தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முதுகெலும்பு மாற்று அறுவை சிகிச்சை சாத்தியமா?

Go down

முதுகெலும்பு மாற்று அறுவை சிகிச்சை சாத்தியமா? Empty முதுகெலும்பு மாற்று அறுவை சிகிச்சை சாத்தியமா?

Post  ishwarya Thu Feb 28, 2013 2:11 pm

உடலும் மனிதனும் ஒருங்கிணைந்தால் தான் மனிதன் ஆரோக்கியமாக வாழமுடியும். பழங்காலங்களில் உடல் உழைப்பு பிரதானமாக இருந்தது. இப்போது அப்படி இல்லை அடுத்த தெருவுக்கு செல்வதென்றால் கூட வாகனம் பயன்படுத்தும் நிலை. நடை என்பதே பலருக்கு மறந்து போய்விட்டது. குனிந்து நிமிர்ந்து பல வேலைகளை செய்தவர்களுக்கு இன்று வாழ்வு என்பது இயந்திரத்தனமாக மாறிவிட்டது. இதன் காரணமாக பல நோய் தாக்கங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கும் முதுகு தண்டு வட பாதிப்பு மற்றும் முதுகுவளைவு சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகிறது. ஆர்த்தோ ஒன் மருத்துவமனை முதுகுதண்டுவடம் மற்றும் வளைவிற்கான சிறப்பு மருத்துவ நிபுணர் ஈஸ்வர் வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.

முதுகு தண்டுவடம் பாதித்து இருக்கிறது என்பதனை எதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடியும்? இதற்கான அறிகுறிகள் என்ன?

அதிகப்படியான முதுகுவலி, இடுப்பு வலி, கால் மரமரப்பு, போன்றவைதான் அடிப்படை அறிகுறிகள். இந்த வலிகள் தொடர்ந்து பல நாட்கள் இருந்தால் முதுகு தண்டுவட பாதிப்பு இருப்பது என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

தாய் வயிற்றில் கருவான எத்தனையாவது நாளில் சிசுவுக்கு முதுகெலும்பு உருவாகும் ? முதலில் எப்படி தோன்றி படிப்படியாக வளரும்? முதுகெலும்பின் டிஸ்குகள் மற்றும் அதன் கட்டமைப்பு என்ன?

கரு உருவாகி மூன்று மாத காலங்களில் குழந்தைகளின் உறுப்புகள் ஒவ்வொன்றாக வளர ஆரம்பித்து விடும். முதலில் முதுகெலும்பு உருவாகி திறந்தபடி இருக்கும் படிப்படியாக அப்பகுதி மூடிக்கொள்ளும்.

தொப்பை அதிகமாக உள்ளவர்களுக்க முதுகு தண்டுவட வளைவு ஏற்படுகிறது இதற்கு என்ன காரணம்?

தொப்பை அதிகமாக உள்ளவர்களுக்கு உடல் அமைப்பு மாற்றங்கள் இருக்கும். தொப்பையின் எடை உடலை முன்பகுதிக்கு இழுப்பதால் முதுகு தண்டுவட வளைவில் தேய்மானம் அதிகமாக ஏற்படுகின்றது. எடையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது அவசியம். வயிற்று பகுதிகளில் சுற்றியுள்ள கொழுப்புகளை கரைக்க உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

முதுகு தண்டுவட பிரச்னைகளுக்கு நவீன சிகிச்சைகள் பற்றி கூறுங்கள்?

இந்த பிரச்னைகள் 90 சதவீதம் உடற்பயிற்சி மற்றும் மருந்துகள் மூலம் சரிசெய்து கொள்ளலாம். 5 முதல் 6 சதவீதத்தினருக்கே அறுவை சிகிச்சை செய்யவேண்டிய தேவை இருக்கும். மைக்ரோஸ்கோப் முதுகு தண்டுவட சிகிச்சை, எண்டோஸ்கோப் முதுகுதண்டுவட சிகிச்சை, லேசர் சிகிச்சை போன்றவை தற்போது பின்பற்றப்படும் முறைகள்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது பரவலாக உள்ளது. அதன் படி முதுகெலும்புகளை எடுத்து எலும்பு வங்கிகளில் சேகரித்து பின்பு அறுவை சிகிச்சை மூலம் பொறுத்த முடியுமா?

எலும்பு வங்கிகளில் எலும்புகள் சேமித்து வைக்கப்படுகிறது. ஆனால் முதுகெலும்புகள் சேமிக்கப்படுவதில்லை. மேலும் செயற்கை டிஸ்குகளை பயன்படுத்தி டிஸ்க் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால் முதுகெலும்பு மாற்று அறுவை சிகிச்சை இதுவரை செய்யப்படுவதில்லை. அதேபோல் தண்டுவட பாதையோ, தண்டு வடமோ வேறொருவரிடம் இருந்து மாற்றாக எடுத்து வைக்ககூடிய சாத்திய கூறுகள் கிடையாது.

முதுகெலும்பின் அடர்த்தி குறைவு மற்றும் அதை சார்ந்த பிரச்னைகளை வலி வரும் முன்பே கண்டுபிடித்து சரிசெய்ய முடியுமா?

வலி என்பதே பல்வேறு பிரச்னையின் அறிகுறிகள். வலி வந்தால் தான் நாம் மருத்துவர்களை அணுகுகிறோம்.

மேடு, பள்ளம் நிறைந்த சாலைகளில் வாகனங்கள் ஓட்டுவதாலும், தொடர்ந்து அதிக தூரம் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுவதால் முதுகு தண்டுவட பாதிப்பு வருமா? இதனை தவிர்ப்பது எப்படி?

இது அன்றாட வாழ்வில் அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்னை இதை தவிர்க்க முடியாது. முதுகு வலி வருவதால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூற முடியாது. மருத்துவ பரிசோதனை முடிவில் தான் நமக்கு அதை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள முடியும்.

முதுகெலும்பின் அமைப்பில் ஆண்- பெண் வித்தியாசம் ஏதேனும் உண்டா?

முதுகெலும்பின் அமைப்பில் ஆண் பெண் வித்தியாசம் என்று ஏதும் இல்லை ஆனால் முதுகு வளைவு ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு அதிகமாக இருக்கும். இந்த பாதிப்பு ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு அதிகமாக உள்ளது.

கர்ப்பம், பிரசவங்களுக்கு தகுந்த படி முதுகெலும்பில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமா?

கர்ப்பம் மற்றும் பிரசவ காலங்களில் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கும். இதனால் சில மாற்றங்கள் இருக்கலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum