ஓரளவு கட்டுப்படுத்தலாம் என்றாலும் கரும்புள்ளிகள் தோன்றுவதற்கான அடிப்படைக் காரணங்களை நம்மால் தவிர்க்க முடிவதில்லை.
சருமத்திற்கு எண்ணெய்ப் பசைத் தன்மையைத் தரும் செபச் சுரப்பிகளின் அளவின் மிகுந்த செயல்பாட்டின் காரணமாகவே கரும்புள்ளிகள் தோன்றுகின்றன. மூக்கின் வழியாக நாம் மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதைப் போன்றே சருமமும் அதிலுள்ள துளைகளின் வாயிலாகச் சுவாசிக்கின்றன. செபச்சுரப்பின் அதிகப்படியான செயல்பாட்டின் காரணமாக, மிகுதியாகச் சுரக்கும் எண்ணெய், சருமத் துளைகளை விரிவடையச் செய்து, அவற்றில் தங்கிச் சருமத்தைக் கடினமுறச் செய்கின்றன. திறந்த நிலையிலுள்ள சருமத் துளைகளில் தங்கிப் படிந்திருக்கும் எண்ணெய் அல்லது செபம் காற்றில் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து கரிய நிறத்திற்கு மாறி விடுவதாலேயே இது “கரும்புள்ளிகள்” என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன.
எண்ணெய்ப் பசைச் சருமம், இயல்பாகவே சுற்றுப்புறங்களில் உள்ள அழுக்கு, தூசி போன்றவற்றைத் தன்னகத்தே கவர்ந்திழுக்கக் கூடிய தன்மை பெற்றது. எனவே சருமத் துளைகளில் சென்று படிவதால் அவை மென் மேலும் சென்று விரிவடைந்து கொண்டே செல்கின்றன. இதன் காரணமாக எண்ணெய்ப் பசைச் சருமம் நாளடைவில் சொர சொரப்பாகவும், கடினமாகவும் ஆகி விடுகின்றன.
பருக்களும், கரும்புள்ளிகளும்
கரும்புள்ளிகள் தான் பின்னாளில் பருக்கள் வருவதற்கும் காரணமாக இருக்கின்றன. பருக்கள் தோன்றும் குழிகள் முன்னதாக கரும்புள்ளிகளாலேயே உருவாக்கப்பட்டவை என்கிற உண்மையின் மூலம் இதை நாமறியலாம்.
சருமத் துளைகள் முழுவதுமாக அடைபட்டுப் போகும் பொழுது எண்ணெய்ச் சுரப்பி, நுண்மத் தொற்றிற்கு எளிதில் ஆட்பட்டு பருக்களைத் தோன்றச் செய்கின்றன. நுண்மத் தொற்றின் பாதிப்பு நீண்ட நாட்களுக்கு அப்படியே நீடித்தால், அவை எண்ணெய் சுரப்பியின் உட்புறச் சுவற்றையும் சென்று தாக்கி, பருக்களை உண்டாக்குவதோடு மட்டுமன்றி, உட்புறச் சுவற்றை முழுவதுமாக அழித்து, அவ்விடங்களில் மாறாத தழும்புகளை உண்டாக்குகின்றன.
எனவே கரும்புள்ளிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம், பருக்கள் வராமல் தடுத்துக் கொள்ள முடியும் என்பது நமக்குத் தெளிவாகிறது. மேலும் கரும்புள்ளிகள் முகத்தில் மட்டுமின்றி, முதுகு, மார்பு, மற்றும் உடலில் எண்ணெய்ப் பசை மிகுதியாகச் சுரக்கும் பிற பகுதிகளிலும் தோன்றுகின்றன.
மருத்துவம்
சருமத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வது தான் இதன் முதல் படியாக உள்ளது. சருமத் துளைகளில் படிந்திருக்கும் எண்ணெய் பசையை நீக்குவதற்குச் சாதாரண சோப்பும், தண்ணீரும் மட்டும் போதாது. மெடிக்கேட்டட் சோப் மற்றும் வெது வெதுப்பான நீரால் முகத்தை தினசரி இருமுறை கழுவி வந்தால், அது சருமத்தின் எண்ணெய்ப் பசைத் தன்மையை மட்டுப்படுத்தி நுண்மத் தொற்றுக்கள் வருவதற்கான வாய்ப்புகளையும் தடுத்து விடுவதற்கு வகை செய்கிறது.
பொதுவாக சரும எழிலுக்கு சோப் உபயோகிப்பது குறிப்பாக முகத்திற்கு தவிர்க்க வேண்டியது. குறிப்பாக கரும்புள்ளி பிரச்சனைக்காக மூலிகை மருந்து சோப் சிறந்தது.
ஒவ்வொரு முறை சோப் போட்டு சருமத்தைக் கழுவும் போதும், சருமத்தின் அழுக்குகள் முழுவதுமாக நீக்கப் பெறும், வகையில் பல முறை நன்றாகத் தேய்த்துக் கழுவ வேண்டும். சருமத் துளைகளில் படிந்துள்ள எண்ணெய்ப் பசையை நீக்க, கிளன்சர்கள் பெரிதும் உதவுகின்றன. ரோஜா போன்ற மென்மையான பொருட்களுடன், சில வகை அழகு சாதனங்களையும் சேர்த்துத் தயாரிக்கப்படும் கிளன்சர்களை சருமத்தில் மிருதுவாகத் தடவிச் சில நிமிட நேரம் உலர விட்டு, பின் கழுவினால் சருமம் தூய்மையாகி விடும். கிளன்சர்கள் சருமத்தைத் தூய்மையாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல், கரும்புள்ளிகள் வராமலும் தடுத்து விடுகின்றன. மேலும் இவை சருமத்தை மென்மையாகவும் மழமழப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றன.
சருமத்தைக் கழுவி சுத்தம் செய்த பின், வெளிப்புறங்களிலுள்ள மாசுக்கள் சருமத்தின் மீது படியாதவாறு பாதுகாக்க வேண்டும். சந்தனப் பவுடர் அல்லது சந்தனம் அடங்கிய க்ரீம்கள் சிறந்த நுண்மக் கொல்லிகளாகச் செயல்படுகின்றன. இவை சருமத்தின் மேற்பரப்பில் ஒரு பாதுகாப்பு படலத்தை உண்டாக்கி, சருமத்தில் மாசு, தூசி போன்றவை படியாதவாறு காக்கிறது. இதனால் சருமத்தின் எண்ணெய்ப் பசைத் தன்மை கட்டுப்படுவதுடன், சருமமும் நெகிழ்ந்து ஈரப்பதமுடையதாகிறது. சுருக்கமாகச் சொன்னால் சந்தனப் பொருட்கள், சருமத்தின் எண்ணெய்ப் பசைக்கும், ஈரப்பதத்திற்கும் இடையே ஒரு சமன் தன்மையை உருவாக்க உதவுகின்றன.
கரும்புள்ளிகளுக்கு மாஸ்க்குகள்
கரும்புள்ளிகளைக் கட்டுப்படுத்துவதற்கும், அவை வராமல் தடுப்பதற்கும் மாஸ்க்குகள் மிகுதியும் துணை செய்கின்றன. சருமத்தின் அடி ஆழத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்க உதவும் ஓர் ஒப்பற்ற கிளன்சர்களாக மாஸ்க்குகள் விளங்குகின்றன. மாஸ்க்குகளைத் தினசரி பயன்படுத்துவதன் மூலம் சருமத் துளைகளில் செபம் தங்கிப் படிவது கட்டுப்படுவதுடன், அவை விரிவடைவதையும் தவிர்க்கலாம். மூலிகை மாஸ்க்குகளே சிறந்தவை.
கரும்புள்ளிகளுக்கு நிரந்தரமானத் தீர்வளிக்கும் வகையில் தற்போது ஸ்பெஷல் மாஸ்க் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கரும்புள்ளிகளுக்கு இந்த மாஸ்க் சிறப்பான பலன் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹெர்பல் பவுடருடன், தேன், யோகர்ட், மற்றும் கடல் பாசியிலிருந்து தயார் செய்யப்பட்ட லோஷன் போன்றவைகளால் இந்த மாஸ்க் உருவாக்கப்பட்டுள்ளது.
கரும்புள்ளிகளை, அழகு நிலையங்களில் சென்று தோண்டி எடுத்துக் கொள்ளலாம். ஸ்பெஷல் மாஸ்க்கின் உதவியுடன் கரும்புள்ளிகளை எளிதாக நீக்கி விடலாம். என்றாலும் கரும்புள்ளிகளை தனக்குத் தானே பிடுங்கிக் கொள்வதால் சருமத்திற்கு கெடுதல் ஏற்படக் கூடும். எனவே, தகுதியும், அனுபவமும் வாய்ந்த கலைஞர்களின் துணையுடன் கரும்புள்ளிகளைச் சிறந்த முறையில் நீக்கிக் கொள்ளலாம்.
முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை நீராவி முகர்தல் மூலம் நீக்கிக் கொள்ள முயல்வது தான் நடைமுறையில் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இச்செயல் மூலம் முகத்திலுள்ள சருமத் துளைகள் மேலும் விரிவடைந்து போவதைத் தவிர வேறு எந்த விதமான பிரத்யேகமான நன்மையும் கிடைப்பதில்லை. மேலும் நீராவி முகர்தலால் செபச் சுரப்பிகள் தூண்டப் பெற்று, அளவிற்கதிகமான செபத்தைச் சுரக்கச் செய்கிறது. எனவே கரும்புள்ளிகளை மிகுந்த சிரத்தையுடன், பொறுமையாகக் கையாள்வது அவசியமாக உள்ளது.
கரும்புள்ளிகளை நீக்குவதற்குக் தற்போது, உறிஞ்சியிழுக்கும் அடிப்படையில் புதிய முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சிகிச்சையில் கரும்புள்ளிகள் சருமத்தின் அடி ஆழத்திலிருந்து மேற்பரப்பிற்குக் கொண்டு வரப்பட்டு, பின்னர் அவை உறிஞ்சி இழுக்கப்படுகின்றன. இதன் மூலம் சருமத்திற்கு நேரக்கூடிய கெடுதல்களும், நோய்த் தொற்றிற்கு இலக்காகும் வாய்ப்பும் வெகுவாக மட்டுப்படுத்தப்படுகிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum