`ஏமாற்றி பாலுறவு கொள்வதும் பலாத்காரமே'
Page 1 of 1
`ஏமாற்றி பாலுறவு கொள்வதும் பலாத்காரமே'
பாலியல் பலாத்காரம் என்பது பெருகி விட்ட இந்தக் காலக்கட்டத்தில், ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, ஏமாற்றி அப்பெண்ணுடன் உடலுறவு கொண்டாலும் அது பலாத்காரத்திற்கு ஒப்பானது தான் என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பை வெளியிட்டுள்ளது.
இதுபற்றிய விவரம்: பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா ஸ்டேட் வங்கியில் பணிபுரியும் பூபிந்தர் சிங் என்பவர் தனக்கு திருமணம் ஆகிவிட்டதை மறைத்து மஞ்சித் கவுர் என்ற பெண்ணைக் காதலித்தார். இவருக்கு ஏற்கனவே மனைவியும் குழந்தைகளும் உள்ளனர்.
மஞ்சித் கவுரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் உடல் உறவு கொண்டார். இதன் விளைவால் மஞ்சித் கவுருக்கு ஒரு குழந்தை பிறந்தது.
அதன் பிறகுதான் பூபிந்தர் சிங்கிற்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்த உண்மை மஞ்சித் கவுருக்கு தெரியவந்தது.
இதையடுத்து பூபிந்தர் சிங் மீது செசன்ஸ் நீதிமன்றத்தில் மஞ்சித் கவுர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த செசன்ஸ் நீதிமன்றம், பூபிந்தர் சிங்குக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
தனது தண்டனையை எதிர்த்து, பூபிந்தர் சிங் பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, தண்டனை 3 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. அதோடு ரூ. 1 லட்சம் அபராதத்தையும் உயர்நீதிமன்றம் விதித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து பூபிந்தர் சிங், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததன் பேரில், நீதிபதிகள் அரிஜித் பசாயத், பி.சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து தண்டனையை உறுதி செய்தனர்.
தனக்கு திருமணம் ஆகவில்லை என்று பொய் கூறியோ அல்லது திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்தோ ஒரு பெண்ணுடன் உடல் உறவு கொள்வதும் பலாத்காரம்தான் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஒலிம்பிக் நிறைவில் `பாலுறவு திருவிழா'
» உடல் நலக்குறைவால் பாலுறவு நாட்டம் குறைவு
» வயதானாலும் பாலுறவு?
» பாலுறவு பற்றிய நூல்கள்
» ஆண்டுகள் பலவாயினும் பாலுறவு...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum