தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குளிர்கால மேனிப் பராமரிப்பு

Go down

குளிர்கால மேனிப் பராமரிப்பு Empty குளிர்கால மேனிப் பராமரிப்பு

Post  meenu Fri Mar 01, 2013 12:30 pm

குளிர்காலம் வரவேற்கத்தது. அதுவும் தமிழ் நாட்டில் குளிர் காலமே வருடம் முழுவதும் இருந்தாலென்ன என்று தோன்றும். வேனிற்கால புழுக்கமின்றி, மின் விசிறிகள் உதவியின்றி, அடிக்கடி காஃபி குடித்துக் கொண்டு வாழலாம்.
மார்கழி மாதப்பனி அதிகமானால் ஒரு வெள்ளி கூஜா நிறைய காஃபி சூடான முந்திரி பருப்பு பக்கோடா, பிடித்த புத்தகம் இவை கிடைத்தால் போதும்
ஆனால் குளிர்காற்று பலர் நினைப்பது போல், சர்மத்திற்கு நல்லதல்ல. ஏனென்றால் குளிர்காற்று உலர்ந்தது. ஈரப்பசை இல்லாதது. உடலின் குறிப்பாக முகம் ஈரப்பசையை எடுத்துவிடும். வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் சர்மம் பாதிக்கப்படும். உடலில் வாதம் அதிகரிக்கும்.
முன் பனிக் காலத்தை மார்கழி – தை மாதங்கள் ஹேமந்த ருது எனப்படும். பின்பனிக்காலம் மாசி – பங்குனி சிசிரம் எனப்படும். வடதிசை குளிர்காற்று உடலில் வறட்சியை உண்டாக்கும் இடங்கள் தோல், உதடு, மூக்கு இவைகளாகும். தமிழகத்தில் மார்கழி மாதத்தில் பகலில் மழையால் சூடு குறைந்து இரவில் பனியால் அதிக குளிரும் உண்டாகும். தை, மாசி மாதங்களில் பகலில் வெய்யிலின் கடுமையும், இரவில் குளிரும் இருக்கும்.
பனிக்காலத்தில் உடல் வறண்டு போகும். சுருக்கங்கள் ஏற்படும். உதடுகள் வெடிக்கும். தோல் வறண்டு செதில்கள் காணப்படும். தோல் வறட்சியால் சொறி, சிரங்கு, படை, நமைச்சல், உண்டாகலாம். தவிர குளிர் அதிகமாக நாம் குளிப்பதற்கு மிகச் சூடான சுடுநீரை பயன்படுத்துவோம். இது தோலுக்கு இன்னும் கெடுதல். சர்மத்தில் இருக்கும் கொஞ்ச நஞ்ச எண்ணப்பசையும் வெந்நீர் எடுத்து விடும். கூடிய வரை சூடு குறைவான நீரையே குளிக்க உபயோகிக்கவும். குளிக்க சோப்புகளை பயன்படுத்தாமல், மிருதுவான எண்ணை, பால் கலவைகளை உபயோகிக்கலாம். குளித்தவுடன் ஈரப்பசையை உண்டாக்கும். மாய்ஸ்சுரைஸ்சர்களை பயன்படுத்த வேண்டும்.
உணவைப் பொருத்த வரையில் குளிர்காலத்தில் பசி அக்னி அதிகமிருக்கும். சரகர் சொல்வது – ஹேமந்த ருதுவில் குளிர்காற்று உடல் உஷ்ணத்தை, குறைத்து ஜீரண அக்னியை அதிகரிக்கிறது. அதிக அளவு. கனமான உணவும் ஜீரணமாகிறது. பால் சார்ந்த உணவுகள், எண்ணை செறிந்த உணவுகள் ஹேமந்தருதுவில், கெடுதல் செய்வதில்லை. இதனாலேயே மார்கழியில் நெய் நிறைந்த வெண் பொங்கலும், தை மாதத்தில் சர்க்கரைப் பொங்கலும், வழக்கமாக செய்யப்படுகின்றன. கொழுப்பு நிறைந்த பொருட்களை உண்பதால் குளிர்காலத்தில் தோலுக்கு நல்லது.
குளிர்காலத்துக்கேற்ற, தோல் பாதுகாப்பதற்கான டிப்ஸ்
குளிர்காலங்களில் சோப்பை பயன்படுத்த வேண்டாம். சோப்பில்லாத பல வகை மூலிகை பொடிகள் கிடைக்கின்றன. வீட்டிலேயும் தயாரிக்கலாம்.
கடலை மாவு, பாசிப்பயறு மாவு இவற்றை சம அளவு எடுத்து, பாலுடன் சேர்த்து, பிசைந்து, உடலில் தேய்த்து குளிக்கலாம். பாலுக்கு பதில் ஆரஞ்சு பழத்தோலை காய வைத்து பொடியாக்கி கலக்கலாம்.
வெள்ளரி சாற்றில் கடுகெண்ணை, பன்னீர் சேர்த்து உடலில் தடவலாம்.
100 மி.லி. பாலில் 5 துளி ஆலிவ் எண்ணை, 8 துளி பன்னீர் சேர்த்து உடலில் தடவி 10 நிமிடம் கழித்து குளிக்கலாம்.
ஓட்ஸ் மாவுடன், பால்பவுடர், சம அளவுகளில் 1/2 கப் ஒவ்வொன்றும் கலந்து கொள்ளவும். நீங்கள் குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும்.
குளிக்கு முன் ஏதாவது எண்ணை நல்லெண்ணை, தேங்காய் எண்ணை, ஆலிவ் எண்ணை – இவை சிறந்தவை தடவி குளிப்பது எளிமையானது தோலுக்கு நல்லது. இந்த எண்ணை குளியலில் சீயக்காய் உபயோகிக்காமல் கடலை மாவு பயன்படுத்துவது உத்தமம். ஆலிவ் எண்ணை, நல்லெண்ணை மற்றும் கடுகு எண்ணை இந்த மூன்றையும் சம அளவு கலந்து உடலில் தேய்த்து குளித்தால் மேனி பட்டுபோல் மிருதுவாகும். வாரம் 2 முறையாவது எண்ணை குளியலை மேற்கொள்ளவும்.
எண்ணை குளியல் முடியாத போது, குளிக்கும் நீரில் சில சொட்டுகள் தேங்காய் எண்ணையை விட்டு குளிக்கலாம். யூடிகோலான் துளிகளையும் நீரில் விட்டு குளிக்கலாம்.
குளிப்பதற்கு, அதிக சூடான வெந்நீரை உபயோகிக்க வேண்டாம். வெதுவெதுப்பான நீரில் குளிக்க பழகவும்.
சோப் கட்டாயம் தேவைப்பட்டால் கிளிசரின் சோப்பை பயன்படுத்தலாம்.
முன்பு சொன்னபடி, குளிக்க சுமாரான சூடு உள்ள தண்ணீரை உபயோகிக்கவும். அதிக சூடான வெந்நீர் வேண்டாம்.
குளித்த பின் ஏதாவது நல்ல, தரமான, மாய்ஸ்சுரைஸர் கிரீமை தடவிக் கொள்ளவும்.
முழங்கால், முழங்கைகள், கைகள் இவைகள் குளிரினால் தோல் விரிந்து போகும். வாசலின், பெட்ரோலியம் ஜெல்லி, இவைகளை உபயோகிக்கலாம்.
உதடுகள் உலர்ந்து, வெடிப்புகள் உண்டாகும். இரவு படுக்க போகுமுன் வெண்ணை அல்லது பாலாடை தேய்த்து கொள்ளவும். தேங்காய் எண்ணை கிளைசரின் பன்னீர் – இவற்றை குழைத்து உதடுகளில் தடவிக் கொள்ளவும். ரோஜா இதழ்களை கசக்கி உதடுகளில் தடவலாம். தேனையும் உபயோகிக்கலாம்.
ஈரப்பசை கிரீம்கள் – குளிர்காலத்தில் ஈரப்பசையை உண்டாக்கும் மாய்ஸ்சுரைஸ்சர் கிரீம்கள் அவசியம் தேவைப்படும். உங்கள் சருமம் உலர்ந்ததாக இருந்தால் அதிகமாக ஈரப்பசை கிரீம்கள், லோஷன்கள் தேவை. எண்ணைப்பசை சர்மம் உள்ளவருக்கும் குளிர்காலத்தில் இந்த வகை கிரீம்கள் தேவை. இரண்டு வழியில் இந்த கிரீம்கள் வேலை செய்யும். புறத்தோலை மிருதுவாக்கும். தவிர உலர்ந்த குளிர்காற்று தோலிலிருந்து ஈரப்பசையை எடுத்து விடாமல் பாதுகாக்கும்.
மேனி பராமரிப்புக்காக அற்புதமான ஆயுர்வேத தயாரிப்புகள் கிடைக்கின்றன. பலவித மூலிகை தைலங்களும் கிடைக்கின்றன. குளிர்
பிரதேசங்களில் வசிக்கும் மேல் நாட்டவரே சர்ம பாதுகாப்புக்காக ஆயுர்வேத மூலிகை தயாரிப்புகளை நாடுகின்றனர். உதாரணம் இங்கிலாந்தின் அரசி – எலிஸபெத் அவர்கள் இவர் உபயோகிப்பது மூலிகை அழகு சாதனங்கள் தான்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum