முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
Page 1 of 1
முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
மேற்கத்திய நாடுகளில் உள்ள மக்களை விட, ஆசியாவிலும், மத்திய கிழக்கிலும், உள்ள மக்கள் தாங்கள் மூட்டுகளை அதிகம் மடக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றனர்.
குறிப்பாக உணவு உண்ணும் முறைகள், பிரார்த்தனை முறைகள் ஆகியவற்றைக் கூறலாம். ஆகவே இந்தியா, ஜப்பான் மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள நோயாளிகளைப் பொருத்தவரை, முழுவதுமாக மூட்டை மடக்கி பயன்படுத்துவதுதான், மூட்டு மாற்று அறுவை சிகிச்சையின் முன் நிபந்தனையாக உள்ளது.
தொடர்ந்து முழங்காலிட்டு உட்காருதல், நன்றாக நீட்டி மடக்குதல், தரையில் உட்காருதல் மற்றும் கால்களை மடித்து உட்காருதல் ஆகியவை மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு வருபவர்களுக்கு தினசரி தேவையாக இருக்கிறது. ஆகவே இத்தகைய தேவைகளை நிறைவேற்றக் கூடிய மூட்டு மாற்று அறுவை சிகிச்சைதான் தற்போது தேவைப்படுகிறது.
மூட்டுகளுக்குரிய பொருத்தமான செயற்கை உறுப்புகள் எத்தகைய அசைவுகளுக்கும் ஈடுகொடுத்து உறுப்புகளுக்கு நன்றாக வளையக் கூடிய சக்தியை கொடுத்து, நன்றாக தரையில் உட்காரவும், கால்களை மடித்து உட்காரவும், வழிவகை செய்கின்றன. இந்த செயற்கை மூட்டு 155 டிகிரி வரை வளையும் தன்மை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக 110 டிகிரி வரை வளைவைத் தாங்கும் விதத்திலேயே மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வந்தன.
நோயாளிகளை பொருத்தவரை அவர்களுக்கு விருப்பமான நடவடிக்கைகள் மற்றும் அவர்களது கலாச்சார பின்னணியின் அடிப்படையில் மூட்டு எவ்வளவு தூரம் வளைய வேண்டும் என்ற தேவை உருவாகிறது. பல தினசரி நடவடிக்கைகளுக்கு 125 டிகிரிகளுக்கு மேல் மூட்டை வளைக்க வேண்டியுள்ளது. உதாரணத்துக்கு படிக்கட்டுகள் ஏறுவதற்கு 75 முதல் 140 டிகிரி வரை இயக்கமும், நாற்காலியில் உட்கார மற்றும் மறுபடி எழுந்து நிற்க 90 முதல் 130 டிகிரி வரை இயக்கமும், தோட்ட வேலைகள், கோல்ஃப் விளையாட்டு, பிரார்த்தனைக்காக மண்டியிடுதல் ஆகிவற்றிற்கு 130 டிகிரி முதல் 150 டிகிரி வரை மூட்டுகள் மடங்குவது அவசியமாகிறது.
ஆகவே முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு போதிய ஃபிசியோதெரபி பயிற்சிகள் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொண்டால், தங்களுடைய பழைய சுறுசுறுப்பு வாழ்க்கையை ஒரு நோயாளியால் பெற முடியும். பொழுதுபோக்கு மற்றும் மத சம்பந்தமான விஷயங்களுக்காக மூட்டை முழுவதுமாக மடக்கி, நீட்டி பயன்படுத்த முடியும். முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு தங்களுடைய பழைய வாழ்க்கையை பெரும்பாலான நோயாளிகள் வாழ விரும்புகின்றனர். அவர்கள் தங்கள் லட்சியத்தை தான் அடைய இந்த மூட்டுதான் சரியான பதிலாகும்.
எந்த ஒரு அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய வெற்றிக்கும் மறு வாழ்வு நடவடிக்கைகள் முக்கியமானவையாகும். அறுவை சிகிச்சை முடிந்தவுடனேயும், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும்போதும், மறு வாழ்விற்கான தீவிர பயிற்சிகளை மருத்துவர் பரிந்துரைப்பார். வீடு திரும்பியவுடன் ஒரு ஃபிசியோதெரபிஸ்டை நீங்கள் உடனே சென்று பார்க்க வேண்டுமென்று மருத்துவர் ஆலோசனை வழங்குவார். அவர் நீங்கள் இழந்த பலத்தையும், சீரான தன்மைகளையும், பல்வேறு உடல் இயக்கங்களை மீண்டும் பெற உதவிபுரிவார். அறுவை சிகிச்சை வெற்றி பெற நோயாளி சீராக வீட்டு உடற்பயிற்சிகளை மேற்கொள்வதும், மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கு தன்னை உட்படுத்திக் கொள்வதும் மிகவும் அவசியமான ஒன்று.
பொதுவாக 55 வயதாகும்போது ஆஸ்டியோ ஆர்த்திரிட்டிஸ் நோய் துவங்குகிறது. மருத்துவர் பரிசோதித்தப் பிறகு எக்ஸ்-ரே, இரத்தப் பரிசோதனை ஆகியவற்றின் மூலம் எத்தகைய ஆர்த்திரிட்டிஸ் நோய் என்பது கண்டுபிடிக்கப்பட்டு அதற்கேற்ற சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. எத்தகைய சிகிச்சைகளும் பயனளிக்காதபோது நோய் முற்றிய ஆர்த்திரிட்டிஸ் நோயாளிகளுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முழு திருப்தியை அவர்களுக்கு அளிக்கிறது.
மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் பழுதடைந்த மூட்டு பாகம் அதாவது தேய்ந்து போன குருத்தெலும்பு, சிறப்பு உபகரணங்களால் பிரித்தெடுக்கப்பட்டு, அதற்கு பதிலாக செயற்கை மூட்டு எலும்பு சிமெண்ட் மூலம் பொருத்தப்படுகிறது. இந்த மூட்டு உயர்வகை உலோகத்தால் ஆனது. வெண்ணிற உலோக வகையிலான குருமச் சேர்மானமும், தகர் வியப்புடைய வெள்ளி நிறம் வாய்ந்த உலோக வகையாலும் மற்றும் ஒரு வித சிறப்பு பிளாஸ்டிக்காலும் அதி நவீன உயர்வகை மாலிகியூலர் வெயிட் பாலிதிலீனாலும் இந்த செயற்கை மூட்டு செய்யப்பட்டுள்ளது. மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு நோயாளிகளுக்கு வலியிலிருந்து விடுதலை கிடைக்கிறது. நன்றாக, சுயமாக நடக்க முடிகிறது. வலியின்றி முழங்கால்களை நீட்டி மடக்க முடிகிறது. முக்கியமாக நல்ல தரமான வாழ்க்கையை இவர்கள் பெற முடிகிறது.
இந்தியாவின் சமூக மற்றும் மத சம்பிரதாயங்களின் பின்னணியில் பார்த்தால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையின் பாதகமான அம்சமாக பின் விளைவாக மூட்டை வளைத்து உட்காருவது குறைந்து போனதும், நோயாளி கால்களை குறுக்கே போட்டு உட்கார முடியாமல் போனதும் கருதப்படுகிறது. செயற்கை மூட்டின் வடிவமைப்பும் அறுவை சிகிச்சை தொழில் நுட்ப முறைகளும் இதற்கு காரணங்களாகும்.
உலகம் முழுதும் ஆர்த்திரிட்டிஸ் இன்று ஒரு பரவலான பிரச்சனையாக உள்ளது. உலகம் முழுதும் மனிதர்கள் முடமாகிப் போவதற்கு இதுவே முக்கிய காரணமாகவும் இருக்கிறது. எலும்புகளின் மேல் பாகத்தில் உள்ள குருத்தெலும்பு தேய்ந்து போவதற்கு ஆர்த்திரிட்டிஸ் என்று பெயர். இந்த குறுத்தெலும்புதான் எலும்பு வளர்ந்து முழுமையடையவும், மூட்டுகள் எத்தகைய உரசலுமின்றி அசையவும் வழிவகை செய்கிறது. மீண்டும் வளரும் தன்மை இந்த குருத்தெலும்புக்கு இல்லாததால், மூட்டுகளில் தொடர்ந்து வலி நீடிக்கிறது. இந்த நிலை அடுத்த பல கட்டங்களுக்குச் செல்லும் போதுதான் வலி, வீக்கம், நடக்க முடியாமை, மூட்டுக்களை மடக்குவதில் அதிக சிரமம், கால்களை சம்மணம் இட்டு உட்கார முடியாமை ஆகியவை உருவாகின்றன.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மூச்சுக்குழல் மாற்று அறுவை சிகிச்சை?
» மூச்சுக்குழல் மாற்று அறுவை சிகிச்சை?
» மூச்சுக்குழல் மாற்று அறுவை சிகிச்சை?
» முதுகெலும்பு மாற்று அறுவை சிகிச்சை சாத்தியமா?
» பிரிட்டனின் முதலாவது கை-மாற்று அறுவை சிகிச்சை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum