தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சோகம் தரும் சோகை

Go down

சோகம் தரும் சோகை Empty சோகம் தரும் சோகை

Post  meenu Fri Mar 01, 2013 11:42 am

சோகை, குறிப்பாக சொன்னால், இரத்த சோகை, இந்தியாவில் 90 சதவிகித குழந்தைகள், பெண்களை பாதிக்கும் நோய். இதை நோய் என்று சொல்வதை விட ரத்தத்தில் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் ஹேமோகுளோபின் குறைபாடு என்று கூறலாம். உலகத்தில் 30 சதவிகித மக்கள் சோகையில் பீடிக்கப்படுகிறார்கள். இதில் 50 சதவிகிதம் இரும்புச் சத்து குறைபாட்டினால் ஏற்படும் சோகையால் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலும் இளம் பருவ மங்கையர்களே இரத்த சோகையினால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு இரத்த சோகையைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். ஆங்கிலத்தில் ரத்த சோகை அனீமியா எனப்படும்.
காரணங்கள்
இரும்புச் சத்து குறைபாடு – ஹேமோகுளோபினை உற்பத்தி செய்ய இரும்புச் சத்து இன்றியமையாத தேவை. உணவில் இரும்புச்சத்து இல்லாமல் போதல், அதிகரித்த இரும்புச்சத்து தேவை கர்ப்ப காலம், குழந்தைப் பருவம், மாதவிடாய் போன்ற காலங்களில் இவை தவிர கொக்கிப் புழுக்கள் தாக்கம் இவைகளெல்லாம் முக்கிய காரணங்கள். வயிற்றின் சுவற்றை கொக்கிப்புழுக்கள் சிதைத்து விடும். இதனால் இரத்த இழப்பு ஏற்படும். கொக்கிப்புழு தாக்கத்துடன், சத்தில்லா உணவும் சேர்ந்துவிட்டால், தீவிர இரத்த சோகை நிச்சயம் தாக்கும். நமது தேசத்தில், அதுவும் கிராமப்புறங்களில் இந்த இரண்டு முனை பாதிப்புகள் தான் சோகை ஏற்பட அடிப்படை காரணங்கள். தவிர கிராமங்களில் உணவை பொருத்த வரையில், பெண்களை விட ஆண்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பதால், பெண்களுக்கு போதுமான சத்துணவு கிடைப்பதில்லை. ஆண்களை விட பெண்களுக்கு அதிக இரும்புச் சத்து தேவை என்பதை உணர்வதில்லை.
ரத்த இழப்பு சோகை – விபத்து, அறுவை சிகிச்சை, வயிற்றுப் புண்களிலிருந்து கசியும் இரத்தப்போக்கு, மூல நோயால் வெளியேறும் இரத்தம், இவைகளால் ரத்தக் குறைவு ஏற்பட்டு சோகை உண்டாகும். ஹீமோஃபிலீயா என்ற ரத்தப் போக்கு வியாதி உள்ளவர்களுக்கு சாதாரண மனிதர்களை விட, அடிப்பட்டாலும், படாவிட்டாலும் அதிக இரத்தப் போக்கு ஏற்படும். இவர்களுக்கு சோகை உண்டாவது தவிர்க்க முடியாது.
ரத்த சம்மந்த வியாதிகளால் வரும் சோகை – இது இரத்த சிவப்பு அணுக்கள் அழிந்து போனால் ஏற்படும். நச்சு வேதிப் பொருட்கள், உடலின் நோய் தடுப்பு சக்தியின் தன்னிச்சை செயல்களால் திசுக்கள், சிகப்பு அணுக்கள் அழிக்கப்படுதல், மலேரியா போன்ற வியாதிகளில் செயல்படும் புல்லுருவி, ஒட்டுண்ணி, லுகேமியா எனப்படும் ரத்தப்புற்று நோய் – இவைகளால் சோகை உண்டாகும்.
கெடுதலான சோகை – இந்த வகை சோகை வைட்டமின் பி – 12 ன் குறைவதால் ஏற்படும். உணவில் இந்த வைட்டமின் குறைந்தால், வயிற்றில் கிளைகோ புரதம் சுரக்காது. இந்த சுரப்பு இல்லாவிட்டால், வைட்டமின் பி – 12 ஐ வயிற்றால் கிரகிக்க முடியாது. இதனால் குறையுள்ள சிகப்பு அணுக்களும், அசாதாரணமான விபரீதமான செல்களும் எலும்பு மஜ்ஜையில் உருவாகும்.
ஃபோலிக் அமிலமும், வைட்டமின் பி – 12 இவை இரண்டும்
செல்களில் இரண்டாக பிரிந்து ஏற்படும் வளர்ச்சிக்கு தேவையானவை. இவற்றில் ஒன்று குறைந்தால் மற்றொன்றும் குறையும். ஃபோலிக் அமில குறைபாடு, கெடுதலான சோகையை விபரீத செல்கள் பல்கிப் பெருகுதல் உண்டாக்கும். நரம்புகள் பாதிக்கப்படும். இந்த சோகை உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டிய அபாய நிலை.

அறிகுறிகள்
அதீத களைப்பு, சோர்வு, அசதி.
தோல் வெளிறிப் போதல் – நிறம் மங்குதல், முகச் சோகை.
உடற்பயிற்சியின் போது மூச்சு விட சிரமப்படுதல்.
தொற்று நோய்க்கு தடுப்பு சக்தி இல்லாமல் ஆளாகுதல்.
விரைவான நாடித்துடிப்பு.
ஆழமில்லா, மேலெழுந்த வாரியாக மூச்சு விடுதல்.
குறைந்த ரத்த அழுத்தம்.
புண்பட்ட நாக்கு.
முகத்தில் இளவயதிலேயே சுருக்கங்கள் ஏற்படுவது.
ஞாபக சக்தி குறைவு.
சிகப்பு இரத்த அணுக்கள்
சிகப்பு இரத்த அணுக்கள் திசுக்களுக்கு பிராண வாயுவான ஆக்சிஜனை கொண்டு செல்லும் பணியை செய்பவை. நமது உடலில் பாயும் இரத்தத்தில் 40 சதவிகிதம் சிகப்பு அணுக்கள் இருக்கின்றன. நம் எலும்பு மஜ்ஜைகளில் தினசரி 100 மில்லியன் புதிய செல்கள் உருவாகின்றன. இந்த அளவு உண்டாக, நமக்கு புரதம், இரும்பு, ஃபாலிக் அமிலம், பி – 12 போன்ற தாதுப் பொருட்கள், வைட்டமின்கள் தினமும் தேவை. ஒரு சிகப்பு இரத்த அணுவின் ஆயுட் காலம் 120 நாட்கள், இதற்கு பின் அவை அழிக்கப்பட்டு புதியவை உண்டாகின்றன.
இரத்தத்தில் 12 லிருந்து 18 கிராம் / டெசி. லிட்டர் ஹேமோகுளோபின், சாதாரணமாக இருக்கும். ஒரு மில்லி மீட்டர் இரத்தப் பரப்பில், 5 மில்லியன் சிகப்பு அணுக்கள் இருக்கும். ஒருவருக்கு, ரத்தப் பரிசோதனையில், டெசிலிட்டருக்கு 12 கிராம் ஹேமோகுளோபின் இருக்க வேண்டும். இதற்கு குறைந்தால் அவருக்கு இரத்த சோகை என்று அர்த்தம்.
பெண்களின் கர்ப்ப கால சோகை
கர்ப்ப காலங்களில் பெண்களின் உடலில் உள்ள இரத்தத்தின் கொள்ளளவு 50 சதவிகிதம் அதிகமாகும். எனவே அவர்களுக்கு இந்த சமயத்தில் இரும்பு சத்து தேவை இரட்டிப்பாகும். உண்மையில், கர்ப்பம் இல்லாவிட்டாலும், பெண்களுக்கு ஆண்களை விட அதிக அயன இரும்பு சத்து தேவை. கர்ப்ப காலத்தில் போதிய இரும்பு சக்தி கிடைக்காவிடில், சிக்கல்கள் ஏற்படலாம்.
இரும்புச் சத்து தேவைகள்
தினசரி ஆணுக்கு 10 மி.கிராமும், பெண்களுக்கு 12 மி.கிராமும் இரும்புச்சத்து தேவை. மாதவிடாயின் போது ஏற்படும் இரத்த இழப்பால் பெண்களுக்கு அதிக இரும்புச்சத்து தேவைப்படுகிறது.
ஆயுர்வேதம் சொல்வது
சரகஸம்ஹிதையில் மண் உண்ணுவது சோகைக்கு அறிகுறியாக சொல்லப்படுகிறது! இப்போதும் வெறும் அரிசியை விரும்பி வாயில் போட்டுக் கொண்டால் “சோகை” என்கிறோம். பித்த தோஷ குறைபாடுகளால் சோகை வருகிறது என்கிறது ஆயுர்வேதம். சோகை மட்டுமில்லாமல், காமாலையும், இதர “வெளிறி மங்கிய” அறிகுறிகளும் “பாண்டுரோகம்” எனப்படும் பிரிவில் ஒட்டு மொத்தமாக, ஆயுர்வேதத்தில் சொல்லப்படுகின்றன. மகாபாரதத்தின் ஒரு முக்கிய அரசரான “பாண்டு” வெளிறிய நிறமுடன் பிறந்ததால், அவர் பெயரில் இந்த வியாதிகள் குறிப்பிடப்பட்டன! பாண்டு அரசர் ஒரு வேளை இயற்கையான வெளிறிய தோலுடன், (நிறமி கோளாறுகளால்) பிறந்திருக்கலாம்! நிறக்குறைவை வைத்தே ஆயுர்வேத் சோகை, காமாலை வியாதிகளை விவரிக்கிறது.

வீட்டு மருந்துகள்
முயல், ஆடு இவற்றின் ஈரல்கள் – லேசாக சமைக்கப்பட்டவை சோகையை போக்கும்.
பழரசங்கள், இனிப்பு சுவையுள்ள மாம்பழங்கள், பால், மாமிச சூப், பச்சை காய்கறிகள், கீரைகள் – இந்த உணவுகள் சோகையை போக்கும். முருங்கை கீரை, இரும்புசத்து நிறைந்தவை. எனவே வாரம் ஒரு முறை முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
பீட்ரூட்டில் அதிக இரும்புச்சத்து உள்ளது. இரத்த சிகப்பு அணுக்கள் உற்பத்தி செய்ய உதவுகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கும், இளவயது யுவதிகளுக்கு பீட்ரூட் சாறு சோகையை குறைக்கும்.
சமைத்த வெந்தயக்கீரை லெட்டூஸ் கீரை அனீமியாவை போக்கும்.
எல்லா கீரைகளும் இரும்புச்சத்து செறிந்தவை அதுவும் பசலைக் கீரையில் அதிக இரும்புச்சத்து உள்ளது.
பாதாம் பருப்பில் இரும்பு, வைட்டமின்கள் மட்டும் இல்லாமல், செம்பும் இருக்கிறது. செம்பு ஹேமோகுளோபின் உற்பத்தியை ஊக்குவிக்கும். ஏழு பாதாம் பருப்புக்களை வெந்நீரில் 2 மணி நேரம் ஊற வைத்து, பின் தோல்களை உரித்துக் கொள்ளவும். இவற்றை அரைத்து அந்த கூழ் பசையை தினமும் காலையில் மூன்று மாதங்களுக்கு சாப்பிட்டு வரவும்.
கறுப்பு எள் இரும்புச்சத்து நிறைந்தது. இதில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அரைத்து, வடிகட்டி, சர்க்கரை சேர்த்த பாலுடன் அருந்தவும்.
தேன் அயச்சத்து நிறைந்தது. சோகைக்கு மருந்து.
பூசணிக்காய் இரத்த இழப்பு, சிறுநீரில் ரத்தம் போதல் இவற்றை கண்டிக்கும். எனவே சோகை வராமல் தடுக்கப்படுகிறது.
வெங்காயமும் சோகைக்கு மருந்தாகும்.
பேரிச்சம்பழம், வெல்லம் இவைகள் சோகையை போக்கும்.
ஆயுர்வேத மூலிகைகள்
நெல்லிக்காய் – அமிருதம் எனப்படும் வைட்டமின் சி நிறைந்தது. இதனால் உடல் இரும்புச்சத்தை கிரகிப்பது சுலபமாகிறது. தவிர நெல்லிக்காய் இரத்த சிகப்பு அணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. உலர்ந்த நெல்லிக்காய் சோகைக்கு நல்ல மருந்து ரத்தத்தில் ஹேமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்யும்.
திராட்சை – குளிர்ச்சி, உடல் பலவீனத்தை போக்கும். ரத்தத்தை பெருக்கும்.
அஸ்வகந்தா-அமுக்கிராகிழங்கு – டானிக், நரம்புகளை பலப்படுத்தும். ஆண்மை பெருக்கி, உடல் பலத்தை அதிகரிக்கும்.
நிலத்துத்தி – பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் வெள்ளைபடுதல் இவற்றை போக்கும்.
சதவாரி – தண்ணீர் விட்டான் – பசியை தூண்டும். டானிக் உடல் சக்தியை வளர்க்கும். மூளைக்கும் நல்ல டானிக் சத்துக்கள் நிறைந்தது.
அசோகா – குருதிப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் சமயங்களில் அதிக உதிரபோக்கு ஏற்பட்டால் அசோகம் அதை நிறுத்தும்.
பூனைக்காலி – உதிரப்போக்கை நிறுத்தும். ஆண்மையை பெருக்கும். நரம்பு டானிக்.
நீர்முள்ளி- சிறுநீர் பெருக்கி, உடல் சோர்வை போக்கி உடல் ஊட்டத்தை உண்டாக்கும்.
முக்கரட்டை – குளிர்ச்சி, சோகைக்கு மருந்து.
இதர ஆயுர்வேத மருந்துகள்
யஸ்கிருதி, தாத்ரீ அரிஷ்டம், நவாயஸ சூரணம், துக்த வடீ, லோஹரசாயனம், மண்டூரவடகம், சிலாஜத்வாதி லோஹம், தாப்யாதி லோஹம், லோஹபஸ்ம, மண்டூர பஸ்ம, ஸ்வர்ணமாஷிக பஸ்ம, தாம்ர பஸ்ம, காஸீஸ பஸ்ம.
முக்கிய எச்சரிக்கை
இரும்புச்சத்து, டானிக்காகவோ இல்லை உணவுகளின் மூலம் எடுத்துக் கொள்ளும் போது, கூடவே வைட்டமின் ‘சி’ யையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் ‘சி’ இரும்புச்சத்தை கிரகிக்க, சூரணம் செய்ய உதவும்.
அதிக அயச்சத்து ஆபத்து. எனவே அதிகமாக இரும்பு டானிக்குகளை உபயோகிக்க வேண்டாம். கல்லீரல் பாதிக்கப்படும். மலச்சிக்கல், வயிற்றுவலி, தலை வலி இவை உண்டாகலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி, தேவையான அளவு இரும்புச் சத்தை எடுத்துக் கொள்ளவும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum